Contact Us

Name

Email *

Message *

Friday 17 July 2015

அபிராமி அந்தாதி - பாடல் 57 (Abhirami Andhadhi - Verse 57)


57. வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம் 
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் 
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும் 
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே?

ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!). 

'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.

ERADICATE POVERTY

Aiyan alandhabadi iru naazhi kondu, andam ellaam
uyya aram seyum unnaiyum potri, oruvar thambaal
seyya pasundhamizhp paamaalaiyum kondu senru, poyyum
meyyum iyambavaiththaay: idhuvo, un_dhan meyyarule?

Abhirami! You are the Goddess ‘Kamakshi' who has received two measures of paddy grains offered to you by my father Shiva and with that paddy grains, you are performing charities so that the world could be saved from sins. Oh! Mother with your melodious Tamil, make me sing your praise and at the same time you make poets sing about mortals merely for pecuniary benefits. Is this your true grace?



Reference:
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html

No comments:

Post a Comment