Contact Us

Name

Email *

Message *

Saturday 9 November 2013

திருவண்ணாமலை மஹா கார்த்திகை தீபம்


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அனைத்து விழாக்களை காட்டிலும் கார்த்திகை தீப திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழா இவ்வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி 2015-ல் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கார்த்திகை பிரம்மோத்சவம் என்றும் அழைக்கப்பட்டு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இதை துவாஜரகோதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் ஊர்வலமாக காலையிலும் மாலையிலும் எடுத்து சொல்வது வழக்கமாக உள்ளது. மேலும் பஞ்ச மூர்த்திகளான கணபதி, முருகன், சண்டீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், மற்றும் பார்வதியை ஊர்வலம் எடுத்து செல்வது நடைமுறையில் உள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஆராதனை முடிந்தவுடன் வெவ்வேறு

வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் எடுத்துச்செல்லப்படுகிறார்கள். கார்த்திகை தீப திருவிழாவின் இரண்டாம் நாளில் சந்திரசேகர பெருமானை சூரிய வாகனத்தில் எடுத்து செல்வதில் துவங்கி இரவில் பெரியநாயகர் பெருமானை இந்திரவிமானத்தில் (இந்திரதேவன் ரதத்தில்) ஊர்வலமாக எடுத்துச்செல்வதுடன் முடிகிறது.

கார்த்திகை தீப திருவிழாவின் மூன்றாம் நாளில் பெரியநாயகர் பெருமான் சிம்ம வாகனத்தில் (சிங்க தேரில்) ஊர்வலம் இரவில் தொடங்கும்.

நான்காம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் காமதேனு வாகனத்தில் ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது. விருட்சம் தரும் கற்பக விருட்ச மரமுடன் பவனி வருவார். இக்கற்பக விருட்ச மரமானது வரும் பக்தர்களுக்கு அவர்கள் பிராத்தனையை நிறைவேற்றும் என்பது மக்களிடையே நிலவும் பரிபூரண நம்பிக்கை.


கார்த்திகை தீப திருவிழா ஐந்தாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக செல்வார். 25 அடியுள்ள இந்த வாகனம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த வாகனத்தில் 17 அடி கொண்ட அழகிய கொடையுடன் ஊர்வலம் செல்வது பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியை தரும்.

ஆறாம் நாள் கார்த்திகை திருவிழாவில் பெரியநாயகர் அலங்கரித்த வெள்ளி வாகனத்தில் ஊர்வலம் செல்வதை பார்க்க பக்தர்கள் கூட்டம் திரளாக காத்திருக்கும்.

ஏழாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவில் பெரியநாயகர் பெருமான் மரத்தால் செய்யப்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்ட அகலமான ரதத்தில் ஊர்வலமாக செல்வார்.

கார்த்திகை தீப திருவிழாவின் எட்டாம் நாளில் பெரியநாயகர் பெருமான் இரவில் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வருவார். இந்த குதிரை வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் குதிரையின் நான்கு கால்களும் தரையை தொடாமல் ஆகாயத்தில் மிதக்கும். இதை மக்கள் வியப்புடன் பார்க்க காத்திருப்பார்கள்.

கார்த்திகை திருவிழாவின் ஒன்பதாம் நாளில் பெரியநாயகர் கைலாச வாகனத்தில் ஊர்வலம் செல்வதை காண பக்தர்கள் காத்திருப்பார்கள். இவ்வூர்வலம் பெரும்பாலும் இரவில் நடப்பது வழக்கம்.

பத்தாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவின் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை ஆறு மணியளவில் மலை உச்சியில் மஹா தீபம் தீபம் ஏற்றப்படும். இத்தீபம் அருணாச்சலேஸ்வரரின் உருவத்தை குறிப்பதால் உலகம் எங்கும் உள்ள பக்தர்கள் இக்காட்சியை காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இரவில் பெரியநாயகர் பெருமான் தங்கத்தால் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறார். இதை காண மக்கள் திரளாக காத்திருக்கிறார்கள். இந்த தரிசனம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது.

கார்த்திகை தீப திருவிழாவின் பதினொன்னாம் நாள் அருணாச்சலேஸ்வரர் தெப்ப குளத்தில் தெப்பத்தில் வருவது தெப்பத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் பன்னிரெண்டாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவில் கிரிவலம் வருவது வழக்கமாக நடைபெறுகிறது. இதை கிரி பிரதட்சனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவுடன் கார்த்திகை தீபவிழா இனிதே முடிவடைகிறது. பக்தர்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் திருவருளை பெற்று மன நிறைவுடன் அவர்கள் ஊரை நோக்கி திரும்பி செல்கின்றனர்.



நன்றி: http://www.thiruvannamalai.net

No comments:

Post a Comment