Contact Us

Name

Email *

Message *

Saturday, 9 January 2016

Soundarya Lahari - Sloka: 28


Beneficial Results: 
அகாலம்ருத்யு நிவாரணம் Immunity from untimely death
Immunity from accidents,  fear of poison and attainment of all desires.


सुधामप्यास्वाद्य प्रति-भय-जरामृत्यु-हरिणीं
विपद्यन्ते विश्वे विधि-शतमखाद्या दिविषदः ।
करालं यत् क्ष्वेलं कबलितवतः कालकलना
न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्क महिमा ॥ २८ ॥

தேவியின் தாடங்க மகிமை [விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்]

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத: |
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந-ஸம்போஸ்தன்மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா || 28 ||

அம்பிகே! ப்ரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் தமது கிழத்தன்மை/மரணம் பீடிக்காதிருக்க அம்ருதம் பருகியவர்களாக இருந்தாலும் ப்ரளயகாலத்தில் அழிந்துவிடுகிறார்கள். ஆனால் உனது பதி பரமசிவனோ ஆலகால விஷத்தை பருகிய பின்னரோ அல்லது ப்ரளயகாலத்திலோ கூட அழிவதில்லை. இதற்கான காரணம் பரம பதிவ்விரதையான நீ, உனது செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மஹிமைதான்.

அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மஹாலெக்ஷ்மி அம்மனை ஜோடனை செய்கையில் இந்த காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது. அதுபோல அன்னை அணிந்த தாடங்கத்தின் மஹிமையைத்தான் ஆச்சார்யார் இங்கே குறிப்பிடுகிறார். இதைத்தான் காளிதாசன் "தாலீ பலாச தாடங்காம்" என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார். அதாவது தாலீ என்பது பனை மரத்தைக் குறிக்கும். இலைகளை சாதாரணமாக பலாசம் எனக் கூறுவார்கள்.சூர்ய-சந்திரர்களே அம்பாளின் தாடங்கங்கள் என்று சஹஸ்ரநாமம் கூறுகிறது.

*ஸ்ரீ ருத்ரத்தில் "யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ: சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவசே" என்று வருகிற வரியும் இந்த அர்த்தத்தில் தான். பொருளாவது, "பரமசிவனே, உனது சரீரத்தில் பாதியான பராசக்தியே உலகிற்கு மருந்து, ருத்திரனாகிய உனக்கும் அவளே மருந்து. அவளருளால்தான் நீ ஆலகாலத்தை உண்ட பிறகும் எங்களுக்காக பிழைத்து இருக்கிறாய்.

ப்ரதிபய-ஜராம்ருத்யு - பயங்கரமான மூப்பு-மரணம்; ஸுதா - அம்ருதம்; ஆஸ்வாத்ய அபி - சாப்பிட்டும் கூட; விதி-சதமக - ப்ரம்மா, இந்திரன்; ஆத்யா - முதலிய; திவிஷத - தேவர்களும்; விபத்யந்தே - பிரளய காலத்தில்; க்ஷ்வேலம் - விஷம்; கபலிதவத: - சாப்பிட்ட; காலகலனா - காலத்தை வென்ற

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 5, 46

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • காமேச்வர ப்ராணநாடீ 
  • ஸதாசிவ பதிவ்ரதா 
  • காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர 
  • சோபித கந்தரா 
  • கல்யாணீ

sudhāmapyāsvādya prati-bhaya-jarāmṛtyu-hariṇīṃ
vipadyante viśve vidhi-śatamakhādyā diviṣadaḥ |
karālaṃ yat kṣvelaṃ kabalitavataḥ kālakalanā
na śambhostanmūlaṃ tava janani tāṭaṅka mahimā || 28 ||

Oh, mother mine,
Gods like Indra and brahma,
Who have drunk deep the nectar divine,
Which removes the cruel aging and death,
Do die and disappear.
But Shambu thy consort,
Who swallowed poison that is potent,
Does never die,
Because of the greatness ,
Of thine ear studs.

*Soundarya Lahari's mula mantra from Shri Rudram - Shri Mahaswamigal's discourse

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:28, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1015 -1027 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment