Contact Us

Name

Email *

Message *

Sunday 17 December 2017

Soundarya Lahari - Sloka: 76


Beneficial Results: 
காமஜயம் Victory over desire/lust
Activation of manipoorka chakra and anahatha chakraKnowledge of the self, success in financial and legal affairs.


हरक्रोधज्वालावलिभिरवलीढेन वपुषा
गभीरे ते नाभीसरसि कृतसङ्गो मनसिजः ।
समुत्तस्थौ तस्मादचलतनये धूमलतिका
जनस्तां जानीते तव जननि रोमावलिरिति ॥ ७६॥

மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு 
[பரம வைராக்யம்; காமஜயம்]

ஹரக்ரோதஜ்வாலா-வலிபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா |
ஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி || 76 ||

பார்வதி!, பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது, அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர்.

உடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம். ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில்நீரை தெளிக்கையில் புகை கிளம்பும். அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார்.

அசலதநயே - பார்வதி தேவியே; மநஸிஜ: மன்மதன்; ஹரக்ரோத ஜ்வாலாவலிபி: - பரமசிவனது கோபாக்னி ஜ்வாலையினால்; - அவலீடேந் வபுஷா - சூழப்பட்ட உடலுடன்; கபீரே - ஆழமான; தே நாபீஸரஸி - உன்னுடைய நாபியாகும் மடுவில்; க்ருதஸங்க: - முழுகினான்;தஸ்மாத் - எரிகின்ற அவனது உடல் உனது நாபி என்னும் ஸரஸில் விழுந்தவுடன்; தூம லதிகா - புகையானது கொடிபோல; ஸமுத்தஸ்தெள - கிளம்பியது; தாம் - அதை; ஜநநி - தாயே; தவ ரோமாவளிரிதி - உன்னுடைய ரோமாவளியாக; ஜாநீதே - வர்ணிக்கிறார்கள்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 33

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • நாப்யாலவாலரோமாலி   லதாபலகுசத்வயீ
  • லக்ஷ்யரோம  லதாதாரதா  ஸாமுந்நேய  மத்யமா

harakrodha-jvālāvalibhi-ravalīḍhena vapuṣā
gabhīre te nābhīsarasi kṛtasaṅo manasijaḥ |
samuttasthau tasmā-dacalatanaye dhūmalatikā
janastāṃ jānīte tava janani romāvaliriti || 76 ||

Oh daughter of the mountain,
The God of love who is the king of the mind,
Being lit by the flame of anger of Shiva,
Immersed himself in the deep pond of thine navel.
The tendril like smoke emanated from there,
And mother, people think,
That this is the line of hair,
That climbs from your navel upwards.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment