Contact Us

Name

Email *

Message *

Thursday, 3 December 2015

Bhaja Govindaṁ - Verse 15


Stanza attributed to Totakacharya. 

अङ्गं गलितं पलितं मुण्डं 
दशनविहीनं जातं तुण्डम् । 
वृद्धो याति गृहीत्वा दण्डं 
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥ १५॥

क्षीण अंगों, पके हुए बालों, दांतों से रहित मुख और हाथ में दंड लेकर चलने वाला वृद्ध भी आशा-पाश से बंधा रहता है.

aṇgaṁ galitaṁ palitaṁ muṇḍaṁ 
daśanavihīnaṁ jataṁ tuṇḍam |
vṛiddho yāti gṛihītvā daṇḍaṁ 
tadapi na muñcatyāśāpiṇḍam || 15 ||

Strength has left the old man's body; his head has become bald, his gums toothless and leaning on crutches. Even then the attachment is strong and he clings firmly to fruitless desires.

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஶனவிஹீனம் ஜாதம் துண்டம் |
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சத்யாஶாபிண்டம் || 15 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

உடல் தளர்ந்து விட்டது, தலை நரைத்து விட்டது, வாயில் பல் இல்லாமல் போய்விட்டது, கிழவன் கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்; என்றாலும் ஆசைக் கூட்டத்தை விடவில்லை.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

கால்விழுந்து கைவிழுந்து
கார்குழலில் மின்விழுந்து
காட்சியும் இழந்த பிறகு

கண்டவர்கள் கேலிசெயத்
தண்டெடுத்து ஊன்றிவரும்
காடுவரை வந்த கிழடு!

கோல்பிடித்த வேளையிலும்
கோடிசுகம் தேடுவது
கோவிந்தன் லீலை யலவோ!

கொட்டிவிட்ட பாலினிலும்
வெண்ணையினைத் தேடுவது
கோமாளி வேலை யலவோ!

மேல்விழுந்த ஆசைதனில்
நீவிழுந்து வாடுவதில்
வேதனைகள் சேரும் தினமே!

விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
பண்ணளந்து கீதைசொன்ன
வித்தகனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment