பெரியது எது WHICH IS THE BIGGEST?
asks Lord Muruga to Tamil Poet and Siddha Avvaiyar...She replies
பெரிது பெரிது புவனம் பெரிது;
Earth is Bigger
புவனமோ நான்முகன் படைப்பு;
Earth is created by Lord Brahma
நான்முகனோ கரியமால் உந்தியில் வந்தோன்;
Lord Brahma emerged from Lord Vishnu's navel
கரியமாலோ அலைகடல் துயின்றோன்;
Lord Vishnu sleep in the Ocean,
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
Ocean is trapped in the Kamandal of Sage Agastya
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
Sage Agastya was born from Kalash
கலசமோ புவியிற் சிறு மண்;
Kalash is made up of a small portion of the earth
புவியோஅரவினுக்கு ஒருதலைப் பாரம்;
Earth is a load on one of the thousand heads of snake Adisesha
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
The snake is a ring in the little finger of Goddess Uma
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
Goddess Uma is part of Lord Shiva
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
Lord Shiva is part of His devotees
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!
The glory of devotees is the greatest to say