Contact Us

Name

Email *

Message *

Wednesday, 30 December 2015

Bhaja Govindaṁ - Verse 19


Stanza attributed to nityAnanda. 

योगरतो वाभोगरतोवा 
सङ्गरतो वा सङ्गविहीनः । 
यस्य ब्रह्मणि रमते चित्तं 
नन्दति नन्दति नन्दत्येव ॥ १९॥

कोई योग में लगा हो या भोग में, संग में आसक्त हो या निसंग हो, पर जिसका मन ब्रह्म में लगा है वो ही आनंद करता है, आनंद ही करता है.

yogarato vābhogaratovā
saṇgarato vā saṇgavīhinaḥ |
yasya brahmaṇi ramate cittaṁ
nandati nandati nandatyeva  || 19 || 

One may take delight in yoga or bhoga, may have attachment or detachment. But only he whose mind steadily delights in Brahman enjoys bliss, no one else.

யோகரதோ வாபோகரதோவா
ஸங்கரதோ வா ஸங்கவிஹீன: |
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ || 19 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

யோகத்தில் மகிழ்பவனாக இருந்தாலும், போகத்தில் மகிழ்பவனாக இருந்தாலும், கூட்டுறவில் மகிழ்பவனாக இருந்தாலும், தனிமையில் மகிழ்பவனாக இருந்தாலும், எவனது மனது பிரம்மத்தில் மகிழ்கின்றதோ அவன் மகிழ்கிறான், அவன் மகிழ்கிறான், அவனே மகிழ்கிறான்!

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

காடுசென்று யோகியாகிக்
கைகுவித்து நின்றபோதும்
கண்ணனைக் கலந்து விடுங்கள்!

கன்னியை அணைத்தபடி
கட்டிலில் கிடந்தபோதும்
கண்ணனோடு சேர்ந்து விடுங்கள்!

கூடுகின்ற கூட்டமொன்றில்
கூடிநின்ற போதும் அங்கு
கோமானைக் கூடி விடுங்கள்!

கூட்டமற்ற தோரிடத்தில்
வாட்டமுற் றிருந்தபோதும்
கோபியில் நிறைந்து விடுங்கள்!

ஏடுசொல்லி நாடுசொல்லி
இத்தனைபேர் சொன்னபின்பும்
ஏங்குவதில் என்ன பயனே?

இல்லைஎன்று சொல்பவர்க்கும்
எல்லைஎன்று தானிருக்கும்
ஏந்தல்தனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment