Stanza attributed to nityanAtha.
रथ्या चर्पट विरचित कन्थः
पुण्यापुण्य विवर्जित पन्थः ।
योगी योगनियोजित चित्तो
रमते बालोन्मत्तवदेव ॥ २२॥
रथ के नीचे आने से फटे हुए कपडे पहनने वाले, पुण्य और पाप से रहित पथ पर चलने वाले, योग में अपने चित्त को लगाने वाले योगी, बालक के समान आनंद में रहते हैं .
rathyā carpaṭa viracita kanthaḥ
puṇyāpuṇya vivarjita panthaḥ |
yogī yoganiyojita citto
ramate bālonmattavadeva || 22 ||
There is no shortage of clothing for a monk so long as there
are rags cast off the road. Freed from vices and virtues, onward
he wanders. One who lives in communion with god enjoys bliss,
pure and uncontaminated, like a child and as an intoxicated.
ரத்யா சர்பட விரசித கன்த:
புண்யாபுண்ய விவர்ஜித பன்த: |
யோகீ யோகனியோஜித சித்த:
ரமதே பாலோன்மத்தவதேவ || 22 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
வழியில் கிடக்கும் கந்தைத் துணிகளால் ஆக்கப்பட்ட ஆடை உடையவனாகவும், புண்ணியமும் பாவமும் அற்ற மார்க்கம் உடையவனாகவும், யோகத்தில் நிறுத்தப்பட்ட சித்தம் உடையவனாகவும் உள்ள யோகி, பாலனைப் போலும் பித்தனைப் போலும் மகிழ்ச்சி நிறைந்தவனாயிருப்பான்.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
பித்தனென்னும் பேதைஉள்ளம்
பிள்ளைஉள்ள மாம் இரண்டும்
பேறுபெற்ற யோகி உள்ளமாம்!
பித்தனுக்கும் கவலையில்லை
பிள்ளைகட்கும் கவலையில்லை
பேச்சிலெங்கும் உண்மை வெள்ளமாம்!
பக்தனுக்கும் பாபமில்லை
பித்தனுக்கும் பாபமில்லை
பஞ்சமில்லை பணமு மில்லையே!
பாபமில்லை குற்றமில்லை
ஏதுமில்லை ஆதலாலே
பரமனெல்லை இவர்க ளெல்லையே!
தத்துவத் திலேபுதிய
தத்துவத்தைச் சொன்ன அந்த
சங்கரனின் சொற்கள் வண்ணமே!
தாய்வயிற் றிலேபிறந்து
வேறிடத்தி லேவளர்ந்த
சத்தியத்தைப் பாடு மனமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment