Contact Us

Name

Email *

Message *

Sunday 14 February 2016

Atmarpanastuti - Sloka 8


अर्कद्रॊणप्रभृतिकुसुमैरर्चनं ते विधॆयं 
प्राप्यं तॆन स्मरहर फलं मॊक्षसाम्राज्यलक्ष्मीः । 
एतज्जानन्नपि शिव शिव व्यर्थयन् कालमात्म- 
न्नात्मद्रॊहि करणविवशॊ भूयसाधःपतामि ॥ ८ ॥

அர்க்கத்ரோணப்ரப்ருதிகுஸுமைரர்ச்சனம் தே விதேயம் 
ப்ராப்யம் தேன ஸ்மரஹர பலம் மோக்ஷ ஸாம்ராஜ்யலக்ஷ்மீ: | 
ஏதஜ்ஜானன்னபி சிவ சிவ வ்யர்த்தயன் கால மாத்மன் 
ஆத்மத்ரோஹீ கரணவிவசோ பூயஸாத: பதாமி || 8 ||

உன்னை ஆராதிப்பது அடியேனுக்கு இன்றும் அப்படி ஸ்ரமமான காரியமில்ல்லை. எருக்கு தும்பை முதலிய மணமற்ற, யாரும் வேண்டாத, எங்கும் கிடைக்கக்கூடிய புஷ்பங்களால் உன்னை அர்ச்சனை செய்தால் போதும். இவ்வளவு ஸுலபமான ஆராதனைக்கு ஏற்படும் பலமோ மோக்ஷஸாம் ராஜ்யமே. இதை அறிந்திருந்தும் மோக்ஷத்தைத் தேடிக்கொள்ளாத நான் ஆத்ம த்ரோஹியாகிறேன் என்பதில் ஐயமென்ன? சிவ சிவ என்ன பரிதாபம், நான் வீணாகக் காலத்தை விஷயசபலனாகவே கழித்து வருகிறேன். அதன் பயனாக அதோகதியை அடைகிறேன். உலகத்தில் கடுமையான க்லேசத்தை அனுபவிக்கும் ஒருவன் அதினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டு மஹத்தான சுகத்தையும் அடைய வெகு எளிய வழியை அறிந்திருந்தும் அதற்குப் பிரயத்தினம் செய்யாமல் துக்கத்திலேயே உழன்று கொண்டிருப்பானாகில் அவன் எவ்வளவு மூடன்!

arkadrONaprabhRutikusumairarchanaM te vidhEyaM 
prApyaM tEna smarahara phalaM mOkShasAmrAjyalakShmIH | 
etajjAnannapi shiva shiva vyarthayan kAlamAtma- 
nnAtmadrOhi karaNavivashO bhUyasAdhaHpatAmi || 8 ||

Your worship can be performed even with wild flowers such as arka and drona. By that the supreme bliss of liberation can be attained, O destroyer of Cupid. In spite of knowing this, alas! I, traitor to myself, am wasting my time, being under the control of my senses, and am falling lower and lower, O supreme Self!



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment