Stanza attributed to Hastamalaka.
अग्रे वह्निः पृष्ठेभानुः
रात्रौ चुबुकसमर्पितजानुः ।
करतलभिक्षस्तरुतलवासः
तदपि न मुञ्चत्याशापाशः ॥ १६॥
सूर्यास्त के बाद, रात्रि में आग जला कर और घुटनों में सर छिपाकर सर्दी बचाने वाला, हाथ में भिक्षा का अन्न खाने वाला, पेड़ के नीचे रहने वाला भी अपनी इच्छाओं के बंधन को छोड़ नहीं पाता है.
agre vahniḥ pṛṣṭhebhānuḥ
rātrau cubukasamarpitajānuḥ |
karatalabhikśastarutalavāsaḥ
tadapi na muñcatyāśāpāśaḥ || 16 ||
rātrau cubukasamarpitajānuḥ |
karatalabhikśastarutalavāsaḥ
tadapi na muñcatyāśāpāśaḥ || 16 ||
Behold there lies the man who sits warming up his body with the fire in front and the sun at the back; at night he curls up the body to keep out of the cold; he eats his beggar's food from the bowl of his hand and sleeps beneath the tree. Still in his heart, he is a wretched puppet at the hands of passions.
அக்ரே வஹ்னி ப்ருஷ்டேபானு:
ராத்ரௌ சுபுகஸமர்பிதஜானு: |
கரதல பிக்ஷஸ்தருதலவாஸ:
ததபி ந முஞ்சத்யாஶாபாஶ: || 16 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
(பகலில்) எதிரில் அக்னியும் பின்புறம் சூரியனும் (சுடச்சுடத் தவம் செய்கிறான்); இரவில் (குளிரைச் சகித்துக்கொண்டு) முழந்தாளில் மோவாயை வைத்துக் கொண்டு உட்கார்திருக்கிறான். கைத்தலத்தில் பிச்சை வாங்கி உண்கிறான்; மரத்தடியில் வசிக்கிறான்; என்றாலும் ஆசைப் பிணிப்பு விடவில்லை.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
குந்தஒரு குடிசைஇலை
கூழ்குடிக்க நாதிஇலை
கோடிசுகம் தேடு கின்றதே!
கோடையில் மரத்தடியில்
வாடுகின்ற வேளையிலும்
கொண்டாட்டம் போடு கின்றதே!
அந்திவரை பிச்சையெடுத்
தாசையுடன் உண்ணுகின்ற
ஆளுரவில் லாத பிறவி
ஆசைவலைப் பட்டுநிதம்
அன்றாடம் தேடுவது
ஆனந்த மான பதவி!
எந்தவொரு ஜீவனையும்
பேராசை விட்டதிலை
இன்னுமதில் என்ன பயனே!
ஏழைகளின் தோழனவன்
தாள்களைப் பணிந்துநிதம்
எப்போதும் பாடு மனமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment