Contact Us

Name

Email *

Message *

Wednesday 11 November 2015

Soundarya Lahari - Sloka: 24


Beneficial Results: 
ஸர்வ பய நிவாரணம் Activation of ajna chakra.
Immunity from evil spirits, demons and curses of deceased ancestors and incurable diseases.


जगत्सूते धाता हरिरवति रुद्रः क्षपयते
तिरस्कुर्व-न्नेतत् स्वमपि वपु-रीश-स्तिरयति ।
सदा पूर्वः सर्वं तदिद मनुगृह्णाति च शिव-
स्तवाज्ञा मलम्ब्य क्षणचलितयो र्भ्रूलतिकयोः ॥ २४ ॥

தேவியின் புருவ அமைப்பு [ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்]

ஜகத்ஸுதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபுரீசஸ்த்-திரயதி |
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிகயோ || 24 ||

இதன் ஆரம்பமே 'பஞ்ச க்ருத்ய பராயணா' என்னும் நாமம் தான். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம் (மாயை/மறைத்தல்), அனுக்ரஹம் என்னும் ஐந்து தொழில்களை முறையே ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள் அம்பாள். இதை இந்த ஸ்லோகத்தில் பின்வருமாறு சொல்கிறார் ஆச்சார்யார். ஹே பராசக்தி!, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களை செய்யும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் தன்னுள் மறைத்துக் கொண்டு தன்னையும் மறைத்துக்கொள்கிறான் ஈசானன். ஸதாசிவன் என்னும் பரபிரம்ஹமானது கொடி போன்ற உன் புருவ அசைவினை ஆதாரமாகக் கொண்டு ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரன், மஹேசன் ஆகியோரது செயல்கள் செய்விக்கிறான்.

தா(4)தா - ப்ரம்மா; ஜகத்-ஸுதே - உலகை படைக்கும்; ஹரி-ரவதி = ஹரி-அவதி - அதாவது ஹரி ரக்ஷிக்கும்; க்ஷபயதே - அழிக்கும்; திரஸ்குர்வன் ஏதத் - திரோதானத்தால் இவற்றை மறைக்கும் (மாஹேசன்); ஸதா பூர்வ: சர்வம் - ஸதா என்னும் அடைமொழியினை கொண்ட சிவனான ஸதாசிவன்; க்ஷண-சலிதயோ: - நொடி நேர அசைவினால்; ப்ரூலதிகயோ - புருவங்கள் என்னும் கொடிகள் (ப்ரூ - அப்படின்னா புருவங்கள் ("ப்ரூவோர் மத்யே சகஸ்ராக்ஷி" அப்படிங்கறது தெரிந்திருக்கும்); லதை-லத்திகா அப்படிங்கறதெல்லாம் கொடிங்கற அர்த்தத்தில் வரும்); ஆஜ்ஞாம் - ஆணை; ஆலம்ப்ய - அனுசரித்து; அனுக்ருஹ்ணாதி - அனுக்கிரஹம்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 13

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸ்ருஷ்டிகர்த்ரீ 
  • ப்ரஹ்மரூபா 
  • கோப்த்ரீ 
  • கோவிந்தரூபிணீ
  • ஸம்ஹாரிணீ 
  • ருத்ரரூபா 
  • திரோதாநகரீ
  • ஈச்வரீ
  • ஸதாசிவா
  • அநுக்ரஹதா 
  • பஞ்சக்ருத்யபராயணா
  • ஜகத்தாத்ரீ

jagatsūte dhātā hariravati rudraḥ kṣapayate
tiraskurva-nnetat svamapi vapu-rīśa-stirayati |
sadā pūrvaḥ sarvaṃ tadida manugṛhṇāti ca śiva-
stavāṅñā malambya kṣaṇacalitayo rbhrūlatikayoḥ || 24 ||

Brahma creates the world,
Vishnu looks after it,
Shiva destroys it,
Easwara makes them disappear,
And also disappears himself,
And Sadshiva blesses them all,
By your order given to him,
By a momentary move of your eyebrows.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:24, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1045 -1050 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment