Contact Us

Name

Email *

Message *

Thursday 17 March 2016

Bhaja Govindaṁ - Verse 30


प्राणायामं प्रत्याहारं
नित्यानित्य विवेकविचारम् ।
जाप्यसमेत समाधिविधानं
कुर्ववधानं महदवधानम् ॥ ३०॥

प्राणायाम, उचित आहार, नित्य इस संसार की अनित्यता का विवेक पूर्वक विचार करो, प्रेम से प्रभु-नाम का जाप करते हुए समाधि में ध्यान दो, बहुत ध्यान दो.

prāṇāyāmaṁ pratyāhāraṁ 
nityānitya vivekavicāram |
jāpyasameta samādhividhānaṁ 
kurvavadhānaṁ mahadavadhānam || 30 ||

Regulate the prANa-s, life forces, remain unaffected by external influences and discriminate between the real and the fleeting. Chant the holy name of God and silence the turbulent mind. Perform these with care, with extreme care.

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேகவிசாரம் |
ஜாப்யஸமேத ஸமாதிவிதானம்
குர்வவதானம் மஹதவதானம் || 30 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

பிராணாயாமம், வெளி நாட்டத்தினின்று இந்திரியங்களைத் திருப்புதல், எது அழிவது, எது அழியாதது என்று ஆராய்ந்து அறிதல், ஜபத்துடன் சமாதி ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் செய்வாயாக.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

ஆசையை அடக்கிவிடு
அச்சமதை விட்டுவிடு
ஐந்துபுலன் வென்று விடடா!

ஆடுமனக் கோவில்தனைக்
கூடுவரை காத்துநின்று
ஐயனை நினைத்துக் கொள்ளடா!

ஓசையின்றி மூச்சடக்கி
உண்மையோடு பொய்யுணர்ந்து
உத்தமப் பயிற்சி செய்யடா!

உள்ளமெனும் மெய்ப்பொருளை
ஓர்நிலையி லேநிறுத்தி
உற்சவனைக் கண்டு கொள்ளடா!

பாசமென நேசமெனப்
பரமனவன் நின்றிருக்க
பார்முழுவதும் தேடும் நெஞ்சமே!

பார்த்தனுக்குத் தேர்நடத்தி
கீர்த்திதந்த மாயவனைப்
பக்தியுடன் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment