Contact Us

Name

Email *

Message *

Showing posts with label அருள்மொழிகள். Show all posts
Showing posts with label அருள்மொழிகள். Show all posts

Tuesday, 16 November 2021

அதோமுக தரிசனம் - உள்முகத் தெய்வமணி





அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே
- திருமந்திரம் (இரண்டாம் தந்திரம் - 20, அதோமுக தரிசனம், பாடல்: 2)


ஈச்வரனுக்குத் திசைக்கொன்றாக ஒரு முகம், அது போக மேலே பார்க்க ஒன்று, அதற்கு ஊர்த்வ முகம் என்று பேர் சொன்னேனோல்லியோ? அதே மாதிரி இந்த ஆறாவது முகம் அதோமுகம். மேலே பார்ப்பதால் ‘ஊர்த்வம்’. கீழே பார்ப்பதால் ‘அதோ’. ’அதோ கதி’ என்கிறோம். அப்படியென்றால் மேல்லோகம் என்கிற மோக்ஷத்திற்கு வழியில்லாமல், கீழ் லோகமான நரகத்திற்கு வழி. ஆனால் ஸ்வாமியின் ‘அதோமுகம்’ என்கிறபோது இப்படி கெட்டதான, தாழ்ச்சியான அர்த்தமில்லை! ரொம்பவும் உசந்த அர்த்தமே.

மேலேயுள்ள ஆகாசம் பரவெளி. ‘பரம்’ என்றால் உயர இருப்பது, உயர்வானது; உயர்ந்த தத்வத்துக்கு ஸ்தூலமான ரூபகமாக இருப்பது அது. அகண்ட ப்ரஹ்மத்துக்கு ஸ்தூல ரூபகமே வெளியிலே தெரிகிற அகண்ட ஆகாசம். அது பரம், பரம பதம். அதைப் பார்க்கிற ஈச்வரனின் ஐந்தாவது முகத்துக்கான மூர்த்தியான ஸதாசிவத்துக்கும் ப்ரஹம்மாகச் சிறப்பு சொன்னேன். ஸ்வாமி அப்படிப் பர தத்வமாக, பரம தத்வமாக இருப்பதாலேயே ‘பரமசிவன்’, ‘பரமசிவம்’ என்பது. எப்படி வேறு எந்த தெய்வத்துக்கும் ‘ஸதா’ prefix (முன்னடை) இல்லையோ, அப்படியே இந்த ‘பரம’வும் சிவன் ஒருத்தனுக்குத்தான்! சின்னக் குழந்தைகள் கூடப் ‘பரமசிவன் – பார்வதி’ என்றே சொல்கின்றன! சிவனுக்கே பொதுவில் அதிகம் வழங்குகிற பேரான ’ஈச்வர’னுக்கும் பரம சேர்த்துப் ‘பரமேச்வரன்’ என்கிறோம்….

அது இருக்கட்டும். மேலே பார்க்கும் முகம் ‘பரமம்’ என்கிறாற்போல, கீழே பார்ப்பது அதமமா என்றால், அதுதான் இல்லை. இது அதோ முகமே தவிர அதமமுகமில்லை! ஒரு தினுஸில் அதைப் பரமத்துக்கும் பரமம், பரத்துக்கும் பரமான பராத்பரம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், இங்கே கீழே பார்ப்பது என்பது கண் மட்டத்துக்குக் கீழே ஹ்ருதயத்துக்குள் பார்த்துக் கொள்வதுதான். ஆகையால் ‘அதோமுகம்’ என்பதற்குக் ’கீழ்முகம்’ என்றில்லாமல் ‘உள்முகம்’ என்றே அர்த்தம் பண்ணுவதுதான் சரி. இந்த உள்முகமும் ஐந்து முகங்களோடு சேர்ந்தே ஆறுமுகனாக உண்டான ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை ராமலிங்க ஸ்வாமிகள் ‘உள்முகத் தெய்வமணி’ என்று நம்முடைய ஹ்ருதய அந்தரங்கத்தில் இருக்கிற தெய்வ ரத்தினமாகச் சொல்லியிருக்கிறார். அந்த உள்ளே இருப்பது என்ன? மேலே ஆத்ம ஸ்வரூபம் என்கிற ப்ரஹ்ம ஸ்வரூபமானது பரவெளியான அகண்ட ஆகாசமாக இருக்கிறதென்றால், ஹ்ருதயத்துக்குள்ளே அதே ஸத்வஸ்து உள்வெளியான, ‘தப்ர ஆகாசம்’ என்கிற சின்ன ஆகாசமாக, சிற்றம்பலமாக இருக்கிறது!

அந்தச் சிற்றம்பலத்தில் சிவனே நடராஜாவாக நாட்டியம் பண்ணுகிறார். அந்த நாட்டியத்துக்குப் பெயர் பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம் என்பதே. ஐந்தொழில் சொன்னேனே, அதுவேதான் இங்கே இவருடைய டான்ஸாக அமர்க்களப்படுகிறது! ஐந்தாவதான ஊர்த்வ முகத்தோடு ஸம்பந்தப்படுத்திப் பார்த்தோமே, அந்த அநுக்ரஹ க்ருத்யத்தை இங்கே (நடராஜாவின்) தூக்கிய திருவடி என்ற இடது பாதம் செய்கிறது! அதனால் அந்தப் பாதமே ஸதாசிவ ஸ்வரூபந்தான். அதையே ஒரு தனி ஸ்வாமியாகக் ‘குஞ்சித பாதம்’ என்று வைத்திருக்கிறது. சிதம்பரத்தில் நடராஜ மூர்த்தியோடு கூடவே தனியாக்க் குஞ்சிதபாதம் என்று இடது பாதத்தையும் ஒரு தனி மூர்த்தியாக வைத்திருக்கிறது. பிரதி ராத்திரியும் பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணுவது அந்தக் குஞ்சிதபாதத்தைத்தான்.

ஆனால் அப்படி அம்பாளுக்குப் பதியாயிருக்கிற அந்தக் குஞ்சிதபாதமே, ரொம்ப வேடிக்கையாக, அம்பாளாகத்தான் இருக்கிறது! எப்படியென்றால், அது இடது பாதந்தானே? ஸ்வாமியின் இடது பாகத்தில் இருப்பதுதானே? அந்த இடது பாகம் அம்பாள்தானே?

அதாவது சிவ-சக்திகள் என்ற அத்வைத-த்வைதங்கள் ஐக்கியமாகிவிட்ட பராத்பர தத்வமாகவே குஞ்சிதபாதம் இருக்கிறது. அதனால்தான் ‘குஞ்சிதபாதம்’ என்றும் ‘ம்’மில் முடிகிற ஒரு பெயர் மநுஷ்யர்கள் வைத்துக் கொள்வதாக இந்தத் தமிழ் தேசத்தில் ஏற்பட்டிருக்கிறது.

அதோமுகம் என்ற ஆறாவது முகம் இப்படி சிவசக்தி தம்பதிகளையே காட்டுகிறது என்றாலும், குறிப்பாக அந்த அநுக்ரஹ க்ருத்யத்திற்கே ஸ்தானம் கொடுத்து, அதைச் செய்யும் அம்பாளுடைய முகமாகவே அதைச் சொல்லியிருக்கிறது. ஸ்வாமி பஞ்ச முகத்தாலும், அம்பாள் ஆறாவது முகத்தாலும் வெளிப்பட்டு, இருவரும் ஒன்றுசேர்ந்தே குமாரஸ்வாமி ஆனதாகச் சொல்லியிருக்கிறது.



Courtesy: https://www.kamakoti.org/tamil/7dk265.htm

Friday, 20 November 2015

அதிதி போஜனம் - சிவ சாயுஜ்யம்

பெரியவா சொன்ன ஒரு உண்மை நிகழ்ச்சி.

கும்பகோணம் மாமாங்க குளத்தோட மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்கு வியாபாரி ஒர்த்தர் குடியிருந்தார். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு... அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரக்குடி பக்கத்ல பள்ளத்தூர சேந்தவா. அவாளுக்கு கொழந்தை குட்டி கெடையாது. அவா ஊர்லேர்ந்து நம்பகமா ஒரு செட்டியார் பையன அழைச்சுண்டு வந்து ஆத்தோட வெச்சுண்டு, மளிகைக் கடைய அவன் பொறுப்புல விட்டிருந்தா.

Sunday, 3 August 2014

காயத்ரீ உபாஸனை

நான் சில பையன்களுக்கு வேதத்தைச் சொல்லித் தர ஏற்பாடு பண்ணினேன். பையன்கள் எல்லோரும் ரொம்ப லக்ஷணமாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பரீக்ஷையும் பண்ண வைத்தோம். அந்தப் பரீக்ஷையில் பையன்கள் நன்றாக பாஸ் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு சந்நிதானம் கையால் சர்டிபிகேட் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அப்பொழுது நான் சொன்னேன், “அதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்; அந்தப் பையன்கள் ஒழுங்காக சந்தியாவந்தனம் செய்கிறார்களா? ஒழுங்கா பரிசேஷண மந்திரம் தெரியுமா? அவர்களுக்கு ஒழுங்கா அபிவாதயே தெரியுமா?” அப்படின்னு கேட்டேன். “சந்நிதானம் இப்படி கேட்டால் நாங்களே பெயிலாகி விடுவோம்” என்றார் அவர். “இந்த விஷயத்திலேயே நீங்கள் கவனம் செலுத்தாமல், அவர்களுக்கு வேதம் சொல்லித் தருகிறோம் என்றால் அதில் அர்த்தமில்லை. இது வந்து, அடிப்படையான விஷயம். அடிப்படையான விஷயத்திலேயே கவனம் செலுத்தாவிட்டால், மேற்படி விஷயத்திற்குப் போய் கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை. அதனால், பையன்கள் முதலில் ஒழுங்காக சந்தியாவந்தனம் பண்ணும்படி செய்யுங்கோ. அது அத்யாவசியமானது” என்று சொன்னேன். அதே போல், ‘இந்தப் பையன்களுக்கு எல்லாம் பூணூல் போட்டாகிவிட்டது ; அதனால் எல்லாம் சரியாப் போச்சு’ என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது.

Wednesday, 11 June 2014

குமார ஸம்பவக் கதை

ரு யஜமானன் கட்டளை இடுவது போன்று பேசுவது வேதம். இது ‘ப்ரபு ஸம்ஹிதை’. ‘சத்தியம் பேசு, தர்மமாக நட’ என்று ஆக்ஞை பிறப்பிக்கும். இதையே நீதிமானான நண்பன் தர்மத்தைச் சற்று வெளிப்படையாக வலியுறுத்துவது போன்று கூறினால் அது ‘ஸுஹ்ருத் ஸம்ஹிதை’. இவ்விரண்டையும் விட, இதமாகவும், மதுரமாகவும், தர்மத்தை சர்க்கரையில் தோய்த்த மாத்திரை போன்று கதையில் தோய்த்துச் சொல்லும் போது அது காந்தா ஸம்ஹிதை; உள்ளே இருக்கும் கசப்பு மருந்து நமக்குத் தெரியாமல் வயிற்றுக்குள் போனபின் தனக்கான வேலையைச் செய்வது போல காவிய ரஸத்தை நாம் அனுபவிக்கும் போது நமக்குத் தெரியாமலே நமக்குள் தர்மங்கள் ஊறும்.

உயர்ந்த கவி வெறும் ரஞ்சகமாக மட்டுமில்லாமல் அதற்குள் தர்மமான பலனும் இருக்கிற மாதிரி எழுத வேண்டும் என்பது மஹா பெரியவாளின் வாக்கு. மேற்குறிப்பிட்ட மூன்று ஸம்ஹிதைகளும் ஒருங்கிணைந்த நூல்கள்தான் திருப்புகழும், ராமாயணமும் என்று அறுதியிட்டுக் கூறலாம். எனவே, மாமனும், மருகனுமாகிய ராமபிரான்-முருகப்பெருமான் இருவரின் சொலற்கரிய புகழை ஒரு சேர எடுத்துக்கூறும் திருப்புகழ் சந்தப்பாக்களை, ‘நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகும்படி’ ஓதுவார்களுக்கு இருவரது திருவருளும் பரிபூரணமாகக் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

Monday, 10 March 2014

Eka Vilvam Shivarpanam

Swamigal had wanted to give the translated works of the 63 Nayanmars to the Pope and had instructed the Kanchipuram collector to do so. When the books were placed before Him, He changed His mind and said, "give them to Pradosham Mama, as he is the 64th Nayanmar".

And got new set of books for the Pope.

For Pradosham Mama’s habit of placing Vilva leaves on His head daily, He said, “He heaps Mahalakshmi on my head daily in the mornings and that is why our Matam is blessed by Mahalakshmi!".

He asks him, "you bring Vilvam leaves daily to me, do you pluck them by yourself?”

Mama said, “I used to, but not now due to my old age. One person Venu who works in Kanchi Electricity Board helps me with this now”.

“Out of vilvam leaves he brings, I make a garland and bring it to You, the balance I use for Rudram and poojas at home”

Swamigal says, “Oho, is that right!”

A lady standing near by says, “I also collect a bucket of Vilvam leaves and make a garland and give the rest for archanas at Ekambareshwar temple”

To which Swamigal said, “you both are doing it slightly differently, but ultimately all the vilvas fall only on My Head when you offer them saying Eka Vilvam Shivarpanam”!



Courtesy: Shri Ganesha Sharma's Sapthaham via kanchiforum.org

Wednesday, 5 March 2014

நைவேத்யம் (Supplication)

"அன்னத்துல கார்போஹைட்ரேட், வைட்டமின் மட்டும் இல்லே! அதை சமைச்சவர், காய்கறிகளை தானமாவோ, வெலைக்கோ குடுத்தவர், அதை பயிர் பண்ணினவர்…ன்னு ஒரு மொழநீள லிஸ்ட்டுக்கு, சம்பந்தபட்டவா எல்லாரோட குணதோஷங்களும் அந்த அன்னத்ல ‘டெபாசிட்’ ஆகி சாப்டறவா உள்ளே போறது.

அதுனாலதான் கண்ட எடத்ல கண்டவா கையால சமைச்சு சாப்டரதால நம்ம மனஸ் கெட்டுப் போக ரொம்ப ஹேதுவாயிருக்கு. ஆத்துலேயே சமைச்சாலும், அன்னதோஷம் போறதுக்குத்தான், என்ன சமைக்கறோமோ அதை பகவானுக்கு நைவேத்யம் பண்ணிட்டா, அதுல இருக்கற கொஞ்சநஞ்ச தோஷமும் போய்டும். மனஸும் கெடாது. சரீரமும் கெடாது”.

The quality of food is not just a matter of taste alone. What determines it are the satvik quality of all those connected with it viz., who cultivated it, who cooked it, who sold or offered it and the ingredients used for cooking. 

Our mind may get spoiled by eating food anywhere cooked by anybody.  Even food cooked at home should be offered to god by doing neivedhyam and it will remove any dosham in it and will safeguard one's mind and the body.

Saturday, 22 February 2014

Importance of temples.

Sri Sri Bharati Tirtha Mahaswami
The following is an Excerpt from the English translation of Jagadguru Sri Sri Bharati Tirtha Mahaswamiji’s Anugrahabhashanam expounding the importance of temples.

God is everywhere. He is omnipresent, there is no place where He does not exist. This is the established conclusion of our Sanatana Vaidika Dharma. Thus when God is everywhere, Is it proper to think that God only exists in a temple ? Is it proper to install God, who is omnipresent, inside a temple ?

This doubt arises in some people. God is omnipresent - this is the Truth. God is everywhere, God exists in every particle - this is the Truth.

It is only to reveal this truth that God emerged out of a pillar as Lord Narasimha. In the Bhagavatam, when the Lord’s incarnation as Narasimha is narrated. This same subject (omnipresence of God) is mentioned. Hiranyakashipu asks Prahlada, “You tell me that God is everywhere, is He there in this pillar?”. In reply to that Prahlada said, “Yes, God does exist in this pillar as well”. That enraged Hiranyakashipu even further. If He is there, let Him come out - saying thus he struck the pillar with his mace. At that time, Lord Narasimha emerged.

Friday, 21 February 2014

மஹா சிவராத்திரி விரதம் தரும் முக்தி

தியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் ஜோதி ரூபத்தில் இருந்து, லிங்கமாக வெளிவந்து, சிவபெருமான் அருளிய புண்ணியநாளே மஹா சிவராத்திரி எனப்படுகிறது. இந்த நாளில், நடு இரவில் தரிசனம் தருகிறார் பரமேஸ்வரன்.

உலகுக்கு பிரளயம் மிக அவசியம். அப்போது உலகம், சிவபெருமானிடம் ஒடுங்கும். அந்த நாளே சிவராத்திரி. அன்று சிவபெருமானை தவிர வேறு எவரும்- எதுவும் இல்லை. ஆனால், சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மட்டும் உடன் இருப்பதாக ஐதீகம்.

மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் சிவராத்திரி, நாம் நலமுடன் இருப்பதற்காக சிவனையும் சக்தியையும் பூஜிக்க வேண்டிய திருநாள். நமக்காக பார்வதிதேவியும், சிவபெருமானை பூஜித்த இந்த நாளில், நாமும் முறைப்படி விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட... சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 'அன்று இரவு விரதம் இருந்து கண் விழித்து, நான்கு கால பூஜையும் செய்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி வேண்டிக் கொள்ள சிவபெருமானும் அவ்வாறே வரம் தந்தாராம். எனவே, சாதாரண தினங்களில் பூஜிப்பதை விட, சிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தரும். நந்தி தேவருக்கு, சிவராத்திரியின் மகிமையை சிவபெருமானே உபதேசித்து அருளினார். பின்னர் நந்திதேவர் சிவகணங்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்தார்.

Monday, 30 December 2013

சோமாஸ்கந்தர்




ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம்.
ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே, அதுதான் பரம்பொருள்.

ஸத் (இருப்பு) பரமேச்வரன்;
இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது

சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது.
இந்த ஆனந்தமே சுப்ரமண்யர்.

சிவம் என்கிற மங்களமும்,
அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உயர்வான ஸ்தானம் அவர் சுப்ரமண்யர்;


ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.

Thursday, 24 October 2013

Deepavali, Ganga, Cauvery and Advaita

One of the chief consequential tenets of advaita philosophy is that the Absolute para-brahman can and does (appear to?) manifest itself in any form whatsoever and so the various ‘Gods’ and ‘Goddesses’ of Hindu mythology are nothing but different saguna (with attributes) presentations of the same Absolute Reality. This needs repeated emphasis, particularly in the context of Hindu religion, because, both in the case of those who practise the religion as well as those who just observe the practitioners, there is always a slip-up in the understanding, caused by the glamour and paraphernalia of the religious observances and their rituals. It is with this background, the following account of the mythological significance and symbolism of Deepavali festival is written. All the matter found here goes back to an article (1966) attributed to the Kanchi Mahaswamigal, but later published in a Diwali issue (2001) of ‘Gopura Darsanam’, a Tamil magazine devoted to the promotion of spirituality.

The Mahaswami starts with what looks like a conundrum: ‘You have been traditionally told how the morning bath in hot water (after an oil massage) on Deepavali day is equivalent to a dip in the gangA. You also know that Krishna’s vanquishing of the demon Narakasura is the stated reason for the celebration of Deepavali. But do you know that Krishna himself on that day went all the way south to the kAveri river to purify himself by a bath in the kAveri?’

Sunday, 13 October 2013

மதமாற்றம்

கடவுள் என்கிற ஒரே லக்‌ஷியத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம். நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது.அதில் பல வளைவுகள் இருக்கின்றன.

எல்லா வளைவும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதான். ஆனால், ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும்,மற்றவை சின்னதாகவும் தெரியும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால் பிறரைத் தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள்.ஆனால்,எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். ”யுனிபார்மிட்டி” அவசியமில்லை,  “யூனிட்டி”ரொம்ப அவசியம.

Friday, 4 October 2013

கல் மூங்கில்

திருவண்ணாமலை என்று சொன்னால் கிரி பிரதக்ஷணத்தை நினைத்து கொள்கிறோம். வடாற்காட்டில் அந்த திருவண்ணாமலைக்கு மேற்கே பதினெட்டே மைலில் இன்னொரு மலைக்கும் கிரி பிரதக்ஷண விசேஷம் இருக்கிறது. திருவண்ணாமலை கிரி பிரதக்ஷணம் எட்டு மைல் என்றால் அந்த இன்னொரு பிரதக்ஷணமோ பதினாலு மைல். திருவண்ணாமலையில் அந்த எட்டு மைல் பிரதக்ஷண பாதை சௌகரியமானதா இருக்கிறது என்றால், இந்த பதினாலு மைல் பாதையோ ஒரே கல்லும் முள்ளும் மேடும் பள்ளமுமாவே பெரும்பாலும் இருக்கும். சில இடங்களில் ஒற்றையடி பாதையும் சில இடங்களில் அதுவும் கூட இல்லாமலும் இருக்கும். ஓடைகள் குறுக்கே குறுக்கே வரும். பார்க்க அழகு. தாண்டி போகவோ சிரமம். தேஹ சிரமம் நிறைய பட்டால் தான் புண்ய யாத்ரைக்கு பலன் ஜாஸ்தி என்ற அபிப்ராயப்படி இந்த கிரி பிரதக்ஷணத்துக்கே அதிக பெருமை தரணும்.

Sunday, 22 September 2013

மஹாலயபஷம்

ப்புண்ணிய பாரத கண்டத்தில் பிறந்து வேத ஆகம விதிப்படி நடக்கின்ற நாம், நமது பிதுர்களுக்குச் செய்யக்கூடிய சிரார்த்த காரியங்களை முறைப்படி செய்ய வேண்டியது முக்கியமான கடமை ஆகும். மஹாளயபக்ஷத்தில் செய்வது சிறப்பானது. மஹாளயபக்ஷம் என்பது, புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை உள்ள காலமாகும்.

இதில் வரும் பரணிக்கு மஹா பரணி என்று பெயர். திரயோதசி திதிக்கு கஜசாயை என்றும்; அஷ்டமி திதிக்கு மத்தியாஷ்டமி என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று புண்ணிய காலங்களில் செய்யும் சிரார்த்த காரியங்கள் கயையில் செய்யும் சிரார்த்தத்திற்கு இணையானது. மேலும் அமாவாசை துவிதீய பாதம், பரணி துவாதசி, அஷ்டமி ஆகிய நாட்களில் திதி, நட்சத்திரம், வாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங்களைக் கவனிக்கத் தேவையில்லை.

Monday, 19 August 2013

கீதையில் முடிச்சுக்கள்

ஸ்ரீகிருஷ்ண பகவான் பகவத்கீதையை உபநிஷத்ஸாரமாக அருளி உள்ளார். இதில் விஷயங்கள் ஸரளமாகவேதான் கூறப்பட்டுள்ளன. ஆனால் ’ப்ரஸன்ன கம்பீரம்’ என்று ஸம்ஸ்கிருதத்தில் கூறுவது போல எளிய நடையாக இருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் அதிகமாக உள்ளன. கீதையின் ச்லோகங்களில், ஸம்பிரதாயப்படி குருவிடம் பொருளைக் கேட்டு பன்முறை கீதை முழுவதையும் அராய்ந்து பார்த்துத்தான் உண்மையான கருத்தை அறிய முடியும். இதைக் காட்டுவதற்காகவே கண்ணபிரான் சிற்சில முடிச்சுக்களைச் சில இடங்களில் போட்டுள்ளார் போலும். சில கேள்விகளை எழுப்பி விட்டு பதில் கூறாமலே சென்று விட்டார். முடிச்சுப் போட்டு விட்டார். அவிழ்க்கச் சிரமமாக உள்ளது போல் இருக்கிறது. ஆனால் அதன் பதிலையும் ’சாவி’ (Key)-யையும் அவர் வைத்துத்தான் உள்ளார். இப்படி உள்ள இரண்டு இடங்களைக் கவனிப்போம்.

Thursday, 13 June 2013

அந்தணர் தனிச்சிறப்பு

அந்தணனுக்குத் தனிச் சிறப்பும், முதன்மையும் எதனால் என்றால், அவன் செய்வன எல்லாம் அவனுக்காக மட்டும் செய்யவில்லை.அவன் எல்லாக் காரியங்களுக்கும் சங்கல்பம் பண்ணும்போதே "ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்றுதான் சொல்கிறான். மனை,மக்களுக்காக நினைப்பதில்லை அது போலவே, இத்தனை கஷ்டப்பட்டு, பணம் காசு, தேகசுகம், பிரச்னைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்கிறானே அதன் பலனையாவது தனக்கென்று எடுத்துக் கொள்கிறானா என்றால் அதுவுமில்லை. எல்லாவற்றையும் "நாராயணாயேதி சமர்ப்பயாமி" என்று அவன் காலடியில் போட்டு விடுகிறான். நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கும் இந்த ஏற்பாடே, மிக அழகு.