ब्रह्मादीन् यः स्मरहर पशून् मॊहपाशॆन बद्ध्वा
सर्वानॆकश्चिदचिदधिकः कारयित्वात्मकृत्यम् ।
यश्चैतॆषु स्वपदशरणान् विद्यया मॊचयित्वा
सान्द्रानन्दं गमयति परं धाम तं त्वां प्रपद्यॆ ॥ १७ ॥
ப்ரஹ்மாதீன் ய: ஸ்மரஹர பசூன் மோஹபாசேன பத்த்வா
ஸர்வானேகஸ்சிதசிததிக: காரயித்வாத்மக்ருத்யம் |
யஸ்சைதேஷு ஸ்வபதஸரணான் வித்யயா மோசயித்வா
ஸாந்த்ராநந்தம் கமயதி பரம் தாம தம் த்வாம் ப்ரபத்யே || 17 ||
சேதனாசேதன மயமான இந்த பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள நீ இரண்டுகால் நான்குகால் பசுக்களை அஜ்ஞானக் கயிற்றால் கட்டி அவர்களுக்குரிய காரியங்களைச் செய்வித்து இந்த ஸம்ஸாரத்தை நடத்தி வருகிறாய். இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய். ஆகையால் நான் உன்னைச் சரணமடைகிறேன். புல் முதலியவற்றை மென்று தின்று விவேகமற்றவைகளாய் தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரம் இழுத்தல் முதலிய காரியங்களில் க்லேசமும் துக்கமுமடையும் மாடுகளைப் போல் ஜீவன் அஜ்ஞானியாய் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு பற்பல கஷ்டங்களை அடைகின்றான். இந்த ஜீவன்களைக் கட்டவும் அவிழ்த்து விடவும் யஜமானன் பரமேச்வரனே.
brahmAdIn yaH smarahara pashUn mOhapAshEna baddhvA
sarvAnEkashchidachidadhikaH kArayitvAtmakRutyam |
yashchaitEShu svapadasharaNAn vidyayA mOchayitvA
sAndrAnandaM gamayati paraM dhAma taM tvAM prapadyE || 17 ||
I surrender myself to You, O Destroyer of Cupid, who are the only One and beyond all animate and inanimate, who have tied down with the rope of delusion all beings from BrahmA downwards, and made them do Your work, who release from bondage by conferring self-knowledge those who take refuge in You and make them attain the state of supreme bliss.
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment