Contact Us

Name

Email *

Message *

Tuesday, 14 July 2015

Soundarya Lahari - Sloka: 16


Beneficial Results: 
வேதாகம ஞானம் Erudition, Knowledge of Vedas and Shastras
Knowledge of various languages and immunity from evil effects of spirits.


कवीन्द्राणां चेतः कमलवन-बालातप-रुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चि-प्रेयस्या-स्तरुणतर-श्रृङ्गर लहरी-
गभीराभि-र्वाग्भिः र्विदधति सतां रञ्जनममी ॥ १६ ॥

அருண மூர்த்தி [வேதாகம ஞானம்]

கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப-ருசிம் 
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் |
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ || 16 ||

அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள். அன்னையைப் பணியும் எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யெளவன சிருங்கார ரஸத்தின் பிரவாகம் போன்ற சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள்.

முந்தைய ஸ்லோகத்தில் வெண்மை நிறத்தினளாக அன்னையை கூறிய ஆச்சார்யார், இங்கு சிவப்பு நிறத்தவள் என்கிறார். அதுவும் எப்படி அருணோதய சூர்யன் போன்ற, அதாவது சூரியன் உதிக்கும் போது வரும் சிவந்த நிறமாம். இதைத்தான் 'உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்' என்கிறார் அபிராமி பட்டர். வெண்மை எப்படி சத்வ குணமோ அது போல சிவப்பு ரஜோ குணத்தை குறிப்பது. ஏன் சிவப்பு என்பது இங்கு ரஜோ குணத்தை குறிக்க வேண்டும்?. ஏனென்றால் பின்வரும் வரியில் அன்னை சிருங்கார ரஸத்தை தருவதாக கூறுவதால். சிருங்கார ரஸம் என்பதும் ரஜோகுணத்தை குறிப்பதுதான். 'அருணாம் கருணா-தரங்கிதாஷாம்' என்றுதான் அன்னையின் தியான ஸ்லோகமே ஆரம்பிக்கிறது.

ஆமாம்! இப்படி லலிதையின் வர்ணமான சிவப்பினை கூறி, உடனேயே விரிஞ்சி-ப்ரேயாஸ் என்று சரஸ்வதியை குறிக்க காரணம்?. அருண சரஸ்வதி என்று அன்னைக்கு ஒரு ரூபம் உண்டு. அந்த ரூபத்தில் அன்னை காமாக்ஷி போல பாசாங்குசமும், தனுர்-பாணமும் நான்கு கைகளில் ஏந்தி, இன்னும் நாலு கைகளில் ஸரஸ்வதிக்கு உரிய அஷமாலை, புஸ்தகம், வர-அபயம் கொண்டும் இருக்கிறாளாம். அந்த ரூபத்தையே இங்கு மறை பொருளாக சொல்லியிருக்கிறார்.

கவீந்த்ராணாம் - கவியரசர்களின்; சேத: கமல வன-பால ஆதப ருசிம் - சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியனாய் பிரகாப்பதால்; அருணாம் ஏவ (அருணா மேவ) - அருணா என்று பெயர் பெற்றவளும்; பவதீம் - உன்னை; பஜந்தே - பூஜிக்கிறவர்கள்; விரிஞ்சி ப்ரேயஸ்யா: - ப்ரம்ம பத்னியான சரஸ்வதியின்; தருண-தர - செழிப்பான; ச்ருங்கார லஹரி - சிருங்கார ரஸ பிரவாஹம்; கபீராபி: - கம்பீரமான; வாக்பீ - வாக்குகளால்; ரஞ்ஜனம் - மகிழ்ச்சி; விதததி - அளித்தல்

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 6, 8, 21, 43

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • கலாலாபா 
  • காவ்யகலா 
  • ஸர்வாருணா
  • வாக்வாதிநீ 
  • ப்ரஹ்மாணீ
  • சாரதாராத்யா
  • சதுர்வக்த்ர மநோஹரா
  • காவ்யாலாபவினோதிநீ
  • ரஸஜ்ஞா 
  • ரஸசேவதி:
  • ச்ருங்கார ரஸ ஸம்பூர்ணா

kavīndrāṇāṃ cetaḥ kamalavana-bālātapa-ruciṃ
bhajante ye santaḥ katicidaruṇāmeva bhavatīm |
viriñci-preyasyā-staruṇatara-śrṛṅgara laharī-
gabhīrābhi-rvāgbhiḥ rvidadhati satāṃ rañjanamamī || 16 ||

She who is the purple luster of the dawn,
To the lotus forest like mind,
Of the kings of poets of the world,
And thus called Aruna-the purple colored one,
Creates happiness in the mind of the holy,
With tender passionate wave of words ,
(Of Saraswathi the darling of Brahma,)
Which are royal and youthful.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:16, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.915-920 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment