Contact Us

Name

Email *

Message *

Wednesday, 18 January 2017

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் (ஆங்கரை பெரியவா)


ஸ்ரீ மஹாபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டு நம் தெய்வ மத புராணங்களுக்காக தம் வாழ்வையே அர்பணித்த ஒரு மஹான் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்ற ஞான தபோதனர் ஆவார் (ஆங்கரை பெரியவா என்றும் திருவல்லிக்கேணி பெரியவா என்றும் பக்தர்களால் அறியப்படுபவர்) பூர்வாஸ்ரமத்தில் கல்யாணராம பாகவதர் என்று அழைக்கப்பட்ட அந்த மஹான், மஹாபெரியவாளின் உத்தரவின் பேரில் தம் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், மூல பாராயணமும் ப்ரவசனமும் செய்து வந்தார். பணம், புகழ், கெளரவம் எதையும் எதிர்பாராது பகவானை பாடுவதையே தம் கடமையாக உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தார்.

மஹாபெரியவாள், ஸ்வாமிகளை ஒவ்வொரு வருடமும் கோகுலாஷ்டமியை ஒட்டி தாம் இருக்கும் இடத்திற்கு வந்து, பாகவத சப்தாஹம் செய்யப் பணித்து, தானே அமர்ந்து மணிக் கணக்காக பாராயணத்தையும் ப்ரவசனத்தையும் கேட்டு ‘படனம் மதுரம் பிரவசனம் மதுரதரம். சப்தாஹம் மலை போன்ற காரியம். பாகவதருக்கு தான் சிரமம். நமக்கெல்லாம் ஆனந்தம்’ என்று கொண்டாடினார் என்றால் ஸ்வாமிகளின் மஹிமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வந்த எல்லோருக்கும் “இடைவிடாது ராம நாம ஜபம் பண்ணுங்கள். அது ஒன்றே உங்களுக்கு பக்தி, விரக்தி, ஞானம் அளித்து முக்தி அளிக்கும்” என்று சொல்வார். அதற்கு அவர் மஹாபெரியவாளின் இந்த கீழ்கண்ட அருள்வாக்கை அடிப்படையாக கொண்டிருந்தார்.

“நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” னு, நாமத்தை சொல்லிண்டு இருந்தா போறும்னுட்டு, ஒரு கோடி காட்டி இருக்கா பெரியவா எல்லாரும். போதேந்த்ராள் “நீ பெரிய பரம பக்தனா இருந்தாலும் சரி, ப்ரபத்தி பண்ணினவனா இருந்தாலும் சரி, பெரிய நீ ஞானியா இருந்தாலும் சரி, ப்ரம்ம ஸாக்ஷாத்காரம் அடைஞ்சு ஸமாதியிலே நிஷ்டனா இருந்தாலும் சரி, எல்லாம் இருந்தாலும், இந்த இதுல உனக்கு ருசி, இது ஊறி, ஊறி, ஊறி, இந்த அம்ருதத்தை நீ பானம் பண்ணாத போனா, அதெல்லாம் ஒண்ணும் பிரயோஜனப் படாதுன்னுட்டு, கடைசீல தீர்மானம் பண்ணி, அவ்வளவும் இந்த ரெண்டு நாமா, ரெண்டு எழுத்து இருக்கும்படியான ராம நாமாவோ, ஶிவ நாமாவோ எதை வேணா வெச்சுக்கோ, அப்படினுட்டு, அந்த ரெண்டு எழுத்து இருக்கே அந்த ரெண்டு எழுத்துக்கு நிறைய கிரந்தங்கள் எழுதி, இந்த ரெண்டு தான் தாரகம்னு, தாரகம்னா உன்னை தாண்ட விடறது, பாபத்துலேர்ந்து தாண்ட விடறது, ஸம்ஸாரத்துலேர்ந்து, துக்கத்துலேர்ந்து தாண்ட விடறது. துக்கத்துலேர்ந்து தாண்ட விட்டாலும் சரி, வராது போனாலும் சரி, பாபத்துலேர்ந்து தாண்ட விட்டா போறும் நமக்கு.

“அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” னு, உனக்கு உனக்கு துக்கம் வராம இருந்ததானா, ஆபத்து வராம இருந்தா துக்கம் நிவர்த்தி ஆகும்னு சொல்றதுக்கில்லை. நீ பாபம் பண்ணாம இருந்தாலே உனக்கு போறும். எத்தனை ஆபத்து வந்தாலும் ஒனக்கு துக்கம் வராது உனக்கு. “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” உன்னுடைய பாபத்துலேர்ந்து உனக்கு மோக்ஷத்தை உண்டு பண்ணிடறேன். “மா ஶுச:” அப்பத்தான் உனக்கு சோகம்கிறது வராது.

அப்பேற்பட்ட தாரக நாமத்தை, போதேந்த்ராள் நாம ஸித்தாந்தம் பண்ணி, அதை அனுசரிச்சு ஐயாவாளும், ஐயாவாள் ஶிவ நாமத்தை பத்தி விசேஷமாச் சொல்லி, அப்படி கொஞ்சம் மனசு லயிக்கும்படியான ஒரு மார்கத்துல பகவன் நாமாவை சொல்லிண்டு இருந்தோமானா, அது கொஞ்சம் பஜன, பத்ததினுட்டு, அந்த மாதிரி ஸம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு. அதான்

“ஸததம் கீர்தயந்தோ மாம்” “போதயந்த: பரஸ்பரம்” னு மூலத்துலேயே “அப்பா, சொல்லிண்டு இரு. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு இரு. பத்து பேரா சேர்ந்து கோஷ்டி கானம் பண்ணு.” இப்படியெல்லாம், இப்படியெல்லாம் கொஞ்சம் ஸாதகம் அதுக்கு. எதானும் மருந்து சாப்படறதுக்கு, எதானும் கொஞ்சம் ஒரு ஸஹாயம் ஒரு திதிப்பு, கிதிப்பு, அது, இது குடுக்கற மாதிரி, பகவன் நாமாவுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட இருந்தா, கொஞ்சம் சுலபமா பகவன் நாமாவை, நாம வந்து அந்த அம்ருதத்தை அனுபவிக்க முடியும்கிறத்துக்காக, வேறொண்ணும் வேண்டாம் உனக்கு. அது ஒண்ணு வெச்சுக்கோ.

கடைசீ ஸித்தாந்தம் “நாக்கு இருக்கு, இரண்டு எழுத்து இருக்கு. சொல்லிண்டே இரு முழுக்க. அது ஒண்ணு உன்னை எல்லாத்தையும் தாண்டி விட்டுடும். இது, இது பாக்கி எல்லாம் எவ்வளவு பண்ணுமோ அவ்வளவு பண்ணிடும் இது. ஏதோ நம்மால முடிஞ்சதை வேண்டாம்னு சொல்ல வேண்டாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல கார்யங்கள் ல்லாம் பண்ணிண்டு இருப்போம். பாக்கி பக்தியோ, ஞானமோ, ஶரணாகதியோ, கர்மானுஷ்டானங்களோ இதெல்லாம் பண்ணுவோம். பண்ணாலும், அதுலேர்ந்து, நமக்கு வேறொண்ணும் அதிகாரம் இல்லியே, இது ஒண்ணு இருக்கட்டும் நமக்குன்னு, இது ஒண்ணை கெட்டியா, குரங்கு பிடியா பிடிச்சினுடு, இந்த பகவன் நாமாவை. அப்படின்னு உபதேஶம் பண்ணி, அதை ஸித்தாந்தம் பண்ணினவாள்,போதேந்த்ராள்னு கடைசீ ஆச்சார்யாள் முந்நூறு வருஷத்துக்கு முந்தி பண்ணினார்.

அவாளுடைய அனுசரிச்சு ஐயாவாள்னுட்டு அவாளும் நிறைய்ய பக்தி பண்ணி, அவாளுக்கு இப்ப கார்த்திகை அமாவாசையில தான் அவாளுடைய கங்கை வந்துது அவாளுக்குனு திருவிசைநல்லுர்ல அந்த உத்ஸவம் அவாளுக்கு. அதுக்கப்பறம் ஸத்குரு ஸ்வாமிகள்வாள்னு மருதாநல்லூர்ல அதை அனுஷ்டானத்துக்கு கொண்டு வந்து, எப்பவும் அந்த உஞ்சவ்ருத்தி, உஞ்சவ்ருத்தி அதுக்கப்பறம் பகவன் நாமா, அந்த கீர்த்தனைகள், அந்த உத்ஸவங்கள், அவாளுடைய போதேந்த்ராளுடைய பாதுகையை ஆராதனை பண்றதுன்னு, அந்த ஸம்ப்ரதாயத்துல, ஒரு க்ரமம் ஒண்ணு, மடம் ஒண்ணு, அதுலேர்ந்து, அந்த பகவன் நாம ஸித்தாந்ததுக்காகனுட்டு, போதேந்த்ராள் பிரதான ஆச்சார்யாளாகவும், ஐயாவாளும், அதுக்கப்பறம் அனுஷ்டான ஸத்குரு ஸ்வாமிகள், அப்படி ஒரு பரம்பரை. இந்த போதேந்த்ராள், ஐயாவாள், ஸத்குரு ஸ்வாமிகள், இவாளோட பேரோடதான் இந்த பஜனை பத்ததில பஜனை சொல்றப்ப, இவா மூணு பேருடைய ஶ்லோகங்கள், மூணு பேருடைய கீர்த்தனைகள், இதெல்லாம் சொல்லிட்டு தான் எல்லோரும் பகவன் நாம பஜனை பண்றது, பஜனை பண்றதுங்கற ஸம்ப்ரதாயமானது ஏற்பட்டு இருக்கு.

ஆகையினால நாக்கு இருக்கு. நாமம் இருக்கு. அப்பறம் பயம் ஏது?

வடக்க உத்தர தேஶத்துல இந்த பஜனைங்கறது, கிருஷ்ண சைதன்ய மஹா ப்ரபுனுட்டு அவர் வங்காளத்துலயும், ஒரிஸ்ஸாவிலயும், அந்த பஜனை பத்ததி ரொம்ப விசேஷமா அங்க ஏற்பட்டது. நம்ம தஷிண தேஶத்துல ஏற்பட்டது, போதேந்த்ராளுடைய அனுக்ரஹம், போதேந்த்ராள், ஐயாவாள் ஸத்குரு ஸ்வாமிகள், இந்த க்ரமத்துலேர்ந்து நம்ம தஷிண தேஶத்துல பஜனை சம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு. வடக்க இருக்கற அந்த பஜனை பத்ததிகளும் நாம் சேர்த்துக்கறது உண்டு, அவாளும் எல்லாம் பகவன்நாமா தானே. அதனால அவாளுடைய கிரமமும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துண்டு பண்ணிண்டு இருக்கறது. கொஞ்சம் இதே மாதிரி பஜனை, அந்த மாதிரி பண்றது மகாராஷ்ட்ரத்துல அவாளும் துக்காராம் அவாளெல்லாம் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அங்கேர்ந்து உத்தர தேஶத்துல மீராபாய் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அந்த சைதன்ய மஹா ப்ரபு தான் உத்தர தேஶத்துல நிறைய பஜனை பத்ததி ஏற்படுத்தி இருக்கார். அந்த வாசனை அடிச்சு தான் நம்ம தேஶத்துலயும், இங்கேர்ந்து பஜனை பத்ததினுட்டு, இருந்தாலும் ஸ்வதந்தரமா இவா ரெண்டு மூணு பேர் மஹான்கள், நம்ம தக்ஷிண தேஶத்துலேயே அவதாரம் பண்ணி, அவா ஸன்யாசிகளா போதேந்த்ராள், க்ருஹஸ்தாளா ஐயாவாள், இவா பாகவத ஸம்ப்ரதாயமா ஸத்குரு ஸ்வாமிகள்வாள் அவா மூணு பேரும் இந்த மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கா.

ஆகையினால பகவன் நாமாங்கிறது சுலபம் நமக்கு. எப்ப நாம வேணும்னாலும் அத உபயோகப்படுத்திக்கலாம். நமக்கு ரொம்ப ஸுலபமான உபாயம். நம்ம மதத்துல எல்லாம் கஷ்டமா இருக்கே, கடினமா இருக்காப்பல இருக்கே, யோகம், யோகம், த்யானம், ப்ராணாயாமம்னு பெரிய கடினமானா இருக்கு நம்முடைய மதத்துல அப்படீன்னு நமக்கு ஸந்தேஹமா இருந்ததானா, இதைக் காட்டிலும் ஸுலபமான வழியே கிடையாதுங்கறதும் நம்ம மதத்துலதான் இருக்கு. அதுனால எல்லாம் என்ன பிரயோஜனமோ அந்த பிரயோஜனம் இதுனால ஸுலபமா வந்துடும் அப்படினுட்டு. ஆனா அதுகள்ல ஒரு அலக்ஷிய புத்தியா, அது தப்பு, இது தப்புனு,வெஸ்ஸிண்டு மாத்திரம் இருக்காதே. வெஸ்ஸா இந்த நாமம் போய்டும். அப்படினுட்டு நாமத்துலேர்ந்து பகவதனுக்ரகம் வீணாபோயிடும். ஒண்ணையும் வையாதே நீ. அந்தந்த மார்கங்கள் சரி. நமக்கென்னமோ நாம ரொம்ப அல்பம், நமக்கு இதுதான் னு ரொம்ப humble ஆ இருந்துக்கோ. அப்போ உனக்கு, இது உன்னை கடைத்தேறி விட்டுடும்.

அப்படீங்கற அது தான் “நாம அபராதா: தச” னுட்டு “நாமாஸ்தீதி நிஷித்த கர்ம விஹித த்யாகோ” னுட்டு ஸத்கர்மாவை விடறது, கெட்ட கார்யத்தை செய்யறது இதெல்லாம் பண்லயா, பண்ணிடறேன் நான், நாமா தான் இருக்கே அப்படின்னு அந்த எண்ணத்துக்கெல்லாம் அஹம்பாவத்தோட போகாதே. எல்லாத்துக்கும் அடி, கீழ் படியில இரு நீ. அதெல்லாம் அவாளெல்லாம் பெரிய மஹான்கள். குடுத்து வெச்சவா. நமக்கு கதியில்லையே, நாம இந்த வழியிலே போறோம் அப்படின்னு நினச்சுக்கோ நீ, அப்படீன்னுட்டு,

“அந்த மாதிரி எல்லாம் பகவன்நாமா தான். ஆரக்கண்டாலும் நாமாவைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உன்னுடைய க்ஷேமத்தை அடை” அப்படிங்கற மார்கத்தை போதேந்த்ராள் உபதேஶம் பண்ணி அந்த மாதிரி அனுக்ரஹம் பண்ணி இருக்கா.

நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா


ஸ்ரீ ஆங்கரை பெரியவா 19.01.2004 துவாதசி அன்று மறைந்தார். திருச்சி அருகே கரூர் செல்லும் வழியில் பழூர் அக்ரஹாரத்தில் அதிஷ்டானம் உள்ளது.

No comments:

Post a Comment