Contact Us

Name

Email *

Message *

Sunday, 21 February 2016

Soundarya Lahari - Sloka: 31


Beneficial Results: 
ஸர்வ வசீகரம் Winning popularity
Royal and governmental favors, fulfillment of desires.


चतुः षष्टया तन्त्रैः सकल मतिसन्धाय भुवनं
स्थितस्तत्त्त-सिद्धि प्रसव परतन्त्रैः पशुपतिः ।
पुनस्त्व-न्निर्बन्धा दखिल-पुरुषार्थैक घटना-
स्वतन्त्रं ते तन्त्रं क्षितितल मवातीतर-दिदम् ॥ ३१ ॥

64 தந்திரங்களும் ஸ்ரீவித்தையும் [ஸர்வ வசீகரம்]

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம் 
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: |
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா 
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் || 31 ||

அம்மா!, பரமசிவன் பலவிதமான ஸித்திகளைத் தரக்கூடிய 64 தந்திர சாஸ்திரங்களை உலகிற்கு காண்பித்துவிட்டு விட்டுவிட்டார். ஆனால் உனது நிர்பந்தத்தால் அவரே அந்த 64 தந்திரங்களாலும் அடையக் கூடிய பிறவிப் பயன்களை ஒருங்கே தரவல்ல பஞ்சதசீ என்னும் உன்னுடைய மந்திர-தந்திர சாஸ்திரத்தையும், உபாசனா முறையையும் இவ்வுலகிற்கு அளித்தார்.

இந்த ஸ்லோகத்திலும், அடுத்த ஸ்லோகத்திலும் பஞ்சதசாக்ஷரீ என்னும் ஸ்ரீவித்யா மூல மந்திரத்தை பற்றிச் சொல்கிறார். அதாவது 64 தந்திர சாஸ்திரங்களையும் ஒருங்கே தரவல்லது அம்பிகையின் பஞ்சதசாக்ஷரீ மந்திரம் என்பதாக பொருள். 64 என்பது மிகுந்த சிறப்பானது. இந்த எண்ணானது ஈசனின் திருவிளையாடல்களையும், ஆய-கலைகளையுன் நினைவுக்கு கொண்டு வருவதும். இவை எல்லாம் சமயாசாரத்தில் சொல்லப்பட்ட 64 தந்திரங்களை குறிப்பிடுபவையே. இவை 8-8 ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சுபாகம பஞ்சகம் என்று வசிஷ்ட்டர்,சுகர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர் ஆகிய ஐந்து பேரும் எழுதிய முறை ஒன்றும் இருக்கிறது, இதுவே க்ருஹஸ்தர்கள் அனுஷ்டிக்கத் தகுந்தது.

சது: ஷஷ்ட்யா - 64; தந்த்ரை - தந்திர சாஸ்திரம்; புவனம் - உலகம்; ஸகல - எல்லா; அதிஸ்ந்தாய - நிரப்பிவிட்டு; புன: மேலும்; த்வத்-நிர்ப்பந்தாத் - உன் கட்டாயத்தால்; அகில-புருஷார்த்த-ஏக-கடனா - எல்லா புருஷார்த்தங்களையும் (அறம்-பொருள்-இன்பம்-வீடு); ஸ்வதந்த்ரம்- தரவல்ல; தே தந்த்ரம் - உன் தந்திரம்; இதம் - இந்த; க்ஷிதிதலம் -பூவுலகில்; அவாதீதர - அவதரிக்க

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 63

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • ஸமயாசார தத்பரா 
  • மஹாதந்த்ரா 
  • ஸநகாதி ஸமாராத்யா 
  • ஸ்வதந்த்ரா 
  • ஸர்வதந்த்ரேசீ


catuḥ-ṣaṣṭayā tantraiḥ sakala matisandhāya bhuvanaṃ
sthitastattta-siddhi prasava paratantraiḥ paśupatiḥ |
punastva-nnirbandhā dakhila-puruṣārthaika ghaṭanā-
svatantraṃ te tantraṃ kṣititala mavātītara-didam || 31 ||

The Lord of all souls, Pasupathi,
Did create the sixty four thanthras,
Each leading to only one desired power,
And started he his relaxation..
But you goaded him mother,
To create in this mortal world.
Your thanthra called Sri vidya.
Which grants the devotee,
All powers that give powers,
Over all the states in life.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:31, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1050 -1055 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment