Contact Us

Name

Email *

Message *

Sunday 1 June 2014

அபிராமி அந்தாதி - அறிமுகம் (Abhirami Andhadhi - Introduction)


Scroll down to read in English



அறிமுகம்


பிராமி அந்தாதியை இயற்றியவர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்). இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.

அபிராமி அம்மன் காட்சி


சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

பௌர்ணமி திதி


அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு முதலாம் சரபோஜி மன்னர் (சரபோஜி I) ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). அம்மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.

அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்த்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.


அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டினார். 

அரசரும் பட்டரின் தூய பக்தியினை உலகோர் தெரிந்துகொள்ள வேண்டி அபிராமி சந்நிதி முன் யாகத்தீ வளர்த்து அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, பட்டர் அதில் ஏறி அமர்ந்து கொண்டு "அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்" என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடலையும் பாடியதும் அதை ஒரு பனை ஓலையில் எழுதி கீழே எரிந்துகொண்டிருந்த ஹோமத்தீயில் இட்டார். ஆயினும் அவை தீப்பற்றவில்லை.

"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”

என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.


தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்தது. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் பட்டரை வணங்கி ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.

இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்ற பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அனைத்துப் பாடல்களையும் சேர்த்தும் பொருத்தியும் பார்த்தால்தான் இதன் முழுமையான பொருளினை அறிய முடியும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற' என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி அந்தாதி ஸ்ரீவித்யையின் எளிமையான தமிழாக்கமே என்றும் வேதியர் கூறுவர். 


Abhirami is the Goddess of Thirukadayur near Mayiladuthurai town of Tamil Nadu. The Lord Shiva who presides over the temple is called Amritha Gateswarar. It is believed that while transporting the Nectar (Amritha) which they got by churning the ocean of milk, the Devas kept a pot of Amritha in Thirukadayur.This pot became one with the land and became the siva linga. It is also believed that it is at this temple that the Sage Markandeya prayed Lord Shiva and could avoid death forever.

Abhirami means “She who is attractive every moment of time”. This goddess is believed to be extremely powerful and fulfills the wishes of all her devotees. One of her great devotees of the past was Abhirama Bhattar. He was so much her devotee that he never used to think of any other thing except her. This made him look like a mad man. People even suspected him of practicing evil rites. One day Raja Serfoji (Serfoji I), the Maratha king who was ruling over Thanjavur visited the temple. The Archakas told him about Abhirama Bhattar. The king while returning to the palace casually asked Abhirama Bhattar the Thithi. Abhirama Bhattar who was at the time seeing the Goddess in his reverie, answered that it was Pournami (Full moon). Raja went his way. But actually the day was Thai Amavasya (New moon). Bhattar realized his mistake soon and felt extremely sorry.

The king decided to bring out the true bhakti of bhatter and as requested by him set up 100 rope hangings connected to a seat at the center and created a huge fire below that. The vaidik brahmanas did homa while bhattar prayed Goddess Abhirami to prove that he is right by singing 100 stanzas in praise of Abhirami. As soon as one stanza was completed, it was written on a palm leaf and offered to the homa agni but it was not burnt. One rope per poem was cut until he sang the 79th stanza when goddess appeared before everybody, threw her Thadanga (a diamond ear ornament) in the sky where it stood. This was so sparkling that it appeared like a full moon. The Goddess also ordered Abhirama Bhattar to complete all the 100 poems. He continued and ended with 100 stanzas. Raja Serfoji realized how great Abhirama Bhattar was and honoured him.

Pandits say that Abhirami Andhadhi is nothing but 'Srividya' made simple in Tamil language.  Each stanza of the poem Abhirami Andhathi is a gem of poetry in itself. The language is not the spoken Tamil and this was further complicated by the fact that the first word of the next stanza should be the last word of the previous stanza, making the thought process of the stanza entwined. So, it has to be read and understood in its totality.



அடுத்த பாடல்: அபிராமி அந்தாதி - காப்பு


Also read: பதினாறு பேறுகள் (The sixteen benedictions)

No comments:

Post a Comment