Contact Us

Name

Email *

Message *

Monday 26 October 2015

Soundarya Lahari - Sloka: 23


Beneficial Results: 
ஸர்வ ஸம்பத்து Activation of ajna chakra.
Attainment of vast wealth, relief from burden of debts.


त्वया हृत्वा वामं वपु-रपरितृप्तेन मनसा
शरीरार्धं शम्भो-रपरमपि शङ्के हृतमभूत् ।
यदेतत् त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनं
कुचाभ्यामानम्रं कुटिल-शशिचूडाल-मकुटम् ॥ २३ ॥

சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம் [ஸர்வ ஸம்பத்து]

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத் |
யதேதத் த்வத்ரூபம் ஸகல-அருணாபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம் || 23 ||

அர்த்தநாரிஸ்வர ரூபத்தை சொல்வது போல ஆரம்பித்து சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. ஈஸ்வரனைப்போல முக்கண்ணும், கிரீடத்தில் சந்த்ர கலையும், கொண்டிருக்கும் அன்னையை விளித்து சொல்லப்படுகிறது....ஈசன் வெண்மையானவர், ஆனால் அன்னை சிவந்த நிறத்தவள் (அருண நிறம் பற்றி நிறைய பார்த்தோம் முன்னரே). ஈஸ்வரனின் இடது பாகத்தில் அன்னை இருக்கிறபடியால் ஈசனின் வெண்மை மறைந்து அருண நிறம் வந்து விடுகிறாதாம். பாதி உடலாக இருக்கும் அன்னைக்கு அந்த பாதியில் த்ருப்தியில்லாமல் இன்னொரு பாதியினையும் தனதாக்கிக் கொண்டாளாம். ஆகையால் ஈசனின் சந்திரனும், மூன்றாம் கண்ணும் அன்னை கொண்டிருப்பதாகவும், இரண்டு ஸ்தனங்களால் சற்றே வளைந்தும் இருப்பதால் இந்த சந்தேகம் கொண்டதாக சொல்கிறார் ஆச்சார்யார். இந்த ஸ்லோகமானது ருண விமோசனத்திற்கு பாராயணம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

ஏதத் - என்னுடைய; த்வத் ரூபம் - உன் ரூபம்; ஸகலம் அருணபம் - முழுவதும் சிவப்பான நிறத்துடன்; த்ரிநயனம் - முக்கண்களுடன்; குசாப்யாம்- ஸ்தனங்கள்; அநம்ரம் - வளைந்த; குடில-சசி-சூடால மகுடம் - பிறைச் சந்த்ரனை சூடிய மகுடம்; வாமம் வபு: சரீரத்தின் இடது பகுதி; அபரி த்ருப்தேன - முழுமையான த்ருப்தியில்லாத; அபரம் சரீரார்த்தம் அபி - சரீரத்தின் இன்னொரு பாதியும்; ஹ்ருதம் அபூத் - கவர்ந்து கொள்ளப்பட்டது; சங்கே - சந்தேகம்

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 43

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • த்ரிநயனா, 
  • ஸ்ர்வாருணா, 
  • ஸ்ரீ கண்டார்த்த சரீரிணீ, 
  • காந்தார்த்தவிக்ரஹா,
  • ஸ்ரீ சிவா, 
  • சம்புமோஹினி, 
  •  ஸ்வாதீனவல்லபா, 
  • த்ரிலோச்சனா, 
  • பத்மராகஸமப்ரபா

tvayā hṛtvā vāmaṃ vapu-raparitṛptena manasā
śarīrārdhaṃ śambho-raparamapi śaṅke hṛtamabhūt |
yadetat tvadrūpaṃ sakalamaruṇābhaṃ trinayanaṃ
kucābhyāmānamraṃ kuṭila-śaśicūḍāla-makuṭam || 23 ||

Your form in my mind,
Is the colour of red of the rising sun,
Is adorned with three eyes,
Has two heavy busts,
Is slightly bent,
And wears a crown with the crescent moon,
And hence arises a doubt in me,
That you were not satisfied ,
By half the body of Shambu that he gave,
And occupied all his body.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:23, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.974-979 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment