Stanza attributed to Subodha.
कुरुते गङ्गासागरगमनं
व्रतपरिपालनमथवा दानम् ।
ज्ञानविहीनः सर्वमतेन
मुक्तिं न भजति जन्मशतेन ॥ १७॥ var भजति न मुक्तिं
किसी भी धर्म के अनुसार ज्ञान रहित रह कर गंगासागर जाने से, व्रत रखने से और दान देने से सौ जन्मों में भी मुक्ति नहीं प्राप्त हो सकती है.
kurute gaṅgāsāgaragamanaṁ
vrataparipālanamathavā dānam |
jñānavihinaḥ sarvamatena
muktiṁ na bhajati janmaśatena || 17 || var bhajati na muktiṁ
vrataparipālanamathavā dānam |
jñānavihinaḥ sarvamatena
muktiṁ na bhajati janmaśatena || 17 || var bhajati na muktiṁ
One may go to Gangasagar, observe fasts, and give away riches in charity ! Yet, devoid of jnana, nothing can give mukti even at the end of a hundred births.
குருதே கங்காஸாகரகமனம்
வ்ரதபரிபாலனமதவா தானம் |
ஜ்ஞானவிஹீனஹ் ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மஶதேன || 17 || var பஜதி ந முக்திம்
வ்ரதபரிபாலனமதவா தானம் |
ஜ்ஞானவிஹீனஹ் ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மஶதேன || 17 || var பஜதி ந முக்திம்
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
கங்கை, சேது சமுத்திரம் முதலிய இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்கிறான். (அல்லது கங்கை, சமுத்திரத்தில் சேரும் இடமான கங்கா சாகரம் எனும் தீர்த்தத்திற்குச் செல்கிறான்); விரதங்களைக் கைக்கொள்கிறான், அல்லது தானங்களைச் செய்கிறான்; ஞானமில்லாதவன் நூறு ஜன்மங்களிலும் முக்தியை அடையமாட்டான் என்பதுதான் எல்லா மதங்களுடைய கொள்கையும்.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
கங்கையில் குளித்துமென்ன
சங்கமத்தில் ஆடிஎன்ன
காசிவரை ஓடி என்னவோ!
காலவழி பூசைஎன்ன
தானமென்ன தர்மமென்ன
கடவுள்நிலை ஞான மல்லவோ!
திங்கள்முடி இமயமுதல்
தென்குமரி எல்லைவரை
தேர்ந்ததிந்த உண்மை யல்லவோ!
செப்புமதம் அத்தனையும்
ஒப்புகின்ற ஞானமிதை
தேறுவதே நன்மை யல்லவோ!
மங்கலம் இழந்தபின்பு
மஞ்சளுக்கு ஆசைவைத்து
வாடுவதில் என்ன பயனே?
மானொருத்தி மானமதைத்
தான்நிறுத்தப் போர்புரிந்த
மாலவனைப் பாடு மனமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment