गुरुचरणाम्बुज निर्भर भक्तः
संसारादचिराद्भव मुक्तः ।
सेन्द्रियमानस नियमादेवं
द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥ ३१॥
गुरु के चरण कमलों का ही आश्रय मानने वाले भक्त बनकर सदैव के लिए इस संसार में आवागमन से मुक्त हो जाओ, इस प्रकार मन एवं इन्द्रियों का निग्रह कर अपने हृदय में विराजमान प्रभु के दर्शन करो.
gurucaraṇāmbuja nirbhara bhakataḥ
saṁsārādacirādbhava muktaḥ |
sendriyamānasa niyamādevaṁ
drakśyasi nija hṛdayasthaṁ devam || 31 ||
Oh devotee of the lotus feet of the Guru ! May thou be soon free from Samsara. Through disciplined senses and controlled mind, thou shalt come to experience the indwelling Lord of your heart !
குருசரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராதசிராத்பவ முக்த: |
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம் || 31 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
குருவின் திருவடித் தாமரைகளில் திடமான பக்தி உடையவனாகிப் பிறவித் தளையினின்று விரைவில் விடுபடுவாயாக. இங்ஙனம் இந்திரியங்களுடன் கூட மனத்தையும் அடக்கி உன்னுடைய இருதயத்தில் உறையும் தெய்வத்தைக் காண்பாய்.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
ஆதிகுரு சந்நிதியில்
வேதமொடு பூஜைசெய்து
பாதமலர்ப் பக்தி கொள்ளடா!
ஆயிரம் பிறப்பெடுக்கும்
பாபநிலை தன்னைவிட்டு
ஆண்டவனைச் சேர்த்து கொள்ளடா!
நீதிநெறி கண்டவரும்
நேர்நெறியில் நின்றவரும்
வேதனுக்குச் சொந்த மல்லவா!
நீளுலகில் ஈசன்ஒளி
காணும்உந்தன் ஊனவிழி
வேறுவழி இல்லை யல்லவா!
ஏதுமிலை என்றவர்க்கு
என்னஇலை என்றுவரும்
மாதவனைப் பாடு தினமே!
இந்துமதச் சங்கரனின்
சிந்தனையை நெஞ்சில்வைத்து
ஈசன்புகழ் பாடு மனமே!
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை மற்றும் கவிதையாக்கம் இத்துடன் நிறைவுபெறுகிறது. அடுத்து வரும் கடைசி இரண்டு பாடல்கள் (32,33) பெரும்பாலான பதிப்புகளில் இடம்பெறாதவை ஆகும்.
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment