Contact Us

Name

Email *

Message *

Wednesday 25 November 2015

Bhaja Govindaṁ - Verse 14


Stanza attributed to Padmapada. 

जटिलो मुण्डी लुञ्छितकेशः 
काषायाम्बरबहुकृतवेषः । 
पश्यन्नपि चन पश्यति मूढः 
उदरनिमित्तं बहुकृतवेषः ॥ १४॥

बड़ी जटाएं, केश रहित सिर, बिखरे बाल , काषाय (भगवा) वस्त्र और भांति भांति के वेश ये सब अपना पेट भरने के लिए ही धारण किये जाते हैं, अरे मोहित मनुष्य तुम इसको देख कर भी क्यों नहीं देख पाते हो.

jaṭilo muṇḍī luñchitakeśaḥ 
kāṣāyāmbarabahukṛtaveṣaḥ |
paśyannapi cana paśyati mūḍhaḥ 
udaranimittaṁ bahukṛtaveṣaḥ || 14 ||

There are many who go with matted locks, many who have clean shaven heads, many whose hairs have been plucked out; some are clothed in orange, yet others in various colours --- all just for a livelihood. Seeing truth revealed before them, still the foolish ones see it not.

ஜடிலோ முண்டி லுஞ்சிதகேஶ: 
காஷாயாம்பரபஹுக்ருதவேஷ:
பஷ்யன்னபி சந பஷ்யதி மூட: 
உதரநிமித்தம் பஹுக்ருதவேஷ: || 14 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

சடைதரித்தவனோ, தலைமழித்தவனோ, கேசத்தைக்கத்தரித்துக் கொண்டவனோ, காவித்துனியால் வெகுவாய் வேஷம் போட்டவனோ, எவனாயிருந்தாலும் மதியில்லாதவன்.  பார்த்தும் பார்ப்பதில்லை.  வெகுவாக வேஷமெல்லாம் வயிற்றின் பொருட்டே ஆகிறது.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

காவியுடை மொட்டையோடு
கையிலொரு பாத்திரமும்
காட்டுவது என்ன துறவோ!

கண்ணியமும் இல்லை அதில்
புண்ணியமும் இல்லை வெறும்
கட்டைகளின் வேஷ மலவோ!

கோவணமும் நீள்சடையும்
கோஷமிடும் வாய்மொழியும்
கோமுனிவன் ஆக்கி விடுமோ!

கும்பியை நிரப்பவொரு
செம்புசுமப்பா ரவர்க்குக்
கோவிந்தன் காட்சி வருமோ!

நம்பியவன் நன்னெறியும்
நல்வழியும் நல்லுறவும்
நாடுவதில் உண்டு நலமே!

நாத்திகரைக் கூடவொரு
தோத்திரம் படிக்கவைத்த
நாயகனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment