Contact Us

Name

Email *

Message *

Tuesday 29 November 2016

Soundarya Lahari - Sloka: 50


Beneficial Results: 
தூர தர்சனம் Seeing afar, Curing of small pox.
Poetic instincts enhanced. Creative skills.

कवीनां संदर्भस्तबकमकरन्दैकरसिकं
कटाक्षव्याक्षेपभ्रमरकलभौ कर्णयुगलम् ।
अमुञ्चन्तौ दृष्ट्वा तव नवरसास्वादतरला-
वसूयासंसर्गादलिकनयनं किंचिदरुणम् ॥ ५०॥

மூன்றாவது கண் [தூர தர்சனம்; அம்மை நோய் நிவாரணம்]

கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம் 
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம் |
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம் || 50 ||

கவிஞர்களது க்ரந்தங்களான புஷ்பங்களில் இருக்கும் மகரந்தத்தை பருகுவது போல உனது காதுகள் அமைந்திருக்கிறது. அந்த க்ரந்தங்களில் சொல்லப்பட்ட நவரசங்களையும் பார்க்க உனது இரு கண்களும் தேனிக்கள் போல சுற்றிச் சுற்றி வருகின்றது. உனது இரு கண்களைப் பார்த்த நெற்றிக் கண்ணானது பொறாமையால் சிவந்து காணப்படுகிறது என்கிறார்.

அதாவது, அன்னையின் காதுகள் நீண்டு இருப்பதும், அவளை துதிக்கும் பக்தர்களது கோரிக்கைகளை எப்போதும் அக்காதுகள் கேட்டுக் கொண்டு இருப்பதையும், அவளது கண்கள் பக்தர்களுக்கு கருணை மழை பொழிந்த வண்ணம் இருப்பதாகவும், அக்னி ரூபமான நெற்றிக் கண் தூர்-மதியுடையவர்களை சுட்டெரிக்க ஏதுவாக சிவந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கிஞ்சித் அருணம் - கொஞ்சம் சிவப்பாக; அளிக நயனம் - நெற்றிக்கண்; அஸுயாஸம்ஸ்ர்காத் - பொறாமையால்; கடாக்ஷ வ்யக்ஷேப - கடாக்ஷிக்கும் கண்களாகிய; ப்ரமர கலபெள - தேனிக் குஞ்சுகள்; தவ கர்ணயுகளம் - உன்னிரு காதுகளும்; மகரந்தைக ரஸிகம் - மகரந்தத்திலிருக்கும் தேனைப் பருக விரும்பும்; ஸந்தர்பஸ்தபக - மலர்ச் செண்டினைப் போன்ற கர்ந்தங்கள்; கவீனாம் - கவிகள்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 40, 73, 101

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • த்ரிநயனா 
  • வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ 
  • மீநாபலோசநா 
  • காவ்யாலாப விநோதிநீ

kavīnāṃ sandarbha-stabaka-makarandaika-rasikaṃ
kaṭākṣa-vyākṣepa-bhramarakalabhau karṇayugalam |
amuñcntau dṛṣṭvā tava navarasāsvāda-taralau
asūyā-saṃsargā-dalikanayanaṃ kiñcidaruṇam || 50 ||

Thine two long eyes , Oh goddess,
Are like the two little bees which want to drink the honey,
And extend to the ends ,
With a pretense of side glances,
To thine two ears,
Which are bent upon drinking the honey,
From the flower bunch of poems.
Presented by your devotees,
And make thine third eye light purple,
With jealousy and envy.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:50 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1152 - 1158 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment