Contact Us

Name

Email *

Message *

Thursday 25 May 2017

Soundarya Lahari - Sloka: 62


Beneficial Results: 
நல்ல நித்திரை Healthy constitution, contentment and tranquility.
Sound sleep for the sleepless, robust constitution and power of enticing people.


प्रकृत्या रक्तायास्तव सुदति दन्तच्छदरुचेः 
प्रवक्ष्ये सादृश्यं जनयतु फलं विद्रुमलता । 
न बिम्बं तद्बिम्बप्रतिफलनरागादरुणितं 
तुलामध्यारोढुं कथमिव विलज्जेत कलया ॥ ६२॥

உதடுகளின் அழகு [நல்ல நித்திரை]

ப்ரக்ருத்யா (ஆ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜநயது பலம் வித்ருமலதா |
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா || 62 ||

அம்பிகே!, இயற்கையாகவே சிவந்த உன்னுடைய அதரங்களுக்கு சமமாக ஒரு பொருள் ஏதாவது இருக்குமானால், அது பவழக்கொடியில் பழுத்த பழமாக இருக்கலாம். கோவைப் பழமோ உன்னிடௌய அதரத்தினது ஒளியால் உண்டான சிவப்பு நிறமுடையதாக இருப்பதால், அது உனது அதரகாந்தியின் முன் வெட்கப்படும்படியாக இருக்கிறது.

பவழக்கொடிக்கு பழம் கிடையாது, ஆகையால் அம்பாளுடைய அதரங்களுக்கு இணை ஏதுமில்லை என்று கூறுகிறார். கவிஞர்கள் சாதாரணமாக பெண்களின் அதரத்திற்குச் சமமாகக் கோவைப்பழத்தையும், பவழத்தையும் சொல்வது வழக்கம். கோவைப் பழத்திற்கு சம்ஸ்கிருதத்தில் பிம்ப-பலம் என்று பெயர். அன்னையின் அதர பிம்பத்தின் சிகப்பு நிறமானது கோவைக்கனியில் பிரதிபலிப்பதாலேயே அப்பழம் அந்த நிறத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார். ஆக, பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால் அதனி மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என்று நம்மை கற்பனையில் காணச் செய்கிறார் பகவத்பாதர். இதுவே சஹஸ்ரநாமத்தில், "நவவித்ரும பிம்ப ஸ்ரீந்யக்கார் தசனச்சதா" என்று கூறப்படுகிறது.

ஸுததி - அழகிய பல்வரிசை உடையவளே; ப்ரக்ருத்யா - இயற்கையாக; ஆரக்தாயா: - சிவந்திருக்கும்; தவ - உன்னுடைய; தந்தச் சதருசே: அதரத்தின் அழகானது; ஸாத்ருச்யம் -உபமானமாகும்; ப்ரவ்க்ஷ்யே - சொல்லுகிறேன்; வித்ருமலதா - பவழக்கொடி; பலம் - பழம்; ஜயநது - உண்டாக்கும்; பிம்ப பலம் - கோவைப் பழம்; தத் பிம்ப ப்ரதிபலந ராகாத் - உதட்டின் பிரதி பிம்பத்தால் ஏற்பட்ட நிறத்தில்; அருணிதம் - சிவப்பாக; கலயா - சிறிதளவு; துலாம் - சமமாக இருக்கும் தன்மை; அத்யாரோடும் - அடைவதற்கு; கதம் ந விலஜ்ஜேந - ஏன் வெட்கப்படாது?

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 38

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • நவவித்ரும  பிம்பஸ்ரீந்யக்காரி  ரதநச்சதா 

prakṛtyā‌உ‌உraktāyā-stava sudati dandacchadaruceḥ
pravakṣye sadṛśyaṃ janayatu phalaṃ vidrumalatā |
na bimbaṃ tadbimba-pratiphalana-rāgā-daruṇitaṃ
tulāmadhrāroḍhuṃ kathamiva vilajjeta kalayā || 62 ||

Oh goddess who has beautiful rows of teeth,
I tried to find a simile to your blood red lips,
And can only imagine the fruit of the coral vine!
The fruits of the red cucurbit,
Hangs its head in shame,
On being compared to your lips,
As it has tried to imitate its colour.from you,
And knows that it has failed miserably.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment