Contact Us

Name

Email *

Message *

Showing posts with label உபதேசம். Show all posts
Showing posts with label உபதேசம். Show all posts

Thursday, 12 March 2015

Dying an Easy Death


Mahamrutyunjaya Mantra
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॥

Om Try-Ambakam Yajaamahe Sugandhim Pusstti-Vardhanam
Urvaarukam-Iva Bandhanaan Mrtyor-Mukssiiya Maa-[A]mrtaat ||

Meaning:
Om, We Worship the Three-Eyed One (Lord Shiva), Who is Fragrant (Spiritual Essence) and Who Nourishes all beings.

May He severe our Bondage of Samsara (Worldly Life), like a Cucumber (severed from the bondage of its Creeper), ... and thus Liberate us from the Fear of Death, by making us realize that we are never separated from our Immortal Nature.

Tuesday, 8 April 2014

rAma nAmA



The Paramacharya of Kanchi, HH Sri Chandrasekhara Saraswati Swamigal, always encouraged His followers to write the Rama Naamam as many times as possible (Likhita Japam). Let us plan to write a few pages so as to earn the merit of writing the Rama Naamam for at least a few 1000 times in our lives.

Why Should I write the Raama Naamam?

- It is said that the word "Ram" is more powerful than the Lord Himself. Lord Hanuman could accomplish the impossible by simply uttering the Divine name of Lord Ram.

- Scriptures state that those who shed their mortal coil in Varanasi (Kashi) will never have to take birth again. Puranas have stated that during the last moments of one's life in Kashi, Lord Shiva initiates the jiva (soul) with Rama mantram, hence helping him get rid of his future births.

- "Ra" is the agni beejam and "Ma" is the amrita beejam. "Ra" indicates the destroyer of ignorance in humans while "Ma" indicates the praana vaayu being nourished. Hence, the great composer, Thyagaraja Swami, a huge devotee of Lord Ram, often stressed on these beejams in his compositions.

- The Rama naamam activates the Kundalini shakti.

- Continuous repetition of Rama nama discourages people to commit sins and induces in them the qualities of Lord Ram Himself.


- "Dharmo Rakshati Rakshitha:" is a well known saying for everyone who is born in Sanatan Dharma. Scriptures hailed Lord Ram as "Ramo Vigrahavaan Dharma:", meaning "Ram is the personification of Dharma". Our country, the Karma Bhoomi, where numerous Saints were born and the Lord Himself descended, is today struggling under the atrocities committed by power-thirsty, adharmic religions, through terrorist attacks and mass conversions by means of pure deceit, funded extensively by international organizations to endanger and extinguish Sanatan Dharma. It is our responsibility to do our part, in a Dharmic way, to protect our culture. What can be more potent than chanting the name of Lord Ram in this age of  Kali ?

- Most importantly, the Kanchi Paramacharya, HH Sri Chandrasekhara Saraswati Swamigal, always recommended His followers to write the Rama Naama. The Guru's words are always full of ambrosia.



Courtesy: Ramakoti-likhitajapam blogspot

Sunday, 26 January 2014

நிம்மதி


நாம் எப்படியோ பூமியில் பிறந்து விட்டோம். நமக்குள் அழுக்கை (பாவங்களை) ஏற்றிக் கொள்ள இடம் கொடுத்து விட்டோம். இனியாவது அழுக்கை போக்குவதற்காக பயன்படுத்தி கொள்வோம்.

வாக்கு, மனம், உடல் என மூன்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றைக் கொண்ட அந்தப் பாவத்தைப் புண்ணியத்தில் கரைத்து விட முயற்சிக்க வேண்டும்.

நாம் இந்த உலகை விட்டு ஒருநாள் போக வேண்டியது உறுதி. அதற்குள் பாவமூட்டையைத் தொலைத்து விட்டால் போதும் ஆனந்தம் கிடைத்து விடும்.

வெளியுலகப் பொருட்களால் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று நினைப்பது அறியாமை. மகிழ்ச்சியோ, நிம்மதியோ அவரவர் மனதைப் பொறுத்த விஷயங்களே.

Tuesday, 31 December 2013

கடவுளைச் சரணடைவோம்


பொருளைத் தேடி அலைவதால் வாழ்க்கை தரம் உயர்வதில்லை. தரமான வாழ்வு என்பது அவரவர் பெற்றிருக்கும் மனநிறைவைப் பொறுத்த விஷயம்.

மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், கடவுளின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அது வேண்டும், இது வேண்டும் என்று ஏதாவது ஒன்றைத் தேடி அலையும் வரையில், எத்தனை பணம் இருந்தாலும் அவனை பரம ஏழை என்று தான் சொல்ல வேண்டும்.

சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல, மனதில் நிறைவேறாத ஆசைகளே கோபமாகத் திரும்பி, நம்மைப் பாவச் செயல்களில் தள்ளிவிடுகிறது.

பழைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதை விட, புதிய பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதற்கு ஒரே வழி கடவுளின் திருவடியை சரணடைவது தான்.

போதும் என்று நினையுங்கள்!


உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை வணங்கலாம். ஒரே தெய்வத்தை வணங்குவதால் மனம் ஒருமுகப்படும்.

மற்றவர்கள் வணங்கும் தெய்வங்களை தாழ்வாக எண்ணுவது கூடாது.

கீழே விழுந்து தெய்வத்தை வணங்கும் காரணம் தெரியுமா? உடல் கூட தெய்வத்திற்குரியது தான் என்பதை உணர. இந்த உடல் எனக்குரியது என்ற அகந்தையை விட்டொழிக்க.

பெண்ணுக்கு சீதனமாக மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கக்கூடாது. பெண்ணைப் பெற்றவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது.

நமக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது. நிம்மதியாக வாழ்வதற்காக தேவையான அளவு பணம் சம்பாதித்தால் போதும்.

ஆடம்பமாக வாழ்வது இன்றைய நடைமுறையாகி விட்டது. போதும் என்ற மனநிலையை அடைந்தால் இந்த நிலை மாறும்.

Thursday, 28 November 2013

Moksha


During our life in this world itself - during the time we seem to exist in our body - we must learn to treat the body as not "me", not "mine". Mokhsa or liberation does not necessarily mean ascending to another world like Kailasa or Vaikuntha. It can be attained here and now. What is moksha? It is everlasting bliss that comes of being freed from all burden. He who lives delighting in his Self in this world itself without any awareness of his body is called a "Jivanmukta". The supreme goal of the Vedas and Vedanta is making a man a Jivanmukta.



Courtesy: MAHAPERIYAVAL SRI CHANDRASEKARENDRA SARASWATHI'S LIFE AND TEACHINGS.

Wednesday, 27 November 2013

மன சித்த சுத்திக்கு "ஆசாரம்" தேவை - ஸ்ரீ மஹா பெரியவா



Tuesday, 12 November 2013

ராம நாமா


"நாம் எதை நினைக்கிறோமோ அவை அனைத்தும் நடைபெறுவதில்லை.  அப்படி நாம் நினைத்தபடி நடைபெறாத சமயத்தில், 'பகவத் சங்கல்பம்போல் நடைபெறுகிறது' எனக் கூறுகிறோம்.  அழிவையுடைய நாம் நினைக்கும் எண்ணங்களும் காரியங்களும் அதன் மூலம் ஏற்படும் சுகங்களும் அழிவை உடையவை.  ஆகையால்தான் நாம் நினைத்தபடி நடக்கிறதில்லை.  நாம் என்ன நினைக்கிறோம்?  எப்போதும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.  ஆனால் எப்போதும் நாம் சௌக்யமாய் இருக்க முடிவதில்லை.  ஆனால் அழிவில்லாத பகவானை நாம் நினைத்தால் நாமும் அழிவில்லாதவர்களாக ஆகிவிடுவோம்.  இவ்விதம் அழிவில்லாத தன்மையை அடைவதற்கும் எப்போதும் சந்தோஷமாய் இருப்பதற்கும் பகவானான ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும் அவன் நாமாவான ராம நாமாவுமே முக்ய சாதனம்.  'ரமயதீதி  ராம:' என்பதனால் அனைவரையும் சந்தோஷப்படுத்துபவன் தானும் சந்தோஷமாகத்தான் இருப்பான்.  ஆகையால் தானும் சந்தோஷமாய் இருந்துகொண்டு அனைவரையும் சந்தோஷப்படுத்துபவன் ராமன்.  எல்லோரும் அழிவில்லாத ஸ்வரூபமான ராமனையும் அவன் நாமாவையும் நினைத்து, சொல்லி அழிவில்லாத ஆனந்தத்தை அடைவோம்."

- ஸ்ரீ காமகோடி ப்ரதீபம், 14.03.1963.

Friday, 8 November 2013

காயத்ரீ மந்திரத்தின் மகிமை Gayatri Mantra Mahima

Scroll down to read in English

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராமணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்கிரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராமணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்பிராமணன்; கெட்டுப்போன பிராமணன். கெட்டாலும் ‘பிராமணன்’ என்ற பேராவது இருக்கிறது. மறுபடி பிராமணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டு விட்டால் பிராமணத்துவம் அடியோடு போய்விடுகிறது.  அதாவது, அவன் பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன் மட்டும்தான் !

Friday, 1 November 2013

தீபாவளிக்கு மூன்று குளியல் (Three baths for Deepavali)

Scroll down to read in English.
 
கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. "என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்" என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான் தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம். 

Monday, 21 October 2013

வேத சப்தம்

நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்

Tuesday, 30 July 2013

மஹாஸ்வாமிகளின் உபதேசம் (Mahaswami's upadesam)

Scroll down for translation in English

ஸ்ரீ பெரியவாளிடம் நாற்பது வருடங்களுக்கு மேல் பூஜா கைங்கர்யம் செய்து வந்தார், குள்ளச்சீனு அய்யர் என்பவர். அவருடைய புத்திரர் ஸ்ரீ மடத்தில் இப்போது சாமவேத அத்யாபகராயிருக்கும் ஸ்ரீ சந்திர மௌளிச்ரௌதிகள் சுமார் ஆறு வருஷங்களுக்கு முன் (2000 ஆண்டு வாக்கில்) உடலில் திடீரென்று வாயுத்தொல்லை அதிகமாகி எங்கேயாவது ஓடிப்போய்விடலாமா என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் வயதான தாயாரையும், குழந்தைகளையும் தன்னிடத்தில் படிக்கும் மாணவர்களையும் விட்டு விட்டு, எப்படி எங்கே போவது ? - என்று நிலைகொள்ளாமல் ஸ்ரீ பெரியவாளையே பிரார்த்தித்துக்கொண்டு இரவில் படுத்துக்கொண்டார். அப்பொழுது கனவில் கையில் தண்டமில்லாத சன்யாஸிபோல் தோற்றமளித்த ஒருவர் சந்திரமௌளியை, ‘என் பின்னாலே வா’ என்று அழைத்துக் கொண்டு ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் வழக்கமாகத் தங்கும் இடத்திற்குச் சென்று, ஓர் இடுக்கு வழியாக உள்ளே சென்றுவிட்டார். மௌளி மட்டும் வெளியே நின்றுகொண்டு அந்தப் பலகணி வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது ஸ்ரீ பெரியவாள், வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வேறு இரு சன்யாஸிகள். ஸ்ரீ பெரியவாள் சந்திரமௌளியைக் கூப்பிட்டு கையில் இருந்த எதோ ஒரு யந்திரம் எழுதியிருந்த தகட்டை நன்றாகத் துடைத்துவிட்டு ‘என்ன எழுதியிருக்கிறது?’ என்று படிக்கும்படி உத்திரவிட்டார்கள்.

Wednesday, 3 July 2013

மரத்தைத் தண்ணீரில் போடு

“கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்தில் உருட்டித்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.

அதேமாதிரி நம் துன்பங்களையெல்லாம் `ஞானம்’ என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரித் துக்கம் பரமலேசாகி விடும்.”

லெளகீகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்டு விட்ட ஒரு சந்நியாசி, லெளகீக வாழ்வில் துக்கத்தைக் குறைப்பதற்குச் சொல்லும் அற்புத வழி அது.

இந்துமதம் லெளகீகத்தையே முதற்படியாகக் கொண்டது என்பதற்கு சாட்சி.

வாழ்வைப் பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழம்பித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு இந்து மதம் ஒரு ஆறுதல் சொல்கிறது.

சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது, ஞானஒளி பெற்று விடுகிறது.

இக வாழ்க்கையைச் சுகமாக்கித் தர, பிற மதங்கள் செய்யாத முயற்சியை இந்து மதம் செய்கிறது.



- காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறியது - கவிஞர் கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்துமதம்)

Wednesday, 12 June 2013

Education


Right education should make us know that God is the Truth. Knowledge must fill one with good qualities, through which one can realise the Truth, that is God. Therefore, the goal of knowledge is the understanding of the Ultimate Truth. The first fruit of education must be humility and self control.

பக்தி - நாம மகிமை

தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று கணக்கிடப்படுவதிலிருந்து, பஜனை பந்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.

த்யானம்


 மற்ற எதற்கும் நேரமில்லாத அளவிற்கு மக்கள் சதா சர்வ காலமும் உலகியல் கஷ்ட காலங்களினால் அவதிப் படுகின்றனர். இந்தக் கஷ்டங்கள் சொப்பன நிலையில் சென்று துன்புறுத்துகின்றன. ஒருவனது உத்தியோகம் அல்லது கல்வி நிலை எதுவாக இருந்தாலும் கடவுள் த்யானதுக்காக சிறிது நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும். இதனால் மன அழுக்கு நீங்க வழி பிறக்கும்.

Monday, 3 June 2013

ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை Sandhyavandana Mahima

Scroll down to read in English

ஸந்த்யா வந்தனத்தின் மஹிமையைப் பற்றி ஒரு கதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னை கவர்மெண்டைச் சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் டிபார்ட்மெண்டார் பிரசுரித்திருக்கும் ரிகார்டில் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐவர்யத்தை வைத்து, தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்த காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல், தானம் வாங்க வந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள். 

Monday, 27 May 2013

ஸ்ரார்த்த காரியங்கள்

இப்புண்ணிய பாரத கண்டத்தில் பிறந்து வேத ஆகம விதிப்படி நடக்கின்ற நாம், நமது பிதுர்களுக்குச் செய்யக்கூடிய சிரார்த்த காரியங்களை முறைப்படி செய்ய வேண்டியது முக்கியமான கடமை ஆகும். மகாளய பட்சத்தில் செய்வது சிறப்பானது. மகாளய பட்சம் என்பது, புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை உள்ள காலமாகும்.

இதில் வரும் பரணிக்கு மகா பரணி என்று பெயர். திரயோதசி திதிக்கு கஜசாயை என்றும்; அஷ்டமி திதிக்கு மத்தியாஷ்டமி என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று புண்ணிய காலங்களில் செய்யும் சிரார்த்த காரியங்கள் கயையில் செய்யும் சிரார்த்தத்திற்கு இணையானது. மேலும் அமாவாசை துதீய பாதம், பரணி துவாதசி, அஷ்டமி ஆகிய நாட்களில் திதி, நட்சத்திரம், வாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங் களைக் கவனிக்கத் தேவையில்லை.

மதமாற்றம்


ல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்கின்றன. ஒருவரேயான அக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும், அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

Tuesday, 21 May 2013

அபிவாதனம்

நமஸ்காரம் பண்ணுபவன் நமஸ்கரிப்பவரைப் பார்த்துச் சொல்லும் வாசகமே ‘அபிவாதனம்’ என்பது. மொத்தத்தில் தான் யார், என்ன பெயர், எந்தப் பாரம்பர்யத்தில் வந்தவன் என்று தெரிவித்துக்கொள்வதே அபிவாதனம். ‘தன்னைவிட வயஸில் பெரிய ஒருவர் வருகிறபோது ஒருத்தனுடைய பிராணன் மேலே கிளம்பி வெளியில் போகப் பார்க்கும். அப்போது அவன் எழுந்து அவரை மரியாதையாக வரவேற்று அபிவாதனம் பண்ணுவதால், கிளம்பின பிராணன் அவனிடமே மறுபடி புகுந்து நிலைப்படுகிறது’ என்று மநு சொல்கிறார்



 
ஊர்த்வம் ப்ராணாஹ்யுத்க்ராமந்தி யூந: ஸ்தவிர ஆயதி |
ப்ரத்யுத்தாநாபிவாதாப்யாம் புநஸ்தான் – ப்ரதிபத்யதே||*
 
இங்கே வயஸில் சின்னவன் உட்கார்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோ இருக்கும் போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வருவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.ஒரு பெரியவரை எப்போது பார்த்தாலும் நமஸ்காரம் பண்ணி அபிவாதனம் செய்வதையும் மநு உள்பட எல்லா தர்மசாஸ்த்ரகாரர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

*மநுஸ்ம்ருதி 2.120