Contact Us

Name

Email *

Message *

Sunday 28 August 2016

Atmarpanastuti - Sloka 36


न त्वा जन्मप्रलयजलधेरुद्धरामीति चेद्धीः
आस्तां तन्मे भवतु च जनिर्यत्र कुत्रापि जातौ ।
त्वद्भक्तानामनितरसुखैः पादधूलीकिशोरैः
आरब्धं मे भवतु भगवन् भावि सर्वं शरीरम् ॥ ३६॥

நத்வா ஜன்மப்ரலய ஜலதே ருத்தராமீதி சேத்தீ:
ஆஸ்தாம் தன்மே பவது ச ஜனிர்யத்ர குத்ராபி ஜாதெள |
த்வத்பக்தானாமனிதரஸுகை: பாததூளீ கிசோரை:
ஆரப்தம் மே பவது பகவன் பாவி ஸர்வம் சரீரம் || 36 ||

எவ்விதத்திலும் உன்னை ஜனன மரணங்களிலிருந்து விடுவிக்க முடியாது என்று உனது தீர்மானமாகில் எனக்கு அளிக்கப்படும் சரீரமானது எந்த ஜாதியில் என்னைப் பிறக்கச் செய்வதானாலும் சரி உன் பக்தர்களின் கால் பட்ட தூளிகளால் அமைக்கப் பெற்றதாயிருக்கட்டும் என்று தான் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் அப்பொழுது எனக்கு உன்னிடம் இடைவிடாத சஞ்சலமற்ற பக்தி ஏற்பட ஹேதுவாகும். பெரியோர்களின் பாத தூளி சரீராரம்பத்திற்கு எப்படிக் காரணமாகும் என்றால் மாதாபிதாக்கள் உட்கொண்ட அன்ன பானாதிகளில் அவை சம்பந்தப்பட்டிருப்பதன் மூலம் என்று கூறலாம். (அல்லது ஆரப்தம் என்பதற்குப் பதிலாய் ஆலிஸம் என்ற பாடத்தை எடுத்துக்கொண்டால் பால்யம் முதல் ஸாதுக்களின் பாத தூளி சரீரத்தில் படுவது அநேக ஸந்தர்ப்பங்களில் ஸுலபமாகும்.)

na tvA janmapralayajaladheruddharAmIti ceddhIH
AstAM tanme bhavatu ca janiryatra kutrApi jAtau |
tvadbhaktAnAmanitarasukhaiH pAdadhUlIkishoraiH
ArabdhaM me bhavatu bhagavan bhAvi sarvaM sharIram || 36 ||

If You decide not to lift me out of the ocean of repeated births, then let me be born as any creature. But let all my future bodies be blessed by the incomparable bliss of contact with the dust of the feet of Your devotees.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment