अर्थमनर्थं भावय नित्यं
नास्तिततः सुखलेशः सत्यम् ।
पुत्रादपि धन भाजां भीतिः
सर्वत्रैषा विहिता रीतिः ॥ २९॥
धन अकल्याणकारी है और इससे जरा सा भी सुख नहीं मिल सकता है, ऐसा विचार प्रतिदिन करना चाहिए | धनवान व्यक्ति तो अपने पुत्रों से भी डरते हैं ऐसा सबको पता ही है.
arthamanarthaṁ bhāvaya nityaṁ
nāstitataḥ sukhaleśaḥ satyam |
putrādapi dhana bhājāṁ bhītiḥ
sarvatraiṣā vihiā rītiḥ || 29 ||
Wealth is not welfare, truly there is no joy in it. Reflect thus at all times. A rich man fears even his own son. This is the way of wealth everywhere.
அர்தமனர்தம் பாவய நித்யம்
நாஸ்திதத: ஸுக லேஶ: ஸத்யம் |
புத்ராதபி தன பாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || 29 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
பொருளைப் பொருளாகக் கருதாமல் துன்பம் என்று எப்பொழுதும் எண்ணுவாயாக. அதில் சிறிதளவும் இன்பம் இல்லை என்பது உண்மை. பொருளைச் சேமிப்பவர்களுக்குப் பிள்ளைகளிடமிருந்தும் கூட பயம் ஏற்படுகின்றது. இதுவே எங்கும் இயல்பாக உள்ளது.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
காசுசேர்த்த மனிதர்என்றும்
கள்வருக்கு அஞ்சவேண்டும்
கண்ணைமூட முடிவ தில்லையே!
கட்டிவந்த மனைவிஅஞ்சி
பெற்றெடுத்த பிள்ளைஅஞ்சி
கண்டவர்க்கும் அஞ்சல் தொல்லையே!
காசுஎன்ற வார்த்தைஎன்றும்
குற்றமென்ற அர்த்தம்சொல்லும்
காணவேண்டும் உனது நெஞ்சமே!
காசினிக்கச் சேர்ந்தபின்பு
காசினிக்கு நீபகைவன்
காலமுற்றும் தோன்றும் வஞ்சமே!
மாசிலாத செல்வம்அந்த
மாயவனின் குழலிருக்க
வரவுதேடி என்ன இன்பமே!
வாள்முனைக் குளேஇருந்து
நூல்முனைக்கு வித்தெடுத்த
மன்னன்தன்னைப் பாடு மனமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment