Scroll down to read in English
வாவி யெல்லாம் தீர்த்தம்
மணல் எல்லாம் வெண்ணீறு
காவணங்களெல்லாம் கணநாதர்
பூவுலகில் ஈது சிவலோகம் என்றென்றே
மெய்த்தவத்தோர் ஓதும் திருவொற்றி ஊர்.
- பட்டினத்தடிகள்
பொருள்: மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும்.