Contact Us

Name

Email *

Message *

Showing posts with label வழிபாடு. Show all posts
Showing posts with label வழிபாடு. Show all posts

Monday, 13 March 2017

காரடையான் நோன்பு


மாசி மாதத்தின் சிறப்பு மஹா சிவராத்ரி என்றால் பங்குனி தொடக்கமே அன்னை அருளுடன் ஆரம்பிக்கச் செய்திருக்கின்றனர் பெரியவர்கள். ஆம்! காரடையான் நோன்பு என்பது அன்னை காமாக்ஷி தன் பதியாம் கைலாஸபதியுடன் சேர்வதற்காக இருந்த நோன்பு. மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்கள் தங்களது கணவரது நல்வாழ்விற்காக இருப்பது இந்த நோன்பு.

Saturday, 29 October 2016

கந்த சஷ்டி விரதம் - சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

திருசெந்தூர் ஷண்முகர்
கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை திதி முதல் ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்பட்டு சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்த சஷ்டி விரதம்.

Friday, 18 December 2015

தெய்வ உபாஸனை - தேவதா ரூப வர்ணனை

"உன் உபாஸனா தெய்வம் உன்னோட பேசும்" - ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள்.

பொதுவாக நிர்குண, ஸகுண ப்ரம்ம உபாஸனை என்பது வழக்கத்தில் உள்ளது. தேவி, விஷ்ணு இருவரும் ஸகுண ப்ரம்ம உபாஸனையில் வருகிறார்கள். சிவபெருமானை நிர்குண பிரம்ம உபாஸனையில் ஆராதிப்பர்.

ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர், நரஸிம்ஹர், இவ்வாறெல்லாம் பெருமானின் வடிவழகை மனம் குளிர உணர்வில் கண்டு வழிபடுவது ஒரு வகை.

பகவத் ஆராதனையில், உருவத்தை உள்ளத்தில் இருத்தி உணர்வை அதில் பொருத்தி அதனோடு ஒன்றி லயிப்பது ஒரு முறை. இதற்கு, அந்த தெய்வத்தின் வடிவம், வடிவழகு உள்ளிட்டவை மனத்தில் தோன்றவேண்டும்.

நாம் புறக்கண்ணில் காணும் அழகுப் பொருள்களை அகக்கண்ணில் கண்டு மகிழும் தெய்வத்துக்கு பொருத்திப் பார்த்து, உவமை நயத்துடன் உருவ அழகை தியானித்து லயிப்பது ஒரு கலை.

Friday, 22 August 2014

பிரதோஷ வகையும் வழிபாட்டு பலனும்


1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

Sunday, 29 December 2013

பிரதோஷம் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்

Shri Maragathambigai sameda Shri Pallikondeeswarar, Suruttappalli


இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக, வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.

Saturday, 16 November 2013

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்


கார்த்திகை சோமவாரம்: சிவாலயங்களில் சங்காபிஷேகம்!


சங்கு செல்வத்தின் அடையாளம். கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் (சோம வாரம்) சிவ வழிபாடு செய்பவர்களுக்கு முக்கியமானது. நவக்கிரகங்களில் சந்திரன் "மனோகாரகன் ஆவார். இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார். குழப்பமான அல்லது தெளிவான முடிவெடுப்பதற்கு காரணகர்த்தா இவரே. இந்த சந்திரனை, சிவபெருமான் தலையில் சூடியுள்ளார். சந்திரனுக்கு "சோமன் என்ற பெயரும் உண்டு. இதனால் சிவனுக்கு "சோமசுந்தரர் "சோமசேகரன் "பிறை நுதலான் என்ற பெயர்களும் உண்டு. எனவே, மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கள்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது. அதிலும் ஒளி மாதமான, கார்த்திகை சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்தால், குடும்ப ஒற்றுமை ஏற்படும். பிரச்னைகளை கணவனும், மனைவியும் இணைந்து சமாளிக்கும் மனதிடம் உண்டாகும்.

Friday, 25 October 2013

Philosophy of Idol Worship

THE IDOL is a support for the neophyte. It is a prop in his spiritual childhood. A form or image is necessary for worship in the beginning. It is an external symbol of God for worship. It is a reminder of God. The material image calls up the mental idea. Steadiness of mind is obtained by image worship. The worshipper will have to associate the ideas of infinity, omnipotence, omniscience, purity, perfection, freedom, holiness, truth and omnipresence with the form of worship he chooses.

It is not possible for all to fix the mind on the Absolute. A concrete form is necessary for the vast majority for practising concentration. To behold God everywhere and to practise the presence of God is not possible for the ordinary man. Idol worship is the easiest form of worship for the modern man.

A symbol is absolutely indispensable for fixing the mind. The mind wants a prop to lean upon. It cannot hold a conception of the Absolute in the initial stages. Without the help of some external aid the mind cannot be centralised. In the beginning, therefore, concentration or meditation is not possible without a symbol.

Saturday, 21 September 2013

நந்தி தத்துவம்

நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. ஆக தர்மதேவதையே சிவ பெருமானின் வாகனமாக அமைந்துள்ளது.

சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை). தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது. அவ்வேண்டு கோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.

சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது. தருமவிடை சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.

Thursday, 29 August 2013

சிவவாக்கியர் பாடல்



ஓம் நம: சிவாய ஓம்   ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம்   ஓம் நம: சிவாய

சரியை விலக்கல்

1.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)

2.
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)