Contact Us

Name

Email *

Message *

Sunday 5 April 2020

Shivananda Lahari - Sloka: 87


பக்தி செலுத்த வைப்பாயாக! | Make me do bhakti


अशलं गरलं फणी कलापो
वसनं चर्म च वाहनं महोक्षः ।
मम दास्यसि किं किमस्ति शंभो
तव पादाम्बुजभक्तिमेव देहि ॥ ८७॥ 

அசனம் கரலம் பணீகலாபோ
வஸனம் சர்ம ச வாஹனம் மஹோக்ஷ: |
மம தாஸ்யஸி கிம் கிமஸ்தி சம்போ
தவ பாதாம்புஜ பக்திமேவ தேஹி || 87 ||

சம்புவே! உனக்கு ஆகாரம், விஷம்; ஆபரணம், பாம்பு; ஆடை, தோல்; வாகனமோ பெரிய காளை. எனக்கு வேண்டியவற்றில் எதை நீ எனக்கு கொடுக்கப் போகிறாய்? என்ன இருக்கிறது? உன் திருவடித் தாமரைகளில் பக்தி செலுத்தும் வாய்ப்பொன்றையே கொடுத்தருள் வாயாக! நஞ்சை உண்டதும், பாம்பை ஆபரணமாக அணிந்ததும், அவற்றிடமிருந்து அடியவர்களைக் காப்பதற்காகவே தான். போகத்தில் பற்றில்லாமையைக் காட்டவே தோல் ஆடை. இந்தக் கோலத்திலுள்ள சிவபிரானைக் கண்ணாரக் கண்டு எனக்கு ஏதேனும் கொடு என்று கேட்க மனமின்றி, நீ உன்னையே உனக்குக் கொடு. நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன். உன் திருவடியில் பக்தி செலுத்த வைப்பாயாக என வேண்டும் நிலையைக் கூறுகிறது இப்பாடல்.

aśanaṃ garalaṃ phaṇī kalāpo
vasanaṃ carma ca vāhanaṃ mahokśaḥ |
mama dāsyasi kiṃ kim-asti śambho
tava pādāmbuja-bhaktim-eva dehi || 87 ||
                       
Oh Lord Shambhu, Your food is poison, 
Your ornaments are the snakes, 
Your clothes are thick hides, 
And your vehicle is the big , majestic bull. 
What are you ever going to offer me, 
That I need out of these? 
What else have you got? 
Please give me only devotion, 
To your lotus like feet. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment