Contact Us

Name

Email *

Message *

Sunday, 6 March 2016

Atmarpanastuti - Sloka 11


उल्लंघ्याज्ञामुडुपतिकलाचूड तॆ विश्ववन्द्य
त्यक्ताचारः पशुवदधुना मुक्तलज्जश्चरामि ।
एवं नानाविधभवततिप्राप्तदीर्घापराधः
क्लॆशाम्भॊधिं कथमहमृतॆ त्वत्प्रसादात् तरॆयम् ॥ ११ ॥

உல்லங்க்யாஜ்ஞாமுடுபதிகலாசூட தே விச்வவந்த்ய
த்யக்தாசார: பசுவததுனா முக்தலஜ்ஜஸ்சராமி |
ஏவம் நாநாவித பவததிப்ராப்ததீர்க்காபராத:
க்லேசாம்போதிம் கதமஹம்ருதே த்வத்ப்ரஸாதாத் தரேயம் || 11 ||

உன்னை சரணாகதி செய்யும் நான் பெரிய அபராதி என்று தெரிவித்துக்கொள்ளுகிறார். ஹேசந்த்ர கலாதரனே! உன் கட்டளைகளை மீறி நடந்தவன் நான். ஸ்ருதி ஸ்ம்ருதி புராணங்களின் மூலம் உன்னால் போதிக்கப்பட்ட கர்மாக்களையும் தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்காதவன். புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன். எல்லையற்ற துக்கக் கடலை உன் தயவின்றி வேறு எவ்விதம் நான் தாண்டப் போகிறேன்!

ullaMghyAj~jAmuDupatikalAchUDa tE vishvavandya
tyaktAchAraH pashuvadadhunA muktalajjashcharAmi |
evaM nAnAvidhabhavatatiprAptadIrghAparAdhaH
klEshAmbhOdhiM kathamahamRutE tvatprasAdAt tarEyam || 11 ||

O Lord wearing the crescent moon on Your forehead and worshipped by the whole world! Transgressing Your commands, giving up all good conduct, I am now going about shamelessly like an animal. Having thus committed so many kinds of transgressions arising from this mundane existence, how can I cross over this ocean of sorrow but for Your grace.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment