அதிகம் அறியப்படாத ஆன்மீக துறவி அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்கள். முருகக்கடவுள் மீது புகழ்பெற்ற பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள் பரிச்சயமான அளவுக்கு இவரைப்பற்றி அநேகருக்குத் தெரியாது. இவர் இயற்றிய "உள்ளம் உருகுதையா" என்ற பாடல் (சென்னை காளிகாம்பாள் கோயிலில் பாடப்பெற்றது) திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் தேன் குரலில் இன்றளவும் நம்மை மயக்குகின்றது.
கந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில், கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும், அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்! குறிப்பாக, 'உள்ளம் உருகுதய்யா...’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். ஆனால், அந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருப்பது பலருக்கும் தெரியாது.