ध्यायन्तस्त्वां कतिचन भवं दुस्तरं निस्तरन्ति
त्वत्पादाब्जं विधिवदितरे नित्यमाराधयन्तः ।
अन्ये वर्णाश्रमविधिरता पालयन्तस्वदाज्ञां
सर्वं हित्वा भवजलनिधावेष मज्जामि घोरे ॥ ६ ॥
த்யாயந்தஸ்த்வாம் கதிசன பவம் துஸ்தரம் நிஸ்தரந்தி
த்வத்பாதாப்ஜம் விதிவதிதரே நித்யமாராதயந்த: |
அன்யே வர்ணாஸ்ச்ரமவிதிரதா பாலயந்தஸ்த்வதாஜ்ஞாம்
ஸர்வம் ஹித்வா பவஜலநிதாவேஷ மஜ்ஜாமி கோரே || 6 ||
மேற்கூறிய தியானத்தினால், ஸம்ஸாரஸாகரத்தை சிலர் தாண்டுகின்றனர். சிலர் உன் மூர்த்தியை பூஜை செய்து அப்பலனை அடைகின்றனர். மற்றும் சிலர் உன் கட்டளைப்படி வர்ணாஸ்ரம தர்மங்களை வழுவாமல் நடத்தி வந்து பிறவிக் கடலிலிருந்து கரையேறுகிறார்கள். நானோ யோகிகளைப் போலத் தியானம் செய்ய முடியாதவனாய், உன் பக்தர்களைப் போல உன்னை அபிஷேகம், அர்ச்சனை, ஸ்துதி, நமஸ்காரம் முதலியன செய்து ஆராதிக்க சக்தியற்றவனாய், சிஷ்டர்களைப் போல உன் விதிகளை உணர்ந்து தர்மங்களை அனுஷ்டித்து கர்மாக்களை சிரத்தையுடன் செய்ய திறமையில்லாதவனுமாய் என் நற்கதிக்கு யாதொரு வழியையும் தேடிக்கொள்ளாமல் இந்த பயங்கரமான ஸம்ஸாரக் கடலிலேயே மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
dyAyantastvAM katichana bhavaM dustaraM nistaranti
tvatpAdAbjaM vidhivaditare nityamArAdhayantaH |
anye varNAshramavidhiratA pAlayantasvadAj~jAM
sarvaM hitvA bhavajalanidhAveSha majjAmi ghore || 6 ||
Some cross over this transmigratory existence which is very difficult to cross by meditating on You, others by always worshipping Your lotus-feet in the manner laid down in the scriptures and yet others, who are devoted to the rules of varNa and Ashrama by obeying Your commands in that respect. Not following any of these paths, I am being submerged in the terrible ocean of saMsAra.
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment