Contact Us

Name

Email *

Message *

Sunday 24 April 2016

Atmarpanastuti - Sloka 18


भक्ताग्र्याणां कथमपि परैर्यॊऽचिकित्स्याममर्त्यै:
संसाराख्यां शमयति रुजं स्वात्मबॊधौषधॆन ।
तं सर्वाधीश्वर भवमहादीर्घतीव्रामयॆन
क्लिष्टॊऽहं त्वां वरद शरणं यामि सम्सारवैध्यम् ॥ १८ ॥

பக்தாக்ரயாணாம் கதமபி பரைர்யோசிகித்ஸ்யாமமர்த்யை:
ஸம்ஸாராக்யாம் ஸமயதி ருஜம் ஸ்வாத்மபோதெளஷதேந |
தம் ஸர்வாதீச்வர பவமஹாதீர்க்கதீவ்ராமயேந 
க்லிஷ்டோஹம் த்வாம் வரத சரணம் யாமி ஸம்ஸாரவைத்யம் || 18 ||

இந்த ஸம்ஸாரம் என்பது ஒரு ரோகம். இந்த வியாதிக்கு வைத்தியம் செய்ய வேறு ஒரு வைத்தியனாலும் முடியாது. மற்ற தேவர்கள் சில வரங்களைக் கொடுக்கலாம். ஆனால், இந்த ஸம்ஸார வியாதியைத் தீர்க்க அவர்களால் இயலாது. இந்தப் பிணிக்கு வைத்தியன் நீ ஒருவனே. உன்னிடம் பக்தி செய்தவர்களுக்கு இந்த நோயைத் தீர்த்து விடுகிறாய். இதற்கு நீ வைத்துக்கொண்டிருக்கும் மருந்து ஆத்மஜ்ஞானம் என்பதே. இந்தப் “பிறப்பு இறப்பு” என்னும் நோயால் அநேக காலமாய் மிகவும் பீடிக்கப்பட்ட நான் உன்னைத் தவிர வேறு எங்கு சரணமடையப் போகிறேன். ஆகையால் நீயே எனக்குக் கதி. எனக்கு இந்த வியாதியை நிவ்ருத்தி செய்விக்க வேண்டும்.

bhaktAgryANAM kathamapi parairyO&chikitsyAmamartyai:
saMsArAkhyAM shamayati rujaM svAtmabOdhauShadhEna |
taM sarvAdhIshvara bhavamahAdIrghatIvrAmayEna
kliShTO&haM tvAM varada sharaNaM yAmi samsAravaidhyam || 18 ||

O Lord of all! All other gods are absolutely incapable of relieving even the greatest of devotees from the affliction of transmigration. But You cure this disease by the medicine of Self-knowledge. I am suffering from the severe disease of longstanding saMsAra and so I take refuge in You, the dispeller of the disease of saMsAra.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment