Contact Us

Name

Email *

Message *

Monday 31 October 2016

அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி - வாழ்க்கைக் குறிப்பு.. முதல் பகுதி - உள்ளம் உருகுதையா பாடல்

அதிகம் அறியப்படாத ஆன்மீக துறவி அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்கள். முருகக்கடவுள் மீது புகழ்பெற்ற பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள் பரிச்சயமான அளவுக்கு இவரைப்பற்றி அநேகருக்குத் தெரியாது. இவர் இயற்றிய "உள்ளம் உருகுதையா" என்ற பாடல் (சென்னை காளிகாம்பாள் கோயிலில் பாடப்பெற்றது) திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் தேன் குரலில் இன்றளவும் நம்மை மயக்குகின்றது.

கந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில், கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும், அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்! குறிப்பாக, 'உள்ளம் உருகுதய்யா...’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். ஆனால், அந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருப்பது பலருக்கும் தெரியாது.

காஞ்சி மஹா ஸ்வாமிகள் வாக்கினால் 'ஆண்டவன் பிச்சி' என்று அனுக்கிரஹம் பெற்று, பின்பு அதே பெயரில் கோயில் கோயிலாகச் சென்று, பல தெய்விகப் பாடல்களைப் பாடினார்.

அப்படி அவர் இந்தக் காளிகாம்பாள் கோயிலில் பாடியதுதான், 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல். அந்தப் பெண்மணி தன்னைப் பற்றி எழுதியிருந்த 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல், தன்னையே நாளும் பொழுதும் வழிபடும் டி.எம்.எஸ். அவர்களின் தெய்விகக் குரலில் உலகமெல்லாம் பரவவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்ட அந்தப் பழநியாண்டவன்தான், இஸ்லாமியச் சிறுவன் மூலமாக இப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினான்போலும்!

திரு.டி.எம்.சௌந்தரராஜன் - உள்ளம் உருகுதையா பாடல் 


ஒவ்வொரு கிருத்திகைக்கும் டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு பையன் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், 'உள்ளம் உருகுதடா’ என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பையனிடம் அந்தப் பாடல் குறித்து விசாரித்தார். அதை யார் எழுதியது, எப்படி அது தனக்குத் தெரிய வந்தது என்கிற விவரமெல்லாம் அந்தச் சிறுவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனோ தனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டதால், மனதில் பதிந்துவிட்டதாகச் சொன்னான். அவனிடம் அந்தப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி சொல்லச் சொல்லி, எழுதி வாங்கிக்கொண்டார் டி.எம்.எஸ். பின்னர் சென்னைக்கு வந்ததும், அந்தப் பாடலில் 'அடா’ என்று வருகிற இடத்தையெல்லாம் 'ஐயா’ என மாற்றி, இசை அமைத்துப் பாடி வெளியிட, லட்சக்கணக்கான தமிழர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது 'உள்ளம் உருகுதய்யா...’ என்கிற அந்தப் பாடல். இந்த விவரத்தைதான் டி.எம்.எஸ். தாம் கச்சேரி செய்கிற இடங்களில் எல்லாம் கூறிவந்தார்.

பாடல் பிரபலமாகி, பலப்பல வருஷங்கள் கடந்த நிலையில், 'இமயத்துடன்...’ என்னும் தலைப்பில் டி.எம்.எஸ். பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதல்நாள் பூஜை போடுவதற்காக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள் டி.எம்.எஸ்ஸும் இயக்குநர் விஜய்ராஜும். பூஜை முடிந்ததும், அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் அவர்களை துர்கை சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கல்வெட்டில் 'உள்ளம் உருகுதடா...’ என்கிற அந்தப் பாடல் செதுக்கப்பட்டு, அதன் தொடக்கத்தில் 'ஆண்டவன் பிச்சி’ என அதை எழுதியவர் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு, வியப்பும் திகைப்புமாய் அந்த 'ஆண்டவன் பிச்சி’ யார் என்ற தேடலில் இறங்கியபோது, அவர்களுக்குச் சில தகவல்கள் கிடைத்தன.

நன்றி: சக்தி விகடன்



உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே 
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா 
முருகா.... (உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா 
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா 
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா 
(உள்ளம் உருகுதய்யா) 

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா 
(உள்ளம் உருகுதய்யா) 

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா 
(உள்ளம் உருகுதய்யா)
---

அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி இயற்றிய ஸ்ரீ கந்தசஷ்டி மணிமாலிகா ஸ்தோத்ரம், ஸ்ரீ ஷண்முக ரக்ஷாபந்தனம் மற்றும் கஷ்ட நிவாரண சஷ்டிகவசம் ஆகிய கீழ்கண்ட பாடல் தொகுப்பை பாடி பதிவேற்றம் செய்த ஆண்டவன் பிச்சி அவர்களின் பேத்தி ஸ்ரீமதி. மீரா பிரகாஷ் மற்றும் மகள் ஸ்ரீமதி. காமாக்ஷி குப்புஸ்வாமி அவர்களுக்கும் நன்றிகள் பல.



கஷ்ட நிவாரண ஷஷ்டி கவசம் (ஸ்ரீ ஷண்முக ரக்ஷாபந்தனம்)


ஹர நேத்ரோத்பவ அக்னிஸ்வரூப
அமித பராக்ரம அதிகீர்த்தே |
ஹரி ப்ரும்ஹார்ச்சுத அமரேந்த்ரார்ச்சித
அபார கருணாமய மூர்த்தே |
வர நாரத ப்ரிய வல்லி மனோகர
வந்தித அபீஷ்ட பல பூர்த்தே |
ஜெய ஜெய சூரகுலாந்தக ஷண்முக
சரவணபவ பரிபாலயமாம் || 1 ||

த்விஷட்கர சோபித ஸர்வாயுத தர
தீன ஸம்ரக்ஷண திவ்யமதே |
திவ்யா லங்க்ருத மன்மத மோகித
ரூபலாவண்ய குமார பதே |
த்வமேவ மமார்த்தி நிவாரண பந்து
த்வாதச' நேத்ர தயாநிதே |
ஜெய ஜெய சூரகுலாந்தக ஷண்முக
சரவணபவ பரிபாலயமாம் || 2 ||

சூர பத்மாசுர தாரக சிம்ஹ மஹாசுர
தானவ குல காலா |
சூர்யகோடி சமான ப்ரகாச சக்த்யாயுத
விச்'வாத்மக லீலா|
தீர பராக்ரம த்விஷட்புஜ சௌரே
தீன சரண்ய சுகுண லீலா |
ஜெய ஜெய சூரகுலாந்தக ஷண்முக
சரவணபவ பரிபாலயமாம் || 3 ||

குஞ்சார சோதர குஞ்சரி நாயக
குக்குடத்வஜ குங்கும காத்ரா |
கும்போத்பவ முனி தேசிக விசாக
குல பர்வத நந்தினி புத்ரா |
பஞ்சானன ப்ரணவாக்ஷர போதக
பரம க்ருபாமய தவிஷ்ண் நேத்ரா |
ஜெய ஜெய சூரகுலாந்தக ஷண்முக
சரவணபவ பரிபாலயமாம் || 4 ||

மரகத மயூர வாஹன மோஹன
மங்கள வல்லி மனோ ரமணா |
மம பவ பீதி நிவாரண காரண
மக மாத்புத பங்கஜ சரணா |
உரக சயன சகோதரி பார்வதி
உபய கரகமல ஆபரணா |
ஜெய ஜெய சூரகுலாந்தக ஷண்முக
சரவணபவ பரிபாலயமாம் || 5 ||

ஷண்முக மண்டல சோ'பித த்வாதச'நயன
கமல கருணா சி'ந்தோ |
ஷட்சக்ர ஸ்தித ஷடாக்ஷர மந்த்ர
ஸ்வரூப ச'ரணாகத பந்தோ |
ஷண்மத ஸ்தாபித சங்கர குருக்ருத
புஜங்க ஸ்தோத்ர ப்ரியஸ்கந்தோ |
ஜெய ஜெய சூரகுலாந்தக ஷண்முக
சரவணபவ பரிபாலயமாம் || 6 ||

பலஸ்ருதி 

சஷ்டி குமார ப்ரபாவ ப்ரவாகம்
ஸமஸ்த பாப வினாசகரம் |
ஷண்முக சரண சரோருக பக்திம்
ஸர்வாபீஷ்ட ப்ரதம் ஸுஹ்ருதம் |
கஷ்ட நிவாரண தாரக மந்த்ரம்
கைவல்யானந்த மோக்ஷ ப்ரதம் |
ஜெய ஜெய ஜகதோத்தாரண மந்த்ரம்
ஜனன மரண நிவாரண மந்த்ரம் ||


அடுத்த பதிவில்.. அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சியின் வாழ்க்கைக் குறிப்பு.

No comments:

Post a Comment