Contact Us
Home » Archives for November 2016
Tuesday, 29 November 2016
Sunday, 27 November 2016
Saturday, 26 November 2016
Sunday, 20 November 2016
Monday, 14 November 2016
Soundarya Lahari - Sloka: 49
Beneficial Results:
ஸர்வ ஜயம் Victory in everything.
Discovery of hidden treasures, gaining of lost property. Ability to clear misunderstanding of situations and people. Great wisdom.
Discovery of hidden treasures, gaining of lost property. Ability to clear misunderstanding of situations and people. Great wisdom.
विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः
कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका ।
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया
ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥ ४९॥
Sunday, 13 November 2016
Saturday, 12 November 2016
Sunday, 6 November 2016
Saturday, 5 November 2016
அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. ஐந்தாம் மற்றும் நிறைவுப் பகுதி
1951 ஆகஸ்ட் 28, காயத்ரி ஜபம். மரகதம்மா அன்று சமையலை தான் கவனித்துக் கொள்வதாகக் கூறி சமையல் செய்பவரை வீட்டில் உள்ள மற்ற ஆண்களுடன் காயத்ரி ஜபம் செய்ய அனுப்பினார். நைஷ்டிக பிரம்மசாரியான அவர் காபி போடுவதற்காக ஒரு பெரிய பாத்திரம் நிறைய தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார். கொல்லைப்புறத்தில் உள்ள பூஜையறை முற்றத்தில் கோலம் போடுவதற்காக மரகதம்மா சென்றார். அங்கேதான் அனைவரும் அமர்ந்து பஜனை செய்வது வழக்கம். அங்கு இரு மரங்களுக்கிடையே ஒரு மேடை இருந்தது. முற்றத்தின் கதவை திறந்ததும் கண்ட காட்சியானது அவரை சிலையாக்கியது. தன் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அங்கே மேடையில் தண்டபாணியின் கையை பிடித்துக்கொண்டு சாக்ஷாத் ஸ்ரீ ரமண பகவானே தான் எப்போதும் அமர்ந்திருப்பதுபோல் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
Friday, 4 November 2016
அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. நான்காம் பகுதி - ஸ்ரீ ரமண தரிசனம்
திருவண்ணாமலை விஜயம்
1950ம் வருடம் மார்ச் 27ம் தேதி மரகதம்மாவின் நாத்தனாரும் இன்னும் சில பெண்களும் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும் ரமண மஹரிஷியையும் தரிசிக்க திட்டமிட்டு மரகதம்மாவையும் உடன் வர அழைத்தனர். திருவண்ணாமலையை அடைந்தபோது இரவு பத்து மணியாகிவிட்டது. கோயிலுக்குச் சென்றபோது அவர்களை வெளிப் பிரஹாரத்தில் சந்தித்த சிவாச்சாரியர்கள், அர்த்தஜாம பூஜை முடிந்து நடை சாத்தியாகிவிட்டதை தெரிவித்தனர். மரகதம்மா குழுவினரோ கோயில் விளக்குகள் அணைக்கப்படும் முன் தாங்கள் சாளரத்தின் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டினர். குழுவில் பாதி பேர் உள்ளே சென்று அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு உண்ணாமுலையம்மன் சன்னதிக்குச் சென்றனர்.
Thursday, 3 November 2016
அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. மூன்றாம் பகுதி - மறு பிறவி
சில வருடங்களுக்கு முன் வேறு ஒரு இடத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் பற்றி தெரிந்துகொள்வது இங்கு அவசியமாகிறது..
தமிழகத்தின் பின்னவாசல் என்ற ஊரில் மஹான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளை பரம குருவாகக்கொண்ட தெலுகு பிராம்மண வகுப்பைச் சேர்ந்த யோகி ராமகிருஷ்ணா வாழ்ந்து வந்தார். அவர் பன்னிரண்டு வருடங்கள் ஆவுடையார் கோயிலில் தங்கி நவாக்ஷரி மந்திரத்தால் தேவி உபாசனை செய்தவர். மற்றும் கடுமையான தவங்கள் செய்து சித்துக்கள் கைவரப்பெற்றவர். ஒரு கால கட்டத்தில் திருமணமும் செய்துகொண்டார். ஆனால் மனைவியுடன் வாழவில்லை. சேர்ந்து வாழாவிட்டாலும் கணவருடன் ஒரு அடியாராக இருந்து பணிவிடை செய்யும் பாக்கியத்தை கோரினார். ஆனால் அவர் தன்னிடம் எப்போது நெருங்கினாலும் வெறுத்து விரட்டினார். பல காலம் இந்நிலை நீடித்து விரக்தியில் ஒரு நாள் அவர் கணவருக்கு சாபமிட்டார்.. "நீங்கள் அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்து நான் பட்ட இன்னல்களுக்கு இணையான துன்பத்தை அனுபவிப்பீர்கள்".