Contact Us

Name

Email *

Message *

Thursday 1 March 2018

Soundarya Lahari - Sloka: 81


Beneficial Results: 
ஆதிக்கம் மற்றும் அதிகாரம் Domination and authority.
Power to float on fire, freedom from fire accidents. Suitable for propitiating the planet Jupiter.

गुरुत्वं विस्तारं क्षितिधरपतिः पार्वति निजा-
न्नितम्बादाच्छिद्य त्वयि हरणरूपेण निदधे ।
अतस्ते विस्तीर्णो गुरुरयमशेषां वसुमतीं
नितम्बप्राग्भारः स्थगयति लघुत्वं नयति च ॥ ८१॥

மலை போன்ற நிதம்பம் [அக்னி ஸ்தம்பம்]

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத் 
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே |
அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச || 81 ||

தாயே!, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ள சீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.

பார்வதீ - மலையரசன் மகளே!;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ஸ்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 83

gurutvaṃ vistāraṃ kṣitidharapatiḥ pārvati nijāt
nitambā-dācchidya tvayi haraṇa rūpeṇa nidadhe |
ataste vistīrṇo gururayamaśeṣāṃ vasumatīṃ
nitamba-prāgbhāraḥ sthagayati saghutvaṃ nayati ca || 81 ||

Oh Goddess mine,
Placed just below your shoulders,
By Cupid , the God of love,
Tearing your blouse which is attached ,
To your body by the sweat,
When you think of the greatness of your Lord,
And resembling pots of Gold,
Your breasts appear to be tied by him,
Securely three times,
By the three creeper like folds.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment