Contact Us

Name

Email *

Message *

Thursday 29 October 2015

Bhaja Govindaṁ - Verse 11


मा कुरु धन जन यौवन गर्वं 
हरति निमेषात्कालः सर्वम् । 
मायामयमिदमखिलं हित्वा 
ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥ ११॥

धन, शक्ति और यौवन पर गर्व मत करो, समय क्षण भर में इनको नष्ट कर देता है| इस विश्व को माया से घिरा हुआ जान कर तुम ब्रह्म पद में प्रवेश करो.

mā kuru dhana jana yauvana garvaṁ
harati nimeṣātkālaḥ sarvam |
māyāmayamidamakhilaṁ hitvā
brahmapadaṁ tvaṁ praviśa viditvā || 11 ||

Do not boast of wealth, friends, and youth. Each one of these are destroyed within a minute by time. Free yourself from the illusion of the world of Maya and attain the timeless Truth.

மா குறு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத்கால: சர்வம்
மாயாமயமிதமகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஶ விதித்வா || 11 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

செல்வத்தாலும் சுற்றத்தாலும் இளமையாலும் கர்வம் கொள்ளாதே! காலன் அனைத்தையும் ஒரு நிமிஷத்தில் கொண்டுபோய் விடுவான். மாயா மயமான இதையெல்லாம் விட்டு பிரம்ம பதத்தை அறிந்து அதில் புகுவாயாக.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

என்வயது என்மனது
என்உறவு என்வரவு
என்பதொரு மாய நிலையே!

என்னுடைய தென்றமொழி
உன்னுடைய மேனிதனை
எப்பொழுதும் காத்த திலையே!

பொன்னுடைய சத்தியமும்
புகழுடைய தத்துவமும்
பூணுவது துறவு நிலையே!

போகும்வழி நல்லவழி
ஆகும்உனைத் தந்துவிடு
புண்ணியம் அதற்கு விலையே!

உன்னுடல் ஒடுங்குவது
உன்னுயிர் அடங்குவது
உளறுவதில் என்ன பயனே?

உத்தமனை சத்தியனை
தத்துவ நிலாமகனை
ஓர்பொழுது பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment