Contact Us

Name

Email *

Message *

Monday 16 November 2015

German Bell of Chidambaram சிதம்பரம் ஜெர்மானிய மணி

விபூதிப் பட்டை, முக்கிளை வில்வம் இரண்டும் 
சிவனாரின் முகத்தை நினைவுபடுத்துகின்றன.
Tiryak pundaram and inverted Vilva patram 
resemble the face of Lord Shiva.

Scroll down to read in English

திருச்சிற்றம்பலம்

ஜெர்மனி நாட்டின் டாக்டர் கெண்டர் ஒரு முறை சிதம்பரம் வந்தார். நம் இந்து மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட அந்த டாக்டர் யோகா, தியானம் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். அப்போது இங்கே 'ஓம்' என்று ஒலிக்கும் மணியின் ஓசையைக் கேட்டார்.  ஜெர்மனியில் ஒரு நாள் யோகப்பயிற்சியில் இருக்கும்போது இதேபோல 'ஓம்' என்று ஒலி கேட்டது நினைவுக்கு வந்தது. அப்போதுதான் அவருடைய நெடுநாள் கேள்விக்கும் பதில் கிடைத்தது.

அவர் 'சதுர்வேத' ஸ்ரீ பரமேஸ்வர தீக்ஷிதரிடம் அன்பு கொண்டவர்.  இருவரும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்போது முன்னர் ஒலிக்கக் கூடிய மணி பற்றிய பேச்சு வந்தது.  அதில் அந்த மணி சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது எனக் கேட்டதும் டாக்டருக்கு தம் காலத்தில் புதிதாக ஒரு மணியை ஜெர்மனியில் செய்துகொண்டு வந்து இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  அதன்படி மணி செய்யக்கூடிய கம்பெனியில் சென்று விவரத்தைக் கூற, ஒரு அதிசயம் நடந்தது.  அந்த மணி செய்யும் கம்பெனியின் உரிமையாளரின் மனைவி சில நாட்கள் முன்னதாக சிதம்பரம் சென்றபோது தானும் அந்த மணியின் சிறப்பையும், ஓம் என்று ஒலிக்கும் மணியையும் பார்த்ததாகவும், ஒலியைக் கேட்டதாகவும் சொன்னார். அதனால் உடனடியாக தம் கம்பெனியில் மணி செய்து தர ஒப்புக்கொண்டார் உரிமையாளர்.

மணி சம்பந்தமான ஒப்பந்தங்கள் முறையாக போடப்பட்டு சுமார் 1991ஆம் ஆண்டில் அதற்கான முயற்சியில் இறங்கியது அந்த கம்பெனி.  அவர்கள் அப்போது செய்த மணிகள் சுமார் ஏழு.  அதில் இந்த மணி மட்டும்தான் மிகப் பெரியது. ஒன்றரை டன் (1500 கிலோ) எடை கொண்டது.

பின்னர் முறைப்படி மணியை வார்க்கும்போது அவரவர்கள் நேரப்படி உலகில் உள்ள எல்ல கோயில்களிலும் வேத பாராயணம் மற்றும் திருமுறை பாராயணம் செய்து மிகச்சிறந்த முறையில் வெற்றிகரமாக வார்க்கப்பட்டது. அந்த மணியில் ஒருபுறம் ஆங்கிலத்தில் ஓம், விபூதிப் பட்டை, முக்கிளை வில்வம், ஒன்றையொன்று பார்த்தபடி இரண்டு நந்திகள், அதனடியில் 'ஜெர்மானிய பக்தரிடமிருந்து' என்றும் மறுபுறம் மிக அழகான நடராஜர் உருவம், அதனடியில் 'சிதம்பரம் நடராஜருக்கு' என்று அச்சில் பதித்து கப்பல் மூலமாக அனுப்பிவிட்டு டாக்டர் தகவல் தந்தார்.

அங்கே ஒரு திருப்பம்.  கப்பலில் மும்பை துறைமுகத்திர்க்கு வந்த மணியை (சுமார் 3.5 லட்சம் ரூபாய்) சுங்க வரி கட்டி எடுத்துக்கொள்ளச் சொல்லி தகவல் வந்தது திரு.பரமேஸ்வர தீக்ஷிதருக்கு.  அவர், அதுவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தானமாக வந்துள்ளது, அதைப் பணம் கட்டி எடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை என்பதை டெல்லி சென்று (1998-99) அப்போது மத்தியில் ஆண்ட பா.ஜ.க வின் முக்கிய மந்திரிகளைப் பார்த்து விபரம் சொன்னார். அன்றைய பாரதப் பிரதமர் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் ஒப்புதலின்படி முறையாக அவார்களிடம் எந்த பணமும் வாங்காமல் கொண்டு சேர்க்கும்படி உத்தரவிடப்பட்டது.

மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சில பொருட்கள் வந்தன. அவற்றுடன் சேர்த்து ஸ்ரீ நட்வர்லால் என்கிற அதிகாரியிடம் மணியை கோயிலில் கொண்டு ஒப்படைத்துவிட்டு வர ஆணையிடப்பட்டது. அவரும் அவ்வாறே செய்தார்.

பின்னர் அதற்கான இடத்தை முடிவி செய்ய ஸ்வாமி சன்னதியின் வடகிழக்கு மூலையிலே சில மாதங்கள் வைத்திருந்து தீக்ஷிதர்கள் டாக்டரிடம் 'நீங்கள் வந்து அந்த மணியைப் பொறுத்தவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், உங்களை எதிர்பார்க்கிறோம்' என்றனர்.  அந்த டாக்டரோ 'அந்த மணியை என்று அனுப்பினேனோ அன்றே ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன், இனிமேல் என்னை எதிர்பார்க்கவேண்டாம்' என்று சொல்லிவிட்டார்.

பிறகு என்.எல்.சி நிறுவனத்திலிருந்து பொறியாளர்கள் வந்து கோயில் மூன்றாம் பிரஹாரத்தில் த்வஜஸ்தம்பம் (ஆண்டிற்கு இருமுறை பிரம்மோத்ஸவத்திற்கு கொடி ஏற்றப்படும்) அருகில் மண்டபத்தில் பொருத்திவிட்டுச் சென்றார்கள்.  அன்று முதல் தினந்தோறும் ஆறு கால வழிபாட்டின்போதும் அந்த மணி 'ஓம்' என்று இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.


Dr.Kenter from Germany once visited Chidambaram Sri Nataraja Temple.  He had great belief in sanatana dharma and a practitioner of yoga and meditation. When he heard the temple bell sound 'AUM', he was reminded of hearing this sound during his meditaion in Germany and felt his long time question was answered. During a discussion with Chaturveda Sri Parameshvara Deekshitar, he understood the temple bell was hundred years old and he wanted to make a new bell in Germany and donate it to the Lord. 

When he informed the German company regarding this, the wife of the company's owner shared her experience of having seen the bell and heard the sound 'AUM' during her visit to Chidambaram. They happily agreed to make the bell for the Lord after making necessary agreements in the year 1991. A total of seven bells were made of which this bell is the biggest weighing 1500 kgs.

While making this bell in its mould, Veda parayanam and Thirumurai parayanam was organized and done in all the Hindu temples across the world. On one side of the bell the word 'OUM', Vibhuti mark (tiryak pundram), inverted Vilva patram, a pair of Nandhi Bhagwan facing each other, below that the words 'FROM A GERMAN DEVOTEE' and on the other side, Lord Nataraja's image, below that the words 'TO LORD NATARAJA AT CHIDAMBARAM' was engraved. Dr.Kenter shipped the bell and informed the temple authorities.

Sri Parameshvara Deekshitar was informed that the bell has arrived at Mumbai (3.5 lakhs) pending customs duty. As the bell has come as donation to the temple, he expressed his difficulty in this regard and sought the help of concerned BJP ministry (1998-99) in New Delhi. Sri Atal Bihari Vajpayee, Prime minister of India made it duty free. The bell was sent as part shipment with goods to the central government owned Neyveli Lignite Corporation (NLC) and delivered at Chidambaram temple via its official Sri Natwarlal.

The bell was kept at the north-east corner of the temple for few months for deciding the place of installation. The temple authorities requested Dr.Kenter to participate in the installation but he said 'I have offered the bell to the Lord, hence you please proceed'. The bell was installed at the third praharam by engineers from NLC at the mandapam near Dwajastampam (flag hoisted here twice a year for Brahmotsavams). Since then the bell sounds 'OUM' daily during all the six-kala pujas.



நன்றி: ஸ்ரீ வேங்கடேசன் தீக்ஷிதர் (தமிழ் மூலம்) 

No comments:

Post a Comment