Contact Us

Name

Email *

Message *

Sunday, 21 February 2016

Atmarpanastuti - Sloka 9


किं वा कुर्वे विषमविषयस्वैरिणा वैरिणाहं
बद्धः स्वामिन वपुषि हृदयग्रन्थिना सार्धमस्मिन ।
उक्ष्णा दर्पज्वरभरजुषा साकमेकत्र बद्धः
श्राम्यन्वत्सः स्मरहर युगे धावता किं करोतु ॥ ९ ॥

கிம் வா குர்வே விஷமவிஷயஸ்வைரிணா வைரிணாஹம்
பத்தஸ் ஸ்வாமின் வபுஷி ஹ்ருதயக்ரந்தினா ஸார்த்தமஸ்மின் |
உக்ஷ்ணா தர்பஜ்வரபரஜுஷா ஸாகமேகத்ர பத்த:
ஸ்ராம்யன்வத்ஸ: ஸ்மரஹர யுகே தாவதா கிம் கரோது || 9 || 

முன் சுலோகத்தில் கூறியதை இங்கு விரித்துரைக்கின்றார். ஸுலபமான துக்க நிவ்ருத்தி மார்க்கத்தை அறிந்திருந்தும் நான் துஷ்டத்தனமுள்ள விஷய வாஸனையினால் தோற்கடிக்கப்பட்டவனானேன். பார்ப்பதற்கு ஸுகம் போலவும் இறுதியில் துக்கத்தைத் தருவதுமான இந்திரியார்த்தங்களில் ஆவேசத்துடன் பாயும் அநேக காலவாஸனா ஜடிலமான என் மனம் என்னைத் தூக்கி வாரிக் கொண்டுபோய் அனர்த்தங்களுக்கு உள்ளாக்கி விடுகிறது. நான் என்ன செய்வேன், ஒரு முரட்டுக் காளையுடன் ஒரே வண்டியில் பூட்டப் பெற்ற இளங்கன்று என்ன செய்யும்? காளை மேடுபள்ளம் பார்க்காமல் திமிரிக் கொண்டு அதிவேகமாய் ஓடவாரம்பிக்கும்போது இளங்கன்று எவ்வித பரிதாப நிலையை அடையும்? வாஸனை முடிச்சுக்களேறிய திமிர் கொண்ட என் மனத்துடன் நானும் இச்சரீரமாகிற வண்டியில் கட்டப்பட்டிருக்கிறேன். பலமற்ற நான் (ஜீவன்) துஷ்டவாஸனைகளால் அடக்கவொண்ணாத என் மனம் இழுத்த இடமெல்லாம் பரிதபித்துக்கொண்டே ஒடுகிறேன். என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

kiM vA kurve viShamaviShayasvairiNA vairiNAhaM
baddhaH svAmin vapuShi hRudayagranthinA sArdhamasmin |
ukShNA darpajvarabharajuShA sAkamekatra baddhaH
shrAmyanvatsaH smarahara yuge dhAvatA kiM karotu || 9 ||

What can I do! O Lord, in this body I am bound by the objects of sense which are uncontrollable along with the knots of the heart (the vAsanas). How can a calf, in spite of its best efforts, cope with an extremely haughty bull running very fast when the two are yoked together, O Slayer of Cupid! 



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment