Contact Us

Name

Email *

Message *

Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

Monday, 11 August 2014

Kamokarsheet Japam


काम एष क्रोध एष रजोगुणसमुद्भव: ||
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम् ||

kāma eṣha krodha eṣha rajo-guṇa-samudbhavaḥ
mahāśhano mahā-pāpmā viddhyenam iha vairiṇam

- Bhagavad Gita: Chapter 3, Verse 37

It is lust alone, which is born of contact with the mode of passion, and later transformed into anger. Know this as the sinful, all-devouring enemy in the world.

Sunday, 15 December 2013

மகான்களின் தரிசனம் - மேலவாஞ்சூர் சற்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகள்

ஸ்ரீ சற்குரு தோத்திரம்

எங்கும் நிறைந்து எழுகின்ற சோதியை
அங்கத்தில் கண்ட அருளமுதமாம்-எங்கள்
இரங்கையா என்ற எழிற்குரு பாதம்
சிரங்கொண்டே எந்நாளும் சேர்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையான பரம்பொருள் தன்னை ஆன்மாக்கள் அறிந்து உய்தற் பொருட்டு எடுத்துக்கொண்ட வடிவங்கள் குரு-லிங்க-சங்கமமென மூன்று வடிவங்களாகும். அவற்றுள் பரிபக்குவமுள்ள ஆன்மாக்களின் தகுதிக்கேற்ப பரம்பொருள் அறியப் படும்.

Wednesday, 16 October 2013

மகான்களின் தரிசனம் - கும்பகோணம் ஸ்ரீ மௌன சுவாமிகள்

சுவாமிகளின் வரலாற்றைப் பார்க்கும் போது இளமையில் சிவந்த நிறமும், நெடிய தோற்றமுமாக இருந்திருக்கிறார். பேச்சு இல்லை, உறக்கம் இல்லை, ஆடை உடுத்துவது இல்லை, தன்னிலை மறந்து சதா சர்வ காலமும் பரம்பொருளை நினைத்து இருக்கும் யோக நிலையில் இருந்திருக்கிறார். மழை வெயிலை பொருட்படுத்தாது அலைந்து கொண்டிருந்திருக்கிறார்.

பூர்வீகம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை, ஆனாலும் கும்பகோணத்திற்குக் கிழக்கே 8 கி.மீ தொலைவில் திருபுவனம் என்றொரு (மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது) ஊரில் இருந்ததாகவும், கும்பகோணத்தில் இருந்து சென்ற அன்பர்கள் அவரைப் பார்த்து, கும்பகோணத்தில் நல்ல ஒரு இடத்தில் தங்க வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் திருபுவனம் அன்பர்கள் மறுக்கவே அவரின் திருவுள்ளம் அறிய அவரிடம் பணிய அன்றிரவு திருபுவனம் அன்பர்கள் கனவில் பரம்பொருள் –கம்பகரேசுவரப் பெருமான் கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூற சுவாமிகள் கும்பகோணம் வந்ததாக அறிய முடிகிறது.

Thursday, 10 October 2013

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு.  சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவர் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார்.

ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு.

Thursday, 29 August 2013

சிவவாக்கியர் பாடல்



ஓம் நம: சிவாய ஓம்   ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம்   ஓம் நம: சிவாய

சரியை விலக்கல்

1.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)

2.
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)

Friday, 28 June 2013

மகான்களின் தரிசனம் - குரு தக்ஷிணாமூர்த்தி

சுமார் 200 வருடங்களுக்கு முன் திருச்சிக்கு அருகில் கீழாலத்தூர் என்ற கிராமத்தில் திரு. சிவ சிதம்பரம், மீனாம்பிகை அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருணாசலம். பரம்பொருளின் அருளால் பிறவி ஞானம் பெற்று ஓதாதுணர்ந்தார்.  இவர் செய்த சித்துகள் எல்லாம் தீராத நோய்களையும், பலருடைய வேதனைகளையும், குணப்படுத்தியுள்ளது.

சுவாமிகளின் பெயருக்கு ஒரு காரணம் இருக்கிறது. சித்தூர் சோமனாத முதலியாருக்கு தீராத குன்மம் வந்துவிட்டது. சிதம்பரம் நடராஜர் சன்னதியில் நோய் தீராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக முறையிட்டார். உடனே அசரிரீ எழுந்து திருவாரூர் தக்ஷிணாமூர்த்தியை பார், வியாதி குணமாகும் என்றது.

Tuesday, 21 May 2013

ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்

ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர்

ஞானத்தை பெற வேண்டும் என்றால் முதலில் நாம் யார் என்பதை உணர்ந்தாலே ஞானத்தை பெறலாம். சுவாமி விவேகானந்தரும், புத்தரும் தனக்கு தானே கேட்டுக்கொண்ட முதல் கேள்வி “நாம் யார்?” என்பதே. இதற்கு விடை தெரிந்துவிட்டால் மனிதர்களுக்குள் போட்டி இருக்காது – பொறாமை இருக்காது. மனிதன், மனிதனாக வாழ தகுதியடைந்துவிடுகிறான்.

Tuesday, 14 May 2013

A QUEST FOR GYAANA: PATTINATHAR

A QUEST FOR GYAANA: PATTINATHAR: Pattinathar  also called Pattinathu Chetty, was born in an affluent Nagarathar (trading community of Tamilnadu – Natukotai Chettiars ) fami...