Contact Us

Name

Email *

Message *

Wednesday 18 November 2015

Bhaja Govindaṁ - Verse 13


काते कान्ता धन गतचिन्ता 
वातुल किं तव नास्ति नियन्ता । 
त्रिजगति सज्जनसं गतिरैका 
भवति भवार्णवतरणे नौका ॥ १३॥

तुम्हें पत्नी और धन की इतनी चिंता क्यों है, क्या उनका कोई नियंत्रक नहीं है| तीनों लोकों में केवल सज्जनों का साथ ही इस भवसागर से पार जाने की नौका है.

kāte kāntā dhana gatacintā
vātula kiṁ tava nāsti niyantā |
trijagati sajjanasaṁ gatiraikā
bhavati bhavārṇavataraṇe naukā  || 13 ||

Oh mad man ! Why this engrossment in thoughts of wealth ? Is there no one to guide you ? There is only one thing in three worlds that can save you from the ocean of samsAra, get into the boat of satsanga, company of good people, quickly.

காதே காந்தா தன கதசிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி சஜ்ஜனசம் கதிரேகா
பவதி பவார்ணவதரணே நௌகா || 13 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

காற்றைப் போல் அலைபவனே! மனைவியைப் பற்றியும் பொருளைப் பற்றியுமே மட்டும் ஏன் சிந்தனை? உன்னை அடக்குபவர் இல்லையா? பிறவிக் கடலைக் கடக்கும் படகு மூவுலகிலும் நல்லோருடைய கூட்டுறவாகிய ஒன்றேதான் ஆகும்.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

மந்தியென பூதமென
வால்சுருண்ட குக்கலென
மாயநிலை கொண்ட மதியே!

வைரமணிப் பொன்னழகும்
வாசமனை யாளுறவும்
வந்துமறை கின்ற நிதியே!

வெந்தழிந்து நீறுபடும்
மேனியிது சாகுமுனம்
வேண்டுவது நல்ல கதியே!

மேலவரைச் சேருவதும்
நூலவரின் நட்புறவும்
விண்ணமரச் செய்யும் விதியே!

ஞாலமெனும் மாகடலில்
நீகடக்கும் தோணியினை
நாடுவதே நல்ல சுகமே!

நாயகனைப் பற்றிவிட
நல்லகரை சேர்ந்துவிட
நாள்முழுதும் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment