Contact Us

Name

Email *

Message *

Tuesday 10 July 2018

Shivananda Lahari - Sloka: 44


சிவனும் சிங்கமும் | Shiva and The Lion


करलग्नमृगः करीन्द्रभङ्गो
घनशार्दूलविखण्डनोऽस्तजन्तुः ।
गिरिशो विशदाकृतिश्च चेतः-
कुहरे पञ्चमुखोस्ति मे कुतो भीः ॥ ४४॥

கரலக்னம்ருக: கரீந்தர பங்கோ 
கனசார்த்தூல விகண்டனோஸ்த ஐந்து: |
கிரிசோ விசதாக்ருதிச்ச சேத: 
குஹரே பஞ்ச முகோஸ்திமே குதோபீ: || 44 ||

சிவபிரானுக்கும் சிங்கத்திற்கும் சிலேடையாய் அமைந்த பாடல் இது. 

சிவபிரானுக்கு: 

கையில் மானை ஏந்தியவரும் கஜாசுரனைக் கொன்றவரும், வியாக்கிராசுரன் என்ற கொடிய அசுரனைக் கொன்று உயிரினங்களையெல்லாம் தன்னிடம் ஐக்கியமாக்கிக் கொண்டவரும் கயிலையங்கிரியில் உறைபவரும், சாம்பல் பொடி பூசி வெண்ணிறத் தோற்றமளிப்பவருமான பரமசிவன் என் மனக்குகையில் இருக்கும்போது எங்கியிருந்து எனக்கு அச்சம் ஏற்படும்?

சிங்கத்திற்கு: 

கையில் மானைப் பிடித்துக் கொண்டு, யானைகளின் தலைவனை வெல்வது, கொடும்புலியையும், மற்ற சிறு பிராணிகளையும் கொல்வதும், மலையில் வசிப்பதும், வெளுத்த கம்பீரமான உடலையுடையதுமான சிங்கம் ஒன்று என் மனக்குகையில் இருக்கும் போது எங்கிருந்து எனக்கு அச்சம் ஏற்படும்? 
         
kara-lagna mṛgaḥ karīndra-bhango
ghana śārdūla-vikhaṇḍano(a)sta-jantuḥ |
giriśo viśad-ākṛtiś-ca cetaḥ
kuhare panca mukhosti me kuto bhīḥ || 44 ||

This sloka has two meanings and could be taken to mean Lord Shiva or Lion in the cave. Both are given below: 

He who has the deer in his hand, 
He who killed Gajasura, 
He who cut cruel Vyagrasura in to pieces, 
He who makes all beings to merge in Him, 
He who is the lord of the mountains, 
He who has a white body, 
And he who has five faces, 
Lives in the cave of my mind, 
And how will fear ever come to me? 

OR 

The being that holds the deer in its hand, 
The being that kills wild elephants, 
The being that can kill the ferocious tiger, 
The being that can kill all other beings, 
The being that is the Lord of the mountains, 
The being that has a bright body, 
The being that is called Lion, 
Lives in the cave of my mind, 
And how will fear ever come to me? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment