Contact Us

Name

Email *

Message *

Thursday, 7 January 2016

Bhaja Govindaṁ - Verse 20


Stanza attributed to anandagiriH. 

भगवद् गीता किञ्चिदधीता 
गङ्गा जललव कणिकापीता । 
सकृदपि येन मुरारि समर्चा 
क्रियते तस्य यमेन न चर्चा ॥ २०॥ 

जिन्होंने भगवदगीता का थोडा सा भी अध्ययन किया है, भक्ति रूपी गंगा जल का कण भर भी पिया है, भगवान कृष्ण की एक बार भी समुचित प्रकार से पूजा की है, यम के द्वारा उनकी चर्चा नहीं की जाती है.

bhagavad gītā kiñcidadhītā 
gaṇgā jalalava kaṇikāpītā |
sakṛdapi yena murāri samarcā 
kriyate tasya yamena na carcā || 20 || 

Let a man read but a little from bhagavadgItA, drink just a drop of water from the Ganges, worship but once murAri. He then will have no altercation with Yama.

பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா |
ஸக்றுதபி யேன முராரீ ஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா  || 20 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

எவனால் பகவத்கீதை சிறிதேனும் படிக்கப்பட்டதோ, கங்கா தீர்த்தம் துளியேனும் பருகப்பட்டதோ, விஷ்ணுவின் அர்ச்சனை ஒரு தடவையேனும் செய்யப்பட்டதோ, அவனால் எமனுடன் சச்சரவு செய்யப்படுவதில்லை.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

பக்திஞான தத்துவத்தில்
ஈடில்லாத கீதைதன்னைப்
பாடியே அமைதி பெறுங்கள்!

பாபமற்ற கங்கைநீரில்
ஓரளவே னும்அருந்தி
பாசநிலை தீர்த்து விடுங்கள்!

சக்திமிக்க வெங்கடேசன்
தாள்களைப் பணிந்திருந்து
தர்மஞான முக்தி பெறுங்கள்!

சாவுமில்லை காலனோடு
வாதமில்லை எந்தநாளும்
தாமெனத் தழைக்கும் நலன்கள்!

முக்திகாணும் எண்ணமின்றி
மூக்குநாக்கு வாய்களாலே
மோகமெய்தி என்ன பயனே!

மோகனக் குடைவிரித்து
பூமியை அணைத்திருக்கும்
மோகனனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment