Contact Us

Name

Email *

Message *

Sunday 30 June 2019

Shivananda Lahari - Sloka: 68


பக்தியாகிய பசு | Cow of Devotion


अमितमुदमृतं मुहुर्दुहन्तीं
विमलभवत्पदगोष्ठमावसन्तीम् ।
सदय पशुपते सुपुण्यपाकां
मम परिपालय भक्तिधेनुमेकाम् ॥ ६८॥

அமித முதம்ருதம் முஹுர் துஹந்தீம்
விமல பவத்பத கோஷ்ட மாவஸந்தீம் |
ஸதய பசுபதே ஸுபுண்ய பாகாம்
மம பரிபாலய பக்திதேனு மேகாம் || 68 ||

உயிர்கள் அனைத்துக்கும் தலைவரான ஈசனே! தயவு காட்டும் குணமுள்ளவரே! அளவற்ற மகிழ்ச்சி என்னும் அமுதத்தை மேன் மேலும் பெருக்குவதாகவும், தூய்மையான உன் திருவடியாகிய கொட்டிலில் வசிப்பதாகவும், சிறந்த புண்ணியச் செயல்களின் பயன்களின் வடிவமாகவும் உள்ள என் பக்தி என்கின்ற கறவைப் பசு ஒன்றை நன்கு காத்தருள்வாயாக! (பக்தி என்பதை, விரும்பியதையெல்லாம் கொடுக்கவல்ல காமதேனுவாகவும், பால் என்பதை, பேரின்ப வீடாகிய முக்தியின்பமாகவும், கொட்டில் என்பதை சிவபிரானின் திருவடிகளாகவும், உருவகித்துப் பாடப்பெற்ற பாடல்.)
                         
amita-mudamṛtaṃ muhur-duhantīṃ
vimala-bhavat-pada-gośṭham-āvasantīm |
sadaya paśu-pate supuṇya-pākāṃ
mama paripālaya bhakti dhenum-ekām || 68 ||

Oh, store house of mercy, Oh, Lord of all beings, 
Please be kind enough to look after, 
The cow of my devotion to you, 
Which constantly yields the ambrosia of happiness, 
Which lives in the stable of your feet, 
And which is the result of great and good deeds. 


Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment