Stanza attributed to dRiDhabhakta.
पुनरपि जननं पुनरपि मरणं
पुनरपि जननी जठरे शयनम् ।
इह संसारे बहुदुस्तारे
कृपयाऽपारे पाहि मुरारे ॥ २१॥
बार-बार जन्म, बार-बार मृत्यु, बार-बार माँ के गर्भ में शयन, इस संसार से पार जा पाना बहुत कठिन है, हे कृष्ण कृपा करके मेरी इससे रक्षा करें.
punarapi jananaṁ punarapi maraṇaṁ
punarapi jananī jaṭare śayanam |
iha saṁsāre bahudustāre
kṛpayā'pāre pāhi murāre || 21 ||
Born again, death again, again to stay in the mother's womb !
It is indeed hard to cross this boundless ocean of samsAra. Oh
Murari ! Redeem me through Thy mercy.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே ஶயனம் |
இஹ ஸம்ஸாரே பஹுதுஸ்தாரே
க்ருபயாபாரே பாஹி முராரே || 21 ||
புனரபி ஜனனீ ஜடரே ஶயனம் |
இஹ ஸம்ஸாரே பஹுதுஸ்தாரே
க்ருபயாபாரே பாஹி முராரே || 21 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
கரையில்லாததும், கடத்தற்கரியதுமான இந்த சம்சாரத்தில் மறுபடியும் பிறப்பு; மறுபடியும் இறப்பு; மறுபடியும் தாயின் வயிற்றில் கிடத்தல்; முராரியே; கருணை கூர்ந்து காத்தருள்வாயாக.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
தாய்வயிற் றிலேபிறந்து
தான்இறந்து மீண்டும்மீண்டும்
தாய்வயிற் றிலேபிறக் கிறேன்!
தாரணிக் குளேஇருந்து
வான்வெளிக் குளேபறந்து
தாரணிக் குளேநடக் கிறேன்!
ஓய்விலாத என்பிறப்பு
மீண்டும்மீண்டும் யார்பொறுப்பு
உன்னையன்றி வேறுகாண் கிலேன்!
ஊரிலுள்ள ஜீவனுக்கு
நீகொடுத்த வாழ்கையென்று
உன்னிடத்தில் என்னைவைக் கிறேன்!
வாய்திறந்து கூறுஇந்த
வார்த்தைதனை விட்டுவிட்டு
வாடிநிற்றல் என்ன பயனே?
வஞ்சகர்க் கிறப்புவைத்து
பஞ்சவர்க்கு வாழ்வுவைத்த
மன்னன்தன்னைப் பாடு உள்ளமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment