त्वं वॆदान्तैर्विविधमहिमा गीयसे विश्वनेत-
स्त्वं विप्राद्यैर्वरद निखिलैरिज्यसे कर्मभिस्स्वैः ।
त्वं दृष्टनुश्रविकविषयानन्दमात्रावितृष्णै-
रन्तर्ग्रन्थिप्रविलयकृते चिन्त्यते यॊगिवृन्दैः ॥ ५ ॥
த்வம் வேதாந்தைர் விவிதமஹிமா கீயஸே விச்வநேத-
த்வம் விப்ராத்யைர் வரத நிகிலைரிஜ்யஸே கர்மபிஸ்ஸ்வை: |
த்வம் த்ருஷ்டானுச்ரவிக விஷயாநந்தமாத்ராவித்ருஷ்ணை-
அந்தர் க்ரந்தி ப்ரவிலயக்ருதே சிந்த்யஸே யோகி ப்ருந்தை: || 5 ||
விஷயங்கள் இருவகை. ஒன்று இவ்வுலகில் அனுபவிக்கப்படுகின்ற அன்னபானங்களும், வீடு, பணம், பெண் பிள்ளை இவைகளும். மற்றொன்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட அப்ஸரஸ் முதலிய ஸ்வர்கக போகங்கள். முன் சுலோகத்தில் சொன்னபடி ஈசுவரன் வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத பரசிவஸ்தானத்தில் இருப்பாராயின் அவரை நாம் உபாஸிப்பது எப்படி? உன் மஹிமைகள் உபநிஷத்துக்களால் பலவாறு போதிக்கப்படுகின்றன. வர்ண தர்மங்களைப் பரிபாலிக்கும் பிராமணர் க்ஷத்திரியர் முதலியவர்களால் நீ கர்மாவினாலேயே உபாஸிக்கப்படுகிறாய். யோகிகளோ விஷய போகங்களில் இச்சையற்றவர்களாய் உன்னை தியானம் மூலமாய் உபாஸிக்கிறார்கள். தியானத்தினால் அவர்கள் சரீரத்தினுள்ளிருக்கும் மூலாதாரம் மணிபூரம் ஆஜ்ஞாஸ்தானங்களிலிருக்கும் நாடிகளின் செடுக்குகளைத் தெறிக்கச் செய்து முக்தியை சாதித்துக் கொள்ளுகின்றனர். ஞான மார்க்கத்தினாலும் கர்ம மார்க்கத்தினாலும் யோகமார்க்கத்தினாலும் நீயே ஆராதிக்கப்பட்டு மோக்ஷ ஸாம்ராஜ்யமளிப்பவன் என்பது.
tvaM vEdAntairvividhamahimA gIyase vishvaneta-
stvaM viprAdyairvarada nikhilairijyase karmabhissvaiH |
tvaM dRuShTanushravikaviShayAnandamAtrAvitRuShNai-
rantargranthipravilayakRute chintyate yOgivRundaiH || 5 ||
O Lord of the Universe! Your innumerable glories are sung in the upaniShads.. O Bestower of boons, You are worshipped by Brahmanas and others by the performance of the rites assigned to them. You are meditated upon by yogis who have developed distaste for all enjoyments in this world and in other (higher) worlds, for the loosening of the internal knot (of bondage).
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment