Contact Us

Name

Email *

Message *

Wednesday 24 October 2018

Soundarya Lahari - Sloka: 97


Beneficial Results: 
ஜீவன் முக்தி Jivan Mukti
Leadership, great physical strength.
Erudition, youthful energy and appearance, robust body.

गिरामाहुर्देवीं द्रुहिणगृहिणीमागमविदो
हरेः पत्नीं पद्मां हरसहचरीमद्रितनयाम् ।
तुरीया कापि त्वं दुरधिगमनिःसीममहिमा
महामाया विश्वं भ्रमयसि परब्रह्ममहिषि ॥ ९७॥

நாயகி, நான்முகி, நாரணி வடிவம் [ஜீவன் முக்தி]

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ 
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம் |
துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ || 97 ||

அம்பிகே!, ஆகம ரகஸ்யங்கள் தெரிந்தவர்கள் உன்னை பிரம்மனின் பத்னியான சரஸ்வதியென்றும், மஹாவிஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியென்றும், அத்ரி மஹரிஷியின் புத்ரியான பார்வதீயென்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் நீ இவர்களல்லாத துரீய ரூபமுடையவளும், வர்ணிக்க முடியாதவளும், அடையமுடியாத, எல்லையற்ற மஹிமையுடன் கூடியவளான மஹாமாயா ஸ்வரூபிணியாக, சர்வ ப்ரபஞ்சத்தையும் மோஹிக்கச் செய்து உலகனைத்தையும் ஆட்டுவிக்கிறாய்.

சரஸ்வதீ, லக்ஷ்மி, பார்வதீ என்னும் ரூபங்களைக் கடந்தவள் பராசக்தி. த்ரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரனைக் காட்டிலும் மேலானவரான சதாசிவனுடைய பத்னியாக இருந்துகொண்டு சுத்த வித்யையில் அடங்கிய மஹா மாயா ஸ்வரூபிணியாக ஸகல ப்ரபஞ்சங்களையும் வழிநடத்துகிறாள் என்கிறார் பகவத் பாதர். 'நிஸ்ஸீம மஹிமா' என்பதற்கு கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்டவள் என்று பொருள்.

த்ருஹிண க்ருஹிணிம் - பிரம்மாவின் பத்னி; கிரமாஹுர் தேவீம் = கிராம் தேவீம் - வாக்தேவியான சரஸ்வதி; ஹரே: பத்நீம் - விஷ்ணு பத்னியான லக்ஷ்மி; ஹரஸசரீம் அத்ரி தநயாம் - ருத்ரனுடைய பத்னியான பார்வதி; ஆகமவித: ஆகம ரஹஸ்யங்கள் அறிந்தவர்கள்; ஆஹு: - சொல்கிறார்கள்; த்வம் - நீ; துரீயா - இவர்களல்லாத; காபி - வர்ணிக்க இயலாத; துரதிகம நிஸ்ஸீம மஹிமா - அடையமுடியாத எல்லையற்ற மஹிமைகளுடன் கூடியவளாய்; மஹாமாயா - மஹா மாயா ஸ்வரூபிணியாக; விச்வம் ப்ரமயஸி - சர்வ லோகங்களையும் ஆட்டுவிக்கிறாய்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 50

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • வைஷ்ணவீ
  • விஷ்ணுமாயா 
  • சிவப்ரியா
  • சிவபரா 
  • உமா 
  • சரஸ்வதீ
  • சாஸ்த்ரமயீ
  • வாகதீச்வரி
  • சதுர்வக்த்ர மனோஹரா 
  • மஹாமாயா
  • துர்யா
  • விச்வப்ரமண   காரிணீ

girāmāhu-rdevīṃ druhiṇagṛhiṇī-māgamavido
hareḥ patnīṃ padmāṃ harasahacarī-madritanayām |
turīyā kāpi tvaṃ duradhigama-nissīma-mahimā
mahāmāyā viśvaṃ bhramayasi parabrahmamahiṣi || 97 ||
Many poets reach the Goddess of learning,

Oh , Parashakthi who is one with Parabrahma,
Though those who have learned Vedas,
Call you as Brahma’s wife Sarawathi,
Or call you as Vishnu’s wife Lakshmi,
Or call you as Shiva’s wife Parvathi,
You are the fourth called Maha Maya,
Who gives life to the world,
And have attained all that is to attain.



Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:97 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment