Contact Us

Name

Email *

Message *

Saturday 17 March 2018

Soundarya Lahari - Sloka: 82


Beneficial Results: 
குறைவற்ற செல்வம் Abundant wealth, great prosperity.
Skills to float on water, ownership of mines and vast wealth.

करीन्द्राणां शुण्डान् कनककदलीकाण्डपटली-
मुभाभ्यामूरुभ्यामुभयमपि निर्जित्य भवती ।
सुवृत्ताभ्यां पत्युः प्रणतिकठिनाभ्यां गिरिसुते
विधिज्ञ्ये जानुभ्यां विबुधकरिकुम्भद्वयमसि ॥ ८२॥

பொன் வாழை போன்ற தொடை

கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் 
உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி |
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி || 82 ||

அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.

அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்.

பவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே!; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 74

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா
  • காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா

karīndrāṇāṃ śuṇḍān-kanakakadalī-kāṇḍapaṭalīṃ
ubhābhyāmūrubhyā-mubhayamapi nirjitya bhavati |
suvṛttābhyāṃ patyuḥ praṇatikaṭhinābhyāṃ girisute
vidhiṅñe jānubhyāṃ vibudha karikumbha dvayamasi || 82 ||

Oh daughter of the mountain,
Who knows the rules of the Vedas,
Using your two thighs,
You have achieved victory over,
The trunks of the elephant,
And the Golden pseudo stem of group of Banana plants,
And achieved victory over frontal globes,
Of Iravatha* the divine elephant,
By your holy round knees,
Which have become hard,
By repeated prostrations to your lord.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment