Contact Us

Name

Email *

Message *

Showing posts with label காஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள். Show all posts
Showing posts with label காஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள். Show all posts

Saturday, 5 November 2016

அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. ஐந்தாம் மற்றும் நிறைவுப் பகுதி


1951 ஆகஸ்ட் 28, காயத்ரி ஜபம். மரகதம்மா அன்று சமையலை தான் கவனித்துக் கொள்வதாகக் கூறி சமையல் செய்பவரை வீட்டில் உள்ள மற்ற ஆண்களுடன் காயத்ரி ஜபம் செய்ய அனுப்பினார். நைஷ்டிக பிரம்மசாரியான அவர் காபி போடுவதற்காக ஒரு பெரிய பாத்திரம் நிறைய தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார். கொல்லைப்புறத்தில் உள்ள பூஜையறை முற்றத்தில் கோலம் போடுவதற்காக மரகதம்மா சென்றார். அங்கேதான் அனைவரும் அமர்ந்து பஜனை செய்வது வழக்கம். அங்கு இரு மரங்களுக்கிடையே ஒரு மேடை இருந்தது. முற்றத்தின் கதவை திறந்ததும் கண்ட காட்சியானது அவரை சிலையாக்கியது. தன் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அங்கே மேடையில் தண்டபாணியின் கையை பிடித்துக்கொண்டு சாக்ஷாத் ஸ்ரீ ரமண பகவானே தான் எப்போதும் அமர்ந்திருப்பதுபோல் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.

Tuesday, 10 March 2015

Vedas - The Oldest Language in the World

The documented experience with Kanchi Sri Mahaswamigal, translated from Thiruvannamalai Sri Gowrishankar's interview (video at the end of this post).

"When I went to the Kanchi Mutt to have the darshan of Sri Maha Periyava, there were four foreigners there, an Israeli, an Italian, a German and a British. They had come to do their PhD in Philology on the topic of 'the most ancient languages in the Occidental and the Oriental world'. They were studying Latin, Hebrew and Greek languages in the Occidental part and Sanskrit and Tamil in the Oriental part.

Maha Periyava was in his private quarters, performing His Nithya Karma Anushtanas and elaborate poojas; they had waited and desired to take a photo of Him but His kaingaryams refused permission. They were heartbroken that they could not take a picture. All the four of them were standing near a tree since morning waiting for Periyava to finish his poojas and give darshan. They asked His sevakas when He would be done with the poojas but got an unconvincing reply.

Sunday, 19 October 2014

Greatness of Ambal


AMBAL & SHIVA

Although these are of the same tathvam (principle), more than Shiva, to Ambal (Shakti) is the greatness; this, Adi Shankara Bhagavadhpadhal explains in his 'Soundaryalahari' sthothram.

shivaH shaktyA yukto yadi bhavati shaktaH prabhavituM
na cedevaM devo na khalu kushalaH spanditumapi |
atas tvAm ArAdhyaaM hari-hara-viri~nchAdibhir api
praNantuM stotuM vA katham akR^ita puNyaH prabhavati || 1 ||

Wednesday, 11 June 2014

பெரியவா கிரஹம்!


லைப்பைக் கண்டதும் வியப்பு மேலிடுகிறதா? ஆனால், இது உண்மை! சேலத்தில், தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி, அதில் பல ரூபங்களில் தோற்ற மளித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார், மகா பெரியவா! 

சுவாரஸ்யமான அந்த புனித நிகழ்வை தெரிந்துகொள்வோமா?

பெரியவாளின் பரம பக்தரான ராஜகோபால் இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த நேரம் அது.  அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள்.  அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளைதான் காஞ்சி மஹானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.

ராஜகோபால் தம்பதி காஞ்சி மஹானிடம் பக்தி கொண்டு இருந்தார்களே தவிர, அவ்வளவு நெருக்கம் இல்லை.  பிரதோஷம் மாமா ஓர் தடவை இவரை தன வீட்டுக்கு அழைத்துப்போய் மஹானைப்பற்றி விவரமாக உபதேசித்த பின்புதான், இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற்ற பக்தி தோன்றியது.

உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாற்றிக்கொண்டு இருந்த ராஜகோபால் சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப்பெற்றார்.  சேலத்துக்கு தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தை பெரியவாளிடம் ராஜகோபால் சொன்னபோது, "சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?" என்று ஒரு கேள்வியை கேட்டார் பெரியவா.

Monday, 5 May 2014

அந்தப் பாதுகைகள்

து 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.

திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.

திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.

“என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.

நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.

மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.

உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.

உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.

Tuesday, 11 March 2014

63+ Nayanmars - 'appAlum adi sArndhArku adiyAr'

There was a bank director in Paris, France. He was keen on having a darshan of Periyava, having heard about him. Dr. Raghavan used to receive frequent phone calls (from the bank director). He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan (who was a Sanskrit professor in the Madras University) would inform Periyava about the request. Even though he had told, "He is very keen to have darshan of Periyava; he incessently calls me", Periyava did not give his consent. Some years passed in this way.

Suddenly one day Dr. Raghavan received tidings that said, 'I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Should please arrange for the darshan.'

At that time Acharyas were staying in Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan of Periyava. Periyava called him and inquired. When told about the Frechman's proposed visit to Chennai, Periyava looked at him intently for a moment then looked elsewhere at a distance as if talking to someone mentally and then said, "Alright, bring him."

Before Periyava sat for the upanyAsam after the puja, he called one of the mutt-inmates and said, "If any European turns up, offer him on a chair, as he would not be able to sit on the floor. I shall see him after the upanyAsam."

Wednesday, 22 January 2014

அதிஷ்டானத்தில் கேட்ட அசரீரி

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…

”அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா. அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.

இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவாளோட குரல் மாதிரியே இருந்துது.

Sunday, 10 November 2013

நித்திய கர்மானுஷ்டானங்கள் எனும் ஏணி

மஹாபெரியவாள் ஆந்திரப் பிரதேசத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சமயம்.

புகழ் பெற்ற தத்துவமேதையும், பெரியவாளிடம் எல்லையற்ற பக்தி கொண்டிருந்தவருமான டாக்டர் டி.எம்.பி.மஹாதேவன் அவர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவருடன் தரிசனத்துக்கு வந்திருந்தார். அந்தப் பாதிரியார், ஜப்பான் நாட்டில் தங்கி ஜென் புத்திஸம் (புத்தமதத்தில் ஜென் என்ற ஒரு பிரிவு) பற்றி நன்றாகக் கற்றறிந்தவர். சென்னைப் பல்கழைக்கழகத்தில், ’ஜென் புத்தமதமும் அத்வைதமும்’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த ஜெர்மானியர் வயது முதிர்ந்தவர்; கிறிஸ்தவப் பிரசாரத்துக்காக ஜப்பானிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.

பெரியவாளுடன் அவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போதே, இஸ்ரேல் நாட்டு அமைச்சர் ஒருவரும், அவருடைய செயலாளரான ஒரு பெண்மணியும் தரிசனத்துக்கு வந்து, பேச்சில் கலந்து கொண்டார்கள்.

Tuesday, 15 October 2013

வடமொழியில் பெரியபுராணம்

"பரமாசாரியர் உங்களை உடனே காஞ்சிபுரம் வரச் சொல்லுகிறார்கள். கல்வெட்டு விஷயம். உடனே வரவும்" என்று காஞ்சி மடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. காஞ்சிப் பெரியவருக்கு கல்வெட்டின் மீது அளவிலாத ஈடுபாடு. ஆதாரமான செய்திகளை அவை எடுத்துக் கூறுவதால்! புரியாத கல்வெட்டுச் சொல்தொடர்களுக்கு புரியும் வகையில் எனக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியிருக்கிறார்கள். கல்வெட்டைப் பற்றி பெரியவர் கூப்பிடுகிறார் என்றால் புதிய செய்திகள் நிச்சயம் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். காஞ்சிபுரத்துக்கு உடனே சென்றேன்.

பரமாசாரியரின் குறிப்பு

"ஏகாம்பரநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. 50 வருஷங்களுக்கு முன் நான் படித்த ஞாபகம். நீ போய் அதைப்படி எடுத்துக் கொண்டு வா" என்றார். அதைப் படி எடுக்கச் சென்றேன். அவ்வாறு படி எடுத்துக்கொண்டிருக்கும் போது அதற்கு மேலே சுவரில் ஒரு சம்ஸ்க்ருத கல்வெட்டு பெரிய பெரிய எழுத்துக்களில் இருந்தது. அந்தக் கல்வெட்டின் நடுவில் அப்பர் பெருமானின் சிற்பம் அழகாக செதுக்கப்பட்டிருந்தது. அதை ஒட்டித் தமிழிலும் கிரந்தத்திலும் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

Sunday, 13 October 2013

பெரியவாளைப் பார்த்த பிரஞ்சு பேராசிரியர்கள்

அன்று காலையில் தான் நமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஜனாதிபதி ஆ.ர். வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமடத்தில் பரமாசார்யாளை தரிசித்துவிட்டு அவர்களது ஆசியைப் பெற்று சென்றிருந்தார்கள். ஆசார்யாள் சற்று ஓய்வு கொண்டிருந்தார்கள். ஸ்ரீ மடத்துக்கு வந்தவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக தரிசித்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். நானும் பரமாசார்யாளை ஜன்னல் அருகில் நின்று தரிசித்துவிட்டு வெயில்தாழக் கிளம்பலாம் என்று ஒரு ஓரமாக அமர்ந்திருந்தேன். மாலை சுமார் 4 மணியிருக்கும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப்போகிறார்கள் நீங்கள் இருந்துவிட்டுப் போங்களேன் என்றார் ஸ்ரீமடத்தில் இருந்த ஒருவர். அதுவும் நல்ல யோசனை தான் என்று தங்கினேன்.

Friday, 11 October 2013

Uraka kAmAkshi - Ammathiruvadi Temple


When I continued reading, the term 'Urakam' came up. At once he asked me to stop reading.

"Where are we now?"

"Kanchipuram."

"This place?"

"Sivakanchi, periya (bigger) Kanchipuram."

He was not satisfied with my reply. Some people were standing behind me. An old dampati (husband and wife) among them joined their palms to PeriyavaaL. "Ask them what their place (of living) is." I asked them.

Old man: Palakkad.

PeriyavaaL's face brightened. "Ask him if the Amma nearby him is his samsAram (wife)."

I asked. He said, "Yes."

PeriyavaaL's question to them: "Is there a Kamakshi temple near your place?"

Old man: I don't know.

AmmaaL: Seems Periyavaa asks about 'Urakam Kamakshi'...

"Ask that AmmaaL to come to the front."

She came.

"You have gone there, that temple?"

"I have gone. They would have portrayed AmbaaL on a piece of cloth."

"Alright, go and come back." Periyavaa gave her his anugraha with a smile.

Then he told me this story:

"The Kamakshi here was very prasiddha (celebrated, famous) in the olden days. She remained dazzling in her sannidhi. One day a Malayala Namboothiri came here to have her darshan. He stood amazed looking at AmbaaL. It seemed he was a sAktA (Goddess worshipper). The Namboothiris would come to the temple with a palm leaf umbrella (thAzham kudai). You have seen a palm leaf umbrella? (I said 'yes'). It can't be collapsed. He sat in the AmbaaL Sannidhi, and by his japam did AkarSaNaM (attract) of a kalA (part) of AmbaaL on that umbrella and went away to Palakkad. His village was nearby. He did AvAhanam (invoked) of AmbaaL by transferring her presence from the umbrella to a cloth on which he had drawn a portrait of her figure. They named their village with the same name as this place where Kamakshi is residing. Kanchipuram has another name Urakam."

He narrated this tasteful history with his characteristic natural fluency.

---------

About Urakam Ammathiruvadi Temple


The Devi temple situated at Urakam, is one amongst the major 108 Durga temples, popularly called as “Ammathiruvadi temple”.

According to the Kerala folklore, Poomulli Namboothiri (also sometimes referred to as Thiruvalayannur Bhattathiri) founded Ammathiruvadi temple about 700–1000 years ago. Legend has it that , due to the atrocities and calamities happening within the Desham (city), elders suggested three prominent members from the community, viz, Valaya Bhattathiri, Kadalayil Namboothiri and then Komarathu Menon to travel to Kancheepuram and pray to goddess Kanchi Kamakshi to please her and bring favourable solutions to ward off the evil effects happening that time. They all went and pleased with their prayers, happy with the devotion, Devi agreed to come with them to Urakam. Accordingly, Kanchi Kamakshi decided to come to Kerala on the palm leaf umbrella of Poomulli (Valayannur) Namboothiri.  He reached home and placed the umbrella on the floor of his house.  After a short sleep, he came back and found that he was unable to take back the umbrella from the place where he kept. It was heavily grounded to the floor. Later,  it was confirmed that Kanchi Kamakshi was residing on that umbrella. The goddess came in Namboothiri’s dreams that night and let him know that he was supposed to build a temple for the goddess, leave Urakam and move  towards North.  She also let him know that he was to find an idol in a well far away and reinstate the goddess from the umbrella onto that idol. Namboothiri did as the goddess wished. He built the temple,  and after a short period of administration of the temple matters by the Poomulli family, he left all that he owned to the temple, and gave the administration to the Maharaja of Cochin. From then, the goddess has been known as the Ammathiruvadi.

Later on the temple administration was transferred to Cochin Devaswam Board, who takes care of it even now. Urakam Ammathiruvadi temple is an integral part of the 1400 year old Arattuppuzha pooram festival. Arrattuppuzha pooram is called as Deva Mela, where all the gods and goddesses assemble together in the presence of Thriprayar Thevar (Sri Rama).  According to the old customs continued by the family of  the king of Cochin and then subsequently by the Kerala State, whenever, Ammathiruvadi travels outside the temple, i.e for Pooram or other festivals, she is supposed to be greeted with official “Guard of Honour” by the police.

Stories passed on from elders,  also  say that in those days, the idol installed by Poomulli Namboothiri was originally the Devi idol worshipped by Sri Rama before he went to war with Ravana. There are several historic connections, one gets to see in places nearer to Oorakam, supporting the claim that the village was part of ancient Hindu history.  Due to the same connections, this village and all the adjacent villages remain divine and prosperous  throughout.  Agricultural and other activities always flourish here.

It is also said that one family close to the temple became so devoted to the Devi that she was pleased with their bhakthi and from then on, the eldest member of this family – Vazhappilly – became the guard of Ammathiruvadi and wherever she went, she was accompanied by this member. This continues even now.

Since she came to Urakam on an umbrella made of palm leaf, whenever Ammathiruvadi’s idol is carried out, it will be accompanied by a person carrying an umbrella made of palm leaf.

Urakam Ammathiruvadi is considered as Goddess Lakshmi.  However, devotees can also worship the Devi as Durga as well as Saraswathi and get the blessings. On the top of the Dhwaja Stambha (Kodimaram) is the statue of a lion which signifies that Devi is alsoworshipped as Mahishasuramardini. There are two more deities (upadevas) inside the inner courtyard, they are Lord Sastha and Lord Ganesha. It is believed that the presence of Lord Subrahmania is there in the temple.  Nagaraja is there in the south east corner of the compound. It is believed that presence of Kodungallur Bhagawathy is there on the Eastern Gopuram. The Devi being a Kanyaka (virgin),  no fragrant flowers are used for the pooja.  In this temple only Veda Mantras are used for the poojas. Kaartika Nakshatra in the Malayalam month of Vrischika is the birth day of Devi. On that day, there will be number of programmes including Annadaanam.  Also on every Kaarthika star day, there will be Naama japam and annadaana as offerings by the devotees. 



Courtesy: 
Thanjavur SanthanaRaman,
Maha PeriyavaL - Darisana AnubhavangaL vol. 1, pages 41-65, Vanathi Padhippaham,
http://www.templeadvisor.com/temples-in-india/hindu-temples/urakam-ammathiruvadi-temple.

Tuesday, 17 September 2013

How Kanchi Mahaperiava changed the life of artist Silpi

Scroll down to read in English

"சில்பி" யின் ஓவியங்கள் ஜகத்ப்ரஸித்தி. அவருடைய ஓவியங்களில் அந்தந்த கோபுரக் கலையழகும், தெய்வங்களின் சிலையழகும் நம் முன் தத்ரூபமாக தெரியும். அவர் மஹா பெரியவாளின் அத்யந்த பக்தர். அவருடைய ஓவியங்களில் அவ்வளவு நுட்பமாக தெய்வத் திருவுருவங்களை வரைவது பற்றி கேட்டபோது, "அவனோட கண்கள்ள ஸூர்யன் இருக்கு" என்று பெரியவாளே சொல்லியிருக்கிறார் என்றால், அவர் தெய்வீக கலைஞர் என்பதில் என்ன சந்தேஹம்?

அவருக்குப் பெரியவாளை முதன்முதலாக தர்சனம் பண்ணவே ஒரு சில மாதங்கள் ஆனது. ஒருநாள் இரவு லாந்தர் விளக்கொளியில் "சில்பி"க்குத் தான் யார் என்பதை உணரவைத்தார்.

Sunday, 30 June 2013

விஸ்வரூப தரிசனம் - நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.

1993—ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7—ஆம் தேதி அன்று நானும் எனது மனைவி லக்ஷ்மியும் பெரியவாளைத் தரிசித்து, வரப்போகும் எங்கள் மகன் குருப்ரசாத்தின் திருமணத்திற்கு ஆசீர்வாதம் பெறுவதற்குக் காஞ்சீபுரம் சென்றிருந்தோம். மடத்தை அடைந்தவுடன், பெரியவாள் அன்றும் அதற்கடுத்த நாளும் தரிசனம் தருவதற்கில்லை என்று அறிந்தோம். இருந்தாலும், 11-30 முதல் 12 மணி வரை, நாங்கள், அவர் வழக்கமாக தரிசனம் தரும் இடத்தில் வரிசையாக, நின்றோம். பிறகு, ஸ்ரீ விஜயேந்த்ரசரஸ்வதி ஸ்வாமிகள் செய்த சந்திரமௌளீஸ்வரர் பூஜையைப் பார்த்துவிட்டு, பிரஸாதம் பெற்றுக்கொண்டு, எங்கள் மருமான் ஸ்ரீ சந்த்ருவின் வீட்டிற்குச் சென்றோம்.

மதிய உணவு ஆன பிறகு, சுமார் 4-30 மணிக்கு, அதிருஷ்டவசமாக, பெரியவாள் மாலை தரிசனம் கொடுப்பாரோ என்ற நம்பிக்கையில், மடத்திற்குத் திரும்பச் சென்றோம். விஷயம் அறிந்தவர்கள் அது சாத்யமில்லை என்று கூறி விட்டனர். சுமார் 5-30 மணிக்கு, எங்கள் பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது. பெரியவா, சொல்ப சமயத்திற்கு தரிசனம் தருவார் என்று அறிந்தோம். சில நிமிஷங்கள் கிடைக்காதா என்று இருந்த எங்களுக்குப் பதினைந்து நிமிஷங்கள் தடையின்றி தரிசனம் கிடைத்தது. பெரியவாளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்வாமிகள் என்னிடம் வந்து சொன்னார், ”பெரியவாளோட நூறாண்டு நிறைவு வைபவத்தின் போது, ஒரு புஸ்தகம் வெளியிடலாமென்றிருகிறோம்; பெரியவாளோடு நெருங்கிப் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள் அதில் பிரசுரமாகும்; அதில நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுத வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார். அந்த ஸ்வாமிகளை முதலில் எனக்கு யாரென்று தெரியவில்லை; அவர்தான் ‘மேட்டூர் ஸ்வாமிகள்’ என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

Saturday, 8 June 2013

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்

"அர்த்தமுள்ள இந்து மதம்” அரும்பி மலர்ந்த கதை !!!!

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.